இதழ்: 29    மாசி (February 01 - 15), 2015
   
 
  உள்ளடக்கம்
 
கோஸ்டா காவ்ரஸ் : பொது அனுபவங்களிலிருந்து ஆழ்ந்த அரசியல் பிரக்ஞை நோக்கி - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
கலை ரூபத்திற்காக அரூபமாய் - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் & நடிகர் நாசருடன் ஒரு நேர்காணல் - தினேஷ்
--------------------------------
திரைமொழி - 15 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
நாடு கடந்த கலை: குறும்படங்களின் பெரும்தடம் - சொர்ணவேல்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை ‘வெண் சங்கு’ - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்
--------------------------------
கலையை நேசித்த தலைசிறந்த இயக்குநர்கள் - பரசுராம்
--------------------------------
 
   


   

 

 

காணும் முறைகள் - ஜான் பெர்ஜர்

- தமிழில்: யுகேந்தர்


அத்தியாயம் 3 - பகுதி 1

ஒரு வழியாக கேள்வி கேட்க துவங்கியுள்ள, ஆனால் எந்த விதத்திலும் கடந்து செல்லாமல் இருக்கும் மரபுகள் மற்றும் பயன்பாட்டு படி, பெண்ணின் சமூக இருப்பு என்பது ஆணிடமிருந்து வேறுபட்ட வகையாகவே இருக்கிறது. ஆணின் இருப்பு அவன் தன்னக்கத்தே கொண்டிருக்கும் அதிகாரப்பலத்தை சார்ந்தே இருக்கிறது. அவனது பலம் பெரியதாகவும் நம்பகத் தன்மையானதாகவும் இருந்தால், அவனது இருப்பு கவரும் விதமாக இருக்கும். அது சிறியதாகவோ அல்லது நம்பகத் தன்மையற்றதாகவோ இருந்தால், அவனது இருப்பு சிறியதாகவே காணப்படும். அதிகாரப்பலம் என்பது தார்மீகம், உடல், இயற்கை மனநிலை, பொருளாதாரம், சமூகம், பாலியல் சார்ந்து இருக்கலாம் - ஆனால் அதன் பொருள் ஆணின் வெளிப்புறத்திலேயே எப்போதும் உள்ளது. உங்களுக்கு அல்லது உங்களுக்காக என்ன செய்ய இயலும் என்பதே ஓர் ஆணின் இருப்பை தெரிவிக்கிறது. அவனது இருப்பு இட்டுக்கட்டப்பட்டதாகவும் இருக்கலாம், செய்ய இயலாத ஒன்றை தன்னால் முடியும் என பாசாங்கு செய்யும் செயல். ஆனால் அந்த பாசாங்கு எப்போதும் பலத்தை நோக்கியே செல்லும், அதை வேறொருவர் மீது அதிகாரம் கொள்ள பயன்படுத்துவான்.

மாறாக, பெண்ணின் இருப்பு தனது சொந்த மனோபாவத்தையே தானாக வெளிப்படுத்துகிறது, மற்றும் அவளுக்கு என்ன செய்ய முடியும் & என்ன செய்ய முடியாது என்பதை வரையறுக்கிறது. அவளது இருப்பை சைகைகள், குரல், கருத்துகள், வெளிப்பாடுகள், ஆடைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட சூழல், சுவை ஆகியவையே வெளிப்படுத்துகிறது. உண்மையில் அவளது இருப்பிற்கு பங்களிக்க முடியாத எந்த ஒரு செயலையும் அவள் செய்வதற்கு இல்லை. பெண்ணுக்கு இருத்தல் உள்ளார்ந்த ஒன்றாகும், அதை ஆண்கள் கிட்டத்தட்ட சரீர வெளியிடல், ஒரு வெப்ப வகை அல்லது வாசனை அல்லது ஒளி என்றே நினைக்கிறார்கள்.

பெண்ணாக பிறப்பது என்பது பிறந்து, குறித்த மற்றும் வரையறுக்கப்பட்ட இடத்தில், ஆண்களுக்கு பயனாக இருக்கும்படியாகவே இருக்கிறது. இத்தகைய பாதுகாப்பின் கீழ் வரையறுக்கப்பட்ட இடத்தில் வாழும், புத்தி கூர்மையின் விளைவாகவே பெண்ணின் சமூக இருப்பு வளர்ந்தது. ஆனால் இது பெண்ணின் சுய இருப்பை இரண்டாக பிரிக்க செய்தே நடந்தது. ஒரு பெண் தன்னை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். கிட்டத்தட்ட எப்போதும் அவளது சொந்த பிம்பம் அவளுடனே இருக்கிறது. அறையின் குறுக்கே நடக்கும் நேரத்திலும் அல்லது அவளது தந்தையின் இறப்பில் அழும் நேரத்திலும், தான் நடப்பதையும் அழுவதையும் அவள் சிந்திக்காமல் இருப்பது மிகவும் குறைவு. ஆரம்ப குழந்தை பருவத்திலிருந்தே, தன்னை தொடர்ந்து மதிப்பீடு செய்ய அவளுக்கு கற்று கொடுக்கப்பட்டு நம்பச்செய்துள்ளனர்.

அதனால் அவள் தன்னுள் இருக்கும் மதிப்பீடு செய்பவர் (Surveyor) மற்றும் மதிப்பீடு செய்யப்படுபவரை (Surveyed) இரண்டு கூறுகளாக சிந்திக்கிறார், இருப்பினும் எப்போதும் பெண் அடையாளத்தின் தனித்துவமான கூறுகள் அவை.

