சினிமா - நிழலா? நிஜமா? - அருண் மோ

ஃபிலிம் என்கிற விஞ்ஞான கண்டுபிடிப்பு தமிழ்நாட்டில் இன்னமும் ஃபிலிம் என்கிற நிலையிலேதான் இருக்கிறது. விஞ்ஞான கண்டுபிடிப்பான ஃபிலிம் என்கிற வார்த்தை எப்போது சினிமா எனும் கலையாக மாறுகிறது? இந்த ஒரு கேள்விக்கான விடையை கண்டுபிடித்திருந்தால், தமிழ் சினிமா எப்போதோ அதன் உச்சத்தை தொட்டிருக்கும். ஆனால் இங்கே இன்னமும் நாம் ஃபிலிம்தான் எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஃபிலிம் எனும் கச்சாப்பொருள் வழியே உருவங்களை பதிவு செய்து, வசனங்களின் வழியாக கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறோம். நல்ல சினிமா எடுக்க முயற்சிப்பதுக் கூட இல்லை. வெவ்வேறு காலக் கட்டங்களில் தமிழ் சினிமா புதிய ட்ரெண்டை நோக்கி நகர்ந்திருக்கிறது. இப்போது நிறைய இளம் இயக்குனர்கள் புதிது புதிதாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள், போன்ற வாதங்களை நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் அதே வாதம் தொடங்கியிருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிய அலை வீசத் தொடங்கியிருக்கிறது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
தமிழகக் காளியும் மகாராஷ்டிர ஜபயாவும் - யமுனா ராஜேந்திரன்

தலித் அரசியல் தொடர்பான இரண்டு தரவுகளை இங்கு தொகுத்துக் கொள்வோம். ஓன்று, தமிழக தலித் அரசியல் கட்சிகள் என்பன இங்கு தத்தமது சாதி அரசியல் கட்சிகளாகத்தான் இருக்கின்றன. அம்பேத்கர் பேசிய சாதிய ஒடுக்குமுறையிலிருந்தான விடுதலை என்பது தேர்தல் அரசியலில் இரண்டாம் இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. இரண்டாவது, அம்பேத்கரிய அரசியல் என்பதனை படித்த நடுத்தரவர்க்க தலித் அறிவுஜீகள், கூலி உழைப்புத் தொழிலாளர்கள், பொருளாதார மட்டத்தில் கடைக்கோடி நிலையிலிருப்பவர்கள் என வேறு வேறு சமூக மட்டத்தலிருப்பவர்களால் வேறு வேறு விதமாகத்தான் வியாக்யானம் செய்கிறார்கள்.

  மேலும் படிக்க
 
 
Form Is Beauty - இயக்குனர் மிஸ்கின் - தினேஷ்


என்னைப்பொறுத்தவரை, சினிமாவின் மொழிகளில் ஒரு இயக்குனருக்கு அதிகமாக உதவி செய்வது அந்தப் படத்தில் பின்பற்றப்படுகின்ற மெளனம் தான். இந்த மெளனத்தை இந்த உலகத்திற்கு கற்றுக்கொடுத்தது பெளத்தம். இந்த பெளத்தம் தான் ஜப்பானும் கொரியாவும். இதுதான் நான். ஆகையால் ஒரு ஜப்பான் சினிமாவிற்கு முந்தியும், ஒரு கொரிய சினிமாவிற்கு முந்தியும் இந்திய சினிமாவிற்கு முந்தியும் ”பெளத்தம்”, என்ற ஒன்று இருந்தது. மெளனத்தை, நான் பெளத்த மதத்தின் வாயிலாக கற்றுக்கொண்டேன். என்னுடைய கதாபாத்திரங்கள் நடப்பது, என்னுடைய கதாபாத்திரங்களின் உடல் மொழி, என்னுடைய கதாபாத்திரங்கள் அமைதியாக இருப்பது, எல்லாமே, நான் பெளத்தத்தில் இருந்துதான் கண்டுபிடித்தேன்.



  மேலும் படிக்க
       
 
 
”மதயானைக்கூட்டம்” ஒரு வஞ்சப்புகழ்ச்சி - இயக்குநர் விக்ரம் சுகுமாரன் - தினேஷ்

அழகியல் என்பதைக்காட்டிலும் ஒரு படமாக எப்படி எடுக்கப்படவேண்டும் என்பதற்கு உதாரணம் பாலுமகேந்திரா தான். இன்னமும் சொல்லப்போனால் நான் நினைத்த விஷயங்களை அப்படியே அந்த மண்ணிற்கே உரிய வறட்சியுடன் தான் சொல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால், ஒளிப்பதிவாளர் மற்றும் இன்னும் சில நண்பர்களுடன் பேசுகின்ற பொழுது சில உபயோகமான தகவல்கள் சொன்னார்கள். ஆரம்பத்திலேயே மரணத்தைக் காட்டுகிறோம். தொடர்ந்து மரணங்கள் சார்ந்த கதையாகத்தான் இருக்கிறது. எனவே முதல் சாவை ஜாலியாக பாட்டும் கூத்துமாக எடுத்துவிடுங்கள், அப்பொழுதுதான் படம் நன்றாகயிருக்கும் என்றார்கள்.

  மேலும் படிக்க
 
 
’முழுமையான தலித் சினிமா இங்கு சாத்தியமில்லை’- இயக்குனர் பா. ரஞ்சித் - விக்னேஷ் சேரல்

குறியீடுகள் சார்ந்த கலையம்சமாகத்தான் இந்தப்படம் முழுவதையும் நான் செய்திருக்கிறேன். வெளிப்படையாக ஒரு சினிமாவாக, main strean ஆக, எல்லோருக்கும் எளிதில் சென்று சேரக்கூடியதுமான, சினிமாவாக இருந்தாலும், இந்தப்படத்தை எடுத்துக்கொண்டால் தேவையில்லாத ஷாட்ஸ்கள் கிடையாது. நிறைய விஷயங்கள் முன்கூட்டியே முடிவுசெய்துதான் வேலை பார்த்திருக்கிறோம். அதன் வடிவமுமே வழக்கமான கமர்ஷியல் பாணியில் வந்துவிடக்கூடாது என்று நினைத்துதான் வேலைபார்த்திருக்கிறோம். ஏதும் வித்தியாசமான கோணங்களோ, காட்சிகளோ வைக்க கூடாது. அந்தக் காட்சிக்கான பொருளின் வெளிப்படுத்தன்மையை....


  மேலும் படிக்க
   
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
குறும்படம் இயக்கியது உதவினாலும் படப்பிடிப்பு தளத்தில் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் - சரவணன்

கேட்கும் போதே வித்தியாசமாய் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்கிறான். அந்த கேள்விக்கான பதிலையே அந்த காவலர் அவனிடம் சொல்கிறார். அது கதாபாத்திரத்திற்கான மிகைப்படுத்துதல் கிடையாது. கதை சொல்வதில் வசனத்தின் பங்கு என்பது முக்கியமானது. அதற்காக பக்கம்பக்கமாக வசனம் பேசுவது என் படத்தில் இல்லை. கொலையை பற்றி எதையுமே அறியாதவர்கள் அங்கு நடப்பதை கேட்கிறார்கள் என்றால் அப்படித்தான் பேசிக்கொள்வார்கள். இது மனித இயல்பு. இரண்டு பேர் கிரிக்கெட் commentary பார்க்காமல் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் விக்கெட் விழும் நேரத்தில் அவர்களும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்.

  மேலும் படிக்க
 
 
நம்மை ஒருபடியாவது மனதளவில் உயர்த்தும் படங்களை எடுக்க வேண்டும - இயக்குனர் பாலாஜி தரணிதரன் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

ஒரு படத்த பார்த்தா, ஒரு கதையை படிச்சா, கொஞ்ச நேரம் அது நம்மள மனிதனா உணர வைக்குதுல. அதுதான் ஒரு சிறந்த படைப்பு. உதாரணத்திற்கு ‘அப்பாவிடம் எப்படிச் சொல்வது?’ என்ற அசோகமித்திரனின் ஒரு கதை. ஒரு சாதாரண மனிதனாக நம்மை உணர வைக்கும். அது படித்த கொஞ்ச நேரத்திற்கு, இன்னொரு மனிதன் மேல் கோபப்படவே தோன்றாது. நம்மை நமக்கே உணர வைத்து, நமக்குள் இருக்கும் மனிதத்தை வெளியே கொண்டு வருவதுதான் சிறந்த படைப்பு. அதற்கு தடையாக இருக்கும் அத்தனை விஷயங்களில் இருந்தும், சினிமா மாற வேண்டும். அதை நோக்கி செல்ல வேண்டும். நல்ல கலை என்ற ஒன்று இல்லையென்றால், நம் உணர்வுகள் மழுங்கிப்போய் விடுமோ என்றே தோன்றுகிறது.




  மேலும் படிக்க
       
 
 
மதுபானக்கடைகளுக்கு எதிரான படமே “மதுபானக்கடை” - இயக்குநர் கமலக்கண்ணன் - காளிமுத்து

A சான்றிதழ் வழங்கப்பட்ட படத்திற்கு தொலைக்காட்சி உரிமம் மறுக்கப்படுகிறது, படத்தின் வணிகத்தில் இது முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. ஆனால் தொலைக்கட்சியில் வரும் நிகழ்ச்சிகள் மிகவும் மோசமானதாக இருக்கின்றன. மது இல்லாத, காமம் சம்மந்தமான படத்துக்கு A சான்றிதழ் வழங்கினாலும், இன்றைக்கு தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுவதைவிட சினிமாவில் காமம் குறைவாகத்தான் இருக்கிறது. இங்கே சினிமாவுக்கு ஒரு சட்டம், தொலைக்காட்சிக்கு ஒரு சட்டம் என்ற வேறுபாடுகள் நிலவுகிறது.

  மேலும் படிக்க
 
 
மூடர் கூடம் என் குழந்தை. அதனுள் பாயும் குறுதி என்னுடையது. அதன் மரபணுக்கள் என்னுடையது - இயக்குனர் நவீன் - ஜெயகாந்தன்

இன்னும் எனக்கே தெரியாமல் இதில் 100 வேர்கள் இருக்கும், தெரிந்தும் இருக்கிறது. ஆனால் அவையாவும் எனக்குள் சென்று என் ஆன்மாவில் இருந்து வெளிப்பட்டதே மூடர்கூடம். பொம்மை முன்கதை, நாயின் முன்கதை இவை எந்த உலக திரைப்படங்களிலும் எனக்கு தெரிந்து இல்லை. நீங்கள் கண்டுபிடித்துச் சொல்வது என்றால் இன்னும் நூறு படங்களைக்கூடச் சொல்லலாம். மூடர்கூடம் first draft எழுதி முடிக்கும்வரை நான் ‘attack the gas station’ என்ற படத்தை பார்த்ததே இல்லை. எழுதி முடித்துவிட்டு ஸ்கிரிப்டை மேன்படுத்துவதற்காக ஒரு அறைக்குள் நடக்கும் படங்கள் என்ன என்று தேடிப் பார்த்ததில் பல படங்கள் பார்த்தேன்.



  மேலும் படிக்க
   
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
மாற்று பாடங்கள் என்ற ஒன்று இல்லை - இயக்குனர் வினோத் - ஐயப்பன்

அஜித், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணத்தான் வருகிறோம், ஆனால் அப்படி முதல் படம் பண்ணுவது ரொம்ப கடினம் .ரொம்ப அரிதாகவே முதல் படம் இயக்கும் வாய்ப்பே கிடைக்கிறது.ரொம்ப பெரிய ஹீரோக்கள் பக்கம் போகாமல் மிடில் ஹீரோக்களை வைத்து படம் பண்ணலாம்னு தீர்மானித்தேன். அந்த நேரத்தில்தான் குறும்பட இயக்குனர்களின் வருகை நிகழ்ந்தது. ”பிட்சா”, ”நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” போன்ற படங்களின் வெற்றி ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது, ஐம்பதுலட்சத்தில் கதை , ஒரு கோடியில் கதை சொல்லுங்கள் என்று புதிய தயாரிப்பாளர்கள் அழுத்தம் கொடுக்க தொடங்கினார்கள்.


