வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      திரைச்சிற்பிகள்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  கலைஞர்கள்
  திரைப்பார்வை
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  வினா விடை
  புதியவர்கள்
  1
கட்டுரைகள்
  நிழற்படக் காட்சி
  ஊர் சுற்றலாம் வாங்க
 
1
வரலாறு
 
1
ஆவணங்கள்
  வெட்டிப்பேச்சு
  தமிழ்தாசன் பக்கங்கள்
  'நிழல்' பக்கங்கள்
  கேப்ரியெல் பக்கங்கள்
  திரைமொழி
  வெள்ளித்திரை
  வலைப்பூக்கள்
  படித்ததில் பிடித்தது
  நூல்வெளி
  இலக்கியம்
  மற்றவை
  தொடர்புக்கு
  கருத்துப்பதிவு
 

 

     
11
1
வெட்டிப்பேச்சு
1
 
1 சைகை மொழி
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  வெட்டிப்பேச்சு
   
 

வெட்டிப்பேச்சு எனும் இப்பகுதியில் தொடர்ந்து எனது எண்ணங்களை பதிவு செய்கிறேன். வெட்டிப்பேச்சு எனும் தலைப்பு ஏன்? இதைத்தான் எழுத வேண்டும் என்று இல்லாமல், என் மனம் கேட்டவற்றை, பார்த்து ரசித்தவை, உள்ளக் குமுறல், கவிதை, கதை, இலக்கியம், திரைப்படம், பயணக்கட்டுரை என அனைத்தைப் பற்றியும் எழுதுவதால்.

தொடர்ந்து புதிய எழுத்தாளர்களை ஊக்கவிக்கும் தமிழ் ஸ்டுடியோவின் வேண்டுகோளுக்கிணங்க எனது இந்த எண்ணங்களை இங்குப் பதிவு செய்கிறேன். குறைகளும், குற்றங்களும் இருப்பின், உங்கள் கொட்டுதலை எதிர்பார்க்கிறேன். அன்பைக் கொட்டுங்கள். உங்கள் கொட்டு எனக்கு சுகமாகவும், அதே நேரம், தவறுகளை திருத்திக்கொள்ள களமாகவும் அமைந்தால் உங்களுக்கு நன்றிகள் கோடி. எனது முதல் பதிவாக இந்தக் குட்டிகதையை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சைகை மொழி (Sighn Language)

நிகழ்கால சமுதாய மாற்றங்கள் அனைத்தும் அறியபெற்ற குடும்பத்தின் பெண்ணொருத்தி அவ்வப்பொழுது தன் ஆண் நண்பனுடன் நகருலா வருவது அவள் குடும்பத்தில் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. வழக்கமாக பலர் வாழ்வில் நடக்கும் கெடுபிடி இது. அது பெண்ணின் குடும்ப சூழல் பொருத்தது.

ஆனால் அவளைப் பொருத்தமட்டில் அவன், அவளுடைய பின் பாதி வாழ்வின் ஒருவனாக இல்லாத பட்சத்தில் அவள் வாழ்வு சிறக்காது என்ற முடிவுக்கு வந்தவள். இப்படி பிரச்சனை இருக்கிறதால அவுங்களோட சந்திப்ப கொஞ்சம் கொரச்சுகிட்டாங்க. வீட்டு மக்களுக்கு அதிகம் கண்ணுல படாத சந்திப்பு தான் அதன் பிறகு. இந்தமாதிரியான சூழலின் பொண்ணு என்னவோ அவன உறுதியான எண்ணத்துடன் லவ் பண்ணா ஆனாலும் அடிக்கடி அவ அவனிடம் கேக்குற கேள்வி இது தான்.

"நீ என்ன எந்த அளவுக்கு லவ் பண்ற? ம்ம்...சொல்லேன்" ...ங்கறது தான். அதுக்கு அவன் சொல்ற பதிலோ அவுளுக்கு என்னவோ பட்டும் படாமலும் போல இருக்கும். அதனால அவ அடிக்கடி அப்செட் ஆயிடுவா, இதோட வீட்டு கண்டிஷன் வேற அதனால எப்பவுமே அவன் தான் ஒரு சாந்தமான நிலைக்கு அவள மாத்துவான். அப்படியே இரண்டு வருஷம் ஹை வேஸ் ல வர கார் மாதிரி பறந்து போச்சு.

