இன்று பழைய படங்கள் பலவற்றை ரீமேக் செய்வதைப் பார்க்கிறோம். சில படங்களை இன்ஸ்பிரேசன் என்று கூறுவார்கள். ஆனால் 80 களில் வெளீயான சில திரைப் படங்கள் அதற்கு முந்தைய கால படங்களீன் ரீமேக், ஆனால் புதிதாக வந்தது போல் வந்தன என்கிற முன்னுரையுடன் ஆரம்பிக்கும் இக்கட்டுரைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. வலைப்பூ என்பதே அவரவர் சுய புராணம் பாடத்தான் என்கிற கருத்தை பல வலைப்பூக்கள் உடைத்து வருகிறது.
இந்த வலைப்பூவும் அத்தகைய வலைப்பூவே. தமிழ் திரைப்படங்கள் குறித்து நல்ல தெளிவான கண்ணோட்டத்துடன் பல தகல்வல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகள் முழுதும் அந்த வலைப்பூவின் ஆசிரியரின் கருத்துகள். ஒரு சில கருத்துகளுடன் நீங்கள் வேறுபடலாம். ஆனால் பல கருத்துகள் நம்மை உறுதியாக சிந்திக்க வைக்கும். ஒரு முறை படித்துதான் பாருங்களேன்.
ரீமேக் சுவடே தெரியாத தமிழ் படங்கள்
புதுமைப் பித்தன் VS நானும் ஒரு தொழிலாளி
MGRன் படத்தில் தந்தை மன்னர். மகன் வெளி நாடு சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கதைகட்டி அவரை மறைத்து வைத்து பத்திரத்தில் கையொப்பம் கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். மகன் வந்து மாறுவேடத்தில் மறைந்திருந்து உண்மைக் கண்டறிகிறார்.
நானும் ஒரு தொழிலாளீயில் தந்தை முதலாளி. மகன் வெளி நாடு சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கதைகட்டி அவரை மறைத்து வைத்து பத்திரத்தில் கையொப்பம் கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். மகன் வந்து மாறுவேடத்தில் மறைந்திருந்து உண்மைக் கண்டறிகிறார்.
2.பெரிய இடத்துப் பெண் & சகலகலாவல்லவன்
பெ. இ. பெ.வில் நாயகன் கிராமத்தான்.குடுமிக்காரன், பட்டணத்துக் குடும்பம் வருகிற்து. அவரது முறைப் பெண்ணை ஏமாற்றி கல்யாணம் செய்கிறார்கள். அக்காவை சீரழித்து விடுகிறார்கள். நாயகன் குடுமை வெட்டி ஸ்டைலாக நகரத்திற்கு சென்று அந்த்க் குடும்பப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு உண்மைகளை கண்டறிந்து ஊருக்கு உணர்த்துகிறார்.
ச.க.வ..வில் நாயகன் கிராமத்தான்.குடுமிக்காரன், பட்டணத்துக் குடும்பம் வருகிற்து. அவரது சொத்தை ஏமாற்றி விடுகிறார்கள். தங்கைவயை சீரழித்து விடுகிறார்கள். நாயகன் குடுமை வெட்டி ஸ்டைலாக நகரத்திற்கு சென்று அந்த்க் குடும்பப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு த்ங்கைக்கும் வாழ்க்கைக்கும் உறுதி செய்து உண்மைகளை கண்டறிந்து ஊருக்கு உணர்த்துகிறார்.
அன்று வந்ததும் அதே நிலா பாடல் இன்று வந்தபோது இளமை இதோ, இதோ
3.படிக்காத மேதை & பேர் சொல்லும் பிள்ளை
இதனைப் பற்றி பலரும் பேசிவிட்டதால் ரீமேக் ஒரளவு வெளியே தெரிந்து விட்டது.
4.உத்தம புத்திரன