அவள் தான் யார் என்று அனைத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டும் மற்றும் அவள் செய்யும் அனைத்தையும், ஏனென்றால் மற்றவர்களுக்கு எப்படி தோற்றமளிக்கிறாள், இறுதியாக ஆண்களுக்கு எப்படி தோற்றமளிக்கிறாள் என்பதே மிகவும் முக்கியம், அதுவே பொதுவாக அவளின் வெற்றி என்று கருதப்படுகிறது. தன்னை என்ற அவளது சொந்த உணர்வை, தன்னை மற்றவர்கள் பாராட்டுவது என்ற உணர்வு அகற்றுகிறது.

பெண்ணை மதிப்பீடு செய்தபின்னே அவளிடம் எப்படி நடந்தக்கொள்ள வேண்டும் என ஆண் முடிவெடுக்கிறான். இதன் விளைவாக, ஒரு பெண் ஆணுக்கு எப்படி தோற்றம் அளிக்கிறாளோ, அதுவே அவன் எவ்வாறு அவளை நடத்துவது என்பதை தீர்மானிக்கிறது. இந்த செயல்முறையின் மீது சில கட்டுப்பாடுகள் பெற, பெண் அதை அடக்கி தன் இயல்பாக்க வேண்டும். மதிப்பீடு செய்பவர் அணுகும் மதிப்பீடு செய்யப்படும் பெண்ணின் சுயத்தின் அந்த பகுதியை மற்றவர்களுக்கு விளக்குவதன் மூலம், தன் முழு சுயத்தை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவிக்கிறாள். அவள் தன்மீது எச்சரிக்கையாக பின்பற்றும் இந்த முறையே அவளது இருப்பின் உள்ளடக்கமாகும். ஒவ்வொரு பெண்ணின் இருப்பும், தனது இருப்பினுள் எது அனுமதிக்கப்பட்டது, எது அனுமதிக்கப்படாதது என்று ஒழுங்குபடுத்திக்கொண்டே இருக்கும். அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் - அதன் நேரடி நோக்கம் அல்லது ஊக்கம் எதுவாக இருந்தாலும் - அவளை எப்படி நடத்த வேண்டும் என்பதின் அறிகுறி அது என்றே பார்க்கப்படுகிறது.

ஒரு பெண் தரையில் கோப்பையை வீசுகிறாள் என்றால், அவளது சுய கோப உணர்வை எப்படி நடத்துகிறாள் என்பதின் எடுத்துக்காட்டு இது, அதனால் மற்றவர்கள் தன்னை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புவதையும் தெரிவிப்பதாக பார்க்கப்படுகிறது. ஒரு ஆண் அதே செயலை செய்தால், அவனது செயல் தனது கோபத்தின் வெளிப்பாடு என்று மட்டுமே பார்க்கப்படுகிறது. ஒரு பெண் சிறந்த ஜோக்கை சொன்னால், தன்னுள் இருக்கும் ஜோக்கரை எப்படி நடத்துகிறாள் என்பதற்கு எடுத்துக்காட்டு இது. அதன்படி ஒரு ஜோக்கர் பெண்ணாக மற்றவர்கள் தன்னை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புவதையும் தெரிவிப்பதாக பார்க்கப்படுகிறது. ஒரு ஆண் மட்டுமே அதன் சொந்த நலனுக்காக சிறந்த ஜோக்கை சொல்ல முடியும்.

இதை எளிமைப்படுத்தி இப்படி சொல்லலாம் : ஆண் செயல்புரிகிறான் & பெண் தோற்றமளிக்கிறாள். ஆண்கள் பெண்களை பார்க்கின்றார்கள். பெண்கள் தாங்கள் கவனிக்கப்படுவதைக் பார்க்கிறார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இருக்கும் பெரும்பாலான உறவுகள் மட்டுமின்றி, பெண்களுக்குள்ளான அவர்களது உறவை குறித்தும் இது தீர்மானிக்கிறது. அவளுக்குள் இருக்கும் மதிப்பீடு செய்பவர் ஆண்: மதிப்பீடு செய்யப்படுபவர் பெண். இவ்வாறு அவள் தன்னை ஒரு பொருளாக மாற்றுக்கிறாள், மிக குறிப்பாக பார்வைக்கான ஒரு பொருள் : ஒரு தோற்றம்.

ஐரோப்பிய தைல ஓவியத்தின் ஒரு வகையில் பெண்களே முதன்மையான, எப்போதும் தொடர்ந்து வரும் பொருளாகும். அது நிர்வாணம் என்ற வகையாகும். ஐரோப்பிய ஓவியத்தின் நிர்வாணாத்தில், பெண்கள் எப்படி பார்க்கப்பட்ட்னர் மற்றும் பார்வையால் தீர்மானிக்கப்பட்டனர் என்பதற்கான அடிப்படையையும் மரபுகளையும் நாம் கண்டறிய முடியும்.

இந்த பாரம்பரியத்தில் ஆதாம் மற்றும் ஏவாளே நிர்வாணமாக முதலில் சித்திரக்கப்பட்டனர். ஆதியாகமத்தில் கூறப்பட்டிருக்கும் கதையை இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும் :

அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். . . . அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். . . .

அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். (நன்றி - tamil-bible.com )

தொடரும்...

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </