| |
குறும்படங்கள் / ஆவணப்படங்கள் தயாரிப்பது என்பது பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும், அந்த பொருளாதார செலவுகளை ஈடுகட்ட அது சார்ந்தவர்கள் படும் துயரம் சற்றே அதிகம் தான். திரைப்படங்கள் பல கோடி வர்த்தக மதிப்பு வாய்ந்தவை. ஆனால் குறும்படங்கள் மற்றவர்களின் பார்வைக்கு படுவதே அரிது. பிறகு வர்த்தக மதிப்பிற்கு எங்கே போவது.
குறும்படங்கள் பற்றிய அதிக ஆர்வம் இருப்பவர்கள் கூட அவை விற்பனைக்கு கிடைக்கும் இடங்களை அறிந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்கள் தமிழ் ஸ்டுடியோவின் இந்தப் பகுதியை பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான குறும்படங்களை online மூலம் (ஊக வணிகம் மூலம்) பெற்றுக் கொள்ளலாம். தொடக்கத்தில் பணம் செலுத்தும் வசதி சில கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும். நாளடைவில் அவை தளர்த்தப்பட்டு மேலும் எளிதாக்கப்படும்.
இந்தப் பகுதியில் நீங்கள் வாங்க விரும்பும் குறும்படம் குறித்த மேலதிக தகவல்களை பாவைக்கு வந்தவை பகுதியில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது எங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அதுபற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் படைப்புகளை விற்பனை செய்ய இப்பகுதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குறும்பட / ஆவணப்பட விவரங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். இயக்குனர், வெளியீட்டாளர், கிடைக்குமிடம், விலை, உங்கள் தொலைபேசி என் போன்றவற்றை மறக்காமல் குறிப்பிடுங்கள்.
மேலும் விபரங்களுக்கு விற்பனை பிரிவை தொடர்பு கொள்ளுங்கள்:
9840698236, 9894422268
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
|