அதே சமயம் அவனும் கடைசி வருஷ காலேஜ் முடிஞ்சது. மேல படிக்க அவன் வெளிநாடு போறதா யோசனைல இருந்தான், அதுக்குள்ள அவன், அவளுக்கு தன் காதல முழு மனதோட உண்மையா தெளிவா சொல்லனும்னு ஆசை. சொன்னான். சில துளி மௌனத்துக்கு பின்னாடி அவனுக்கே புரிஞ்சது. அத சொல்லியே அவளிடம் அவன் பேசறான். நான் சொன்ன விதம் உனக்கு ஒரு முழுமையான உறுதி கொடுக்கலங்கறது நான் உணருகிறேன் இருந்தாலும் நான் உன்ன லவ் பண்றேன் அது தான் உண்மை.

இது உனக்கு சம்மதம்னா, நான் உன்ன என்னோட இரண்டாவது பாதி வாழ்க்கைக்கு முழுவதுமா ஏத்துக்கிறேன். எனக்கு உன்னோட வீடு, சம்பிரதாயம் உங்க வீட்டு பெரியமனுசங்க எல்லாம் தெரியும். என்னால முடிஞ்சவரை அவங்களோட பேசி சம்மதம் வாங்கறேன். நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா? அவனோட தீர்மானத்துக்கு அவளும் சம்மதம் சொன்னா. அப்படி இப்படி போராடி அழுது பொரண்டு ரெண்டு வீட்டுலும் கிரீன் சிக்னல் விழுந்தாச்சு. அவன் வெளிநாடு போகறதுக்குள்ள நிச்சயம் முடிஞ்சது.

அவனும் கடல் கடந்து போயாச்சு படிக்க. இவளும் வழக்கம் போல வேலைய தொடர்ந்து பண்ணிட்டு இருக்கா... இதற்க்கு இடைல ஈமெயில், போன் மூலம் ரெண்டுபேரும் தொடர்ந்தாங்க. அது என்னவோ கஷ்டம் தான் இருந்தாலும் சூழ்நிலை, சந்தர்ப்பம் மாறினாலும் ரெண்டு பேருக்குள்ளும் எந்தவித தப்பான என்னமோ வந்ததில்ல.

ஒரு நாள் வழக்கம் போல வேலைக்கு போயிட்டு இருந்த அவ மேல எதிர்பாராத விதமா கண்ட்ரோல் இல்லாம வந்த கார் மேல மோதி பெரிய அடி பட்டுடுச்சி. மயக்கம் தெளிஞ்சி கண் திறந்த அவ, அவளோட படுக்க பக்கத்துல அப்பா அம்மா இருக்கிறது கண்டா. அப்பத்தான் அவளுக்கு புரிஞ்சது தனக்கு பெருசா அடி பட்ருக்கறதா. திரும்பினா அம்மா அழுதுட்டு இருந்தா, அம்மாவ ஆறுதலுக்கு உட்படுத்த முயன்ற அவளுக்கு அப்ப தான் புரிஞ்சது தான் பேசும்போது வார்த்த சத்தம் வரல வெறும் காத்து சத்தம் தான் வரதுனு. அவ அவளோட குரல இழந்துருந்தா அந்த கோர ஆக்சிடென்ட் ல.. மூலைல உள்ள நரம்புல குழாய்ல பட்ட காயத்தால உங்க பொண்ணுக்கு உள்ள குரல் வலைக்கான பேச்சு திறன் முழுவதுமா செயல் இழந்து போச்சுன்னு சொன்னார் டாக்டர். இத கேட்ட அவ ரொம்ப மனசளவுல ஒடஞ்சு போய்ட்டா..

அவ ஆஸ்பிட்டல்ல தாங்கி இருந்த ஒவ்வொரு நாள் முடிவிலும், பின்னும் ஒரு மௌனமான அழுகை இருந்துச்சு...அது அவ வீட்டுக்கு வந்த பின்பும் தொடர்ந்தது.. வீட்ல உள்ள எல்லாமே ஒரே மாதிறிதான் இருந்தது, அதாவது அடி படறதுக்கு முன்னும், இப்பவும். ஆனால் ஒன்ன தவற. அது டெலிபோன் மணி. அது ஒவ்வொரு முறை அடிக்கும் பொது அது அவனிட இருந்து வந்ததோ என்ற படபடப்பு அவளிடம் தாங்க முடியாத ரணத்தை உண்டாக்கிற்று. இங்க நடந்த ஆக்சிடென்ட் பத்தி ஒன்னும் தெரியாத அவனுக்கு தெரியபடுத்த அவளுக்கு விருப்பம் இல்ல. இத சொல்லி மேலும் அவனுக்கு கவலைய கொடுக்க அவளுக்கு விருப்பம் இல்ல னு தான் சொல்லணும்.

இதெல்லாம் தெரியக்கூடாது, அதுவும் இல்லாம பேசமுடியாத என்னோட அவன் பின் பாதி வாழ்கை பாதிக்க கூடாதுன்னு நெனச்சி அவனுக்கு ஒரு ஈமெயில் அனுப்பினா. அது அவனுக்கு வெறுப்ப கொடுத்தது. இனிமே என்னால உனக்காக உன் படிப்பு முடியுற வரைக்கும் காத்திருக்க முடியாது, நான் வேற ஒருவரை மணக்க போறேன்னு.

அந்த ஈமெயில் கூட ஒரு பார்சல் அவனுக்கு அனுப்பி அது அவன், அவளுக்கு போட்ட நிச்சய மோதிரம். ஈமெயில், பார்சல் பார்த்த அவன் பல ஆயிரம் ஈமெயில், போன் கால்ஸ் அனுப்பினான். ஆனா அவகிட்ட இருந்து ஒரு பதிலும் இல்ல அவ போன் கால்ஸ் அட்டென்ட் பண்ணவும் இல்ல. எல்லாத்துக்கும் மௌனமான அழுகை தான் தொடர்ந்தது.
மகளோட இந்த வேதனைய பார்த்து பொறுக்க முடியாது அவ பேரண்ட்ஸ் வேற ஊருக்கு மாத்திட்டு போறதா முடிவு பண்ணாங்க. அப்பவாவது பழசெல்லாம் மறந்து எப்பவும் போல சந்தோசமா ஆவானு.

அவுங்க எதிர்பார்த்து போலவே அழுக கொறைஞ்சு புது எடத்துல புது மனுசங்க புது விசயம்னு சைகை மொழி (Sign Language) கத்துக்கிட்டு புது வாழ்கைய தொடங்குனா. ஒவ்வொரு நாளும் அவ அவளுக்குள்ளவே ஒரு ஷ்லோகன் சொல்லுவா அது "அவன மறக்கணும், அவன மறக்கணும் னு"

ஒரு நாள் அவ பிரண்டு ஒருத்தி மூலமா அவன் வெளிநாட்ல இருந்து வந்தது தெரிஞ்சது அவளுக்கு. அவ பிரண்டுகிட்ட எனக்கு என்ன ஆச்சு எங்க இருக்கிறேன் ஏதும் அவன் கிட்ட சொல்ல கூடாது னு கேட்டுகிட்டா. அவளும் இவள பத்தி ஒன்னும் சொல்லல அதுல இருந்து இந்த நாள் வரை அவன் எங்க இருக்கான் என்ன பண்றான் அதபத்தி ஒன்னும் தெரியாது இவளுக்கு.

ஒருவருசம் முடிஞ்சு அவ பிரண்டு ஒருத்தி என்வெலோப் ஓட வந்தா இவளோட ஆளுக்கு மேரேஜ் முடிவாச்சினு இன்விடடின் கொடுக்க, அத கேட்டதும் அவளுக்குள்ள அடக்கமுடியாத நசுக்கம் அவ மனதுல. பிரித்துப்பார்த்த அவளுக்கு எதிபாராத அதிர்ச்சி, பெண் பெயர் இடத்தில் அவள் பெயர் இருக்க கண்டதும். அவள் பிரண்டிடம் வேகமும் ஏற்றிய புருவமாய் என்ன நடக்குது இங்கனு சைகை மொழியில் கேட்டு முடிக்க அவள் முன் அவன் தொடருகிறான். "இந்த ஒரு வருசமா உன்ன நான் வந்து பார்க்காததுக்குக் காரணம், நானும் சைகை மொழி கத்துக்கிடப் போனதுதான். இப்பவும் நான் உன்ன உண்மையா நேசிக்கறேன். நீ என்ன இப்பவும் நேசிக்கிறாயா?

நான் உன்னோட வார்த்தையா இருக்க, எனக்கு கிடைச்ச வாழ்க்கை, இதுனு வாழ்வோம் வா என்றான்... அவள் இதழ் பேச நினைத்த வார்த்தை அவன் இதழில் ஒலிக்கிறது "I Love You" அவள் திருப்பி அனுப்பிய மோதிரம் மீண்டும் அவள் விரல் புகுது.. புன்னகை அவள் இதழ்களை தழுவுகிறது. தன் வெட்கிய முகத்தை அவன் அகன்ற நெஞ்சுக்குள் மறைத்து ஆனந்தம் அடைகிறாள்.

கதையை முடித்ததும் தான் அறிகிறேன் இதுவும் பேச்சுப் பற்றியது என்று.. தலைப்பை ஒட்டியே பேசுகிறேன் எனும் மன நிறைவோடு... வெட்டிப்பயல்

பேச்சைத் தொடர்வோம்...

கருத்து பதிவு
  வடிவமைப்பும் பராமரிப்பும்: விசை