இந்தப் பகுதியில், தனது மனம் போன போக்கில், தனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். (யார் என்பது கமுக்கம்) மேலும் சிறுகதை, கவிதை, நாட்டு நடப்பு என அனைத்தையும் அலசும் மேடையாக இந்த இணைப்பு விளங்கும்.
ஒரு சிலரின் எழுத்துக்கள் மட்டுமே நமது உணர்வுகளை உரசிவிட்டு செல்லும். ஆனால் பலரது எழுத்துக்களை நாமே சென்று உரசினாலும் காயம் ஏற்படுமே தவிர அதனால் எந்த பலனும் ஏற்படாது. நல்ல எழுத்து என்பது, படிப்பவருக்குத் தெரியாமலே அவர் வாழ்வில் ஒரு சில மாறுதல்களை ஏற்படுத்துவது.
ஆனால் பலர் தங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை கோர்வையாக எழுதத் தெரியாதக் காரணத்தினால் அவற்றை தங்களோடு சேர்த்துப் புதைத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பட்ட எழுத்துக்கள் இந்த சமுதாயத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானது.
தமிழ் ஸ்டுடியோ அப்படிப் பட்ட எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் எண்ணத்துடனேயே தொடர்ந்து செயல்படுகிறது. ஆர்வம் உள்ள அனைவருக்கும் ஒரு நல்ல களம் அமைத்துக் கொடுப்பதே தமிழ் ஸ்டுடியோவின் தலையாயப் பணியாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதி எழுத்தாளரும் தான் சொல்ல வரும் கருத்துகளை மிக நேர்த்தியாக உங்களுடன் பகிர்ந்து கொள்வார். இதுதான் எழுத வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடுகளும் இன்றி ஏதோ மனதுக்குத் தோன்றியவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார் இந்த பகுதி எழுத்தாளர். அவருக்கு ஊக்கமளித்து எழுத்துலகத்துக்கு வரவேற்கிறது தமிழ் ஸ்டுடியோ. அவரின் எழுத்துக்கள் உறுதியாக உங்களுக்குள் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது எங்கள் எண்ணம்.
|