  மேலும் படிக்க
 
 
'நான் யோசித்த என்னுடைய கதையை எந்தவொரு மாற்றமும் செய்ய விடமாட்டேன்' - இயக்குனர் ரமேஷ் - அருண் தேவா

இந்த மாதிரியான வார்த்தைகள் எல்லா மொழி படங்களிலும் உபயோகிக்கப்படுகிற சொல்லாடல்கள்தான். தெலுங்கு, ஹிந்தி, பெங்காளி என இந்த பிரிவினைகள் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால் எந்தவொரு பார்வையாளனுக்கும் இது ஒரு வணிகப்படம் இது ஒரு கலைப்படம் என்ற எந்த வித பாகுபாடும் தெரியாது. அவனுக்கு தேவையானது எல்லாம் இந்த படம் அவனுக்கு நிறைவை தரவேண்டும். அப்படி பிரித்துக் கொள்கிற பார்வையாளர்களும் இங்கு கிடையாது, ஏனென்றால் இங்கிருந்து தூத்துக்குடியில் இருக்கும் ஒரு தியேட்டருக்கு சென்று ஒரு ரசிகனை அழைத்து இது என்ன படம் என்று ஒரு நான்கு பாகுபடுகளாக பிரித்து கேட்டீர்களென்றால் சிறிதுநேரம்.


  மேலும் படிக்க
       
 
 
முன்னோடிகள் இல்லாததே பிரச்சனை - தயாரிப்பாளர் சி.வி.குமார் - யுகேந்தர்

நிச்சயம் சாத்தியம். நடந்துக்கொண்டும் இருக்கிறது. அதை புரிதலோடு செய்ய வேண்டும் என்றே நான் சொல்லுகிறேன். என்னுடைய இலக்கு என்ன என்பதை பொருத்துதான் என்னுடைய வழி முடிவாகும். இலக்கு தான் பாதையை தீர்மானிக்கிறது, பாதை இலக்கை தீர்மானிக்காது. வணிக சினிமாவின் அத்தனை இன்பங்களும் வேண்டும் ஆனால் நான் மாற்று சினிமா எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களால் மாற்று சினிமாவை எடுக்க முடியாது. வணிக சினிமாவில் பேர் கிடைக்கிறது, புகழ் கிடைக்கிறது, பணம் கிடைக்கிறது, ஆறு மாதத்தில் 50 லட்சம் சம்பளம் அடுத்த ஆறு மாதத்தில் 2 கோடியாக சம்பளம் உயர்கிறது. பென்ஸ் கார், ஜாக்வார் கார்'ல போகனும், பீச் ஹவுஸ் வாங்கனும், இந்த மாதிரி இலட்சியம் உள்ளவர்கள் மாற்று சினிமா குறித்து சிந்திப்பதே தவறு. மாற்று சினிமா என்றால் பாதை வேறாக இருக்க வேண்டும்...

  மேலும் படிக்க
 
 
மாற்றுப்படங்கள் வரும்போது கண்டிப்பாக ஆதரிப்பேன் - தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமார் - தமிழரசன்

இன்றைய சூழலில் கலையில் தான் வணிகம் இருக்கிறது. வணிகத்திலிருந்து கலைக்குள் வர முடியாது. சினிமா என்ற கலையை மனதிற்கு பிடித்த, அதற்கான வடிவமும், சரியான திட்டமிடலோடு இருந்தாலே அது வியாபாரம் ஆகிவிடும். ”ஆரோகணம்” திரைப்படம் வெறும் முப்பத்தி ஐந்து லட்ச்சத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம், பெண் இயக்குனரால் எடுக்கப்பட்டது தமிழில் முகம் தெரியக்கூடிய அளவில் அமைந்த திரைப்படம். இந்த திரைப்படத்தை எந்த அளவிற்கு வணிக ரீதியாக வெளியிட முடியும் என்று பார்த்தால் அந்த முப்பத்தி ஐந்து லட்ச திரைப்படத்திற்கென்று ஒரு அளவு இருக்கிறது. முப்பத்தி ஐந்து லட்ச ரூபாய் திரைப்படத்திற்கு மேலும் முப்பத்தி ஐந்து லட்சம் செலவு செய்து வெளியிடும் பொழுது நமது குறிக்கோள் எழுபது லட்சம் அதுவே போதுமானது.



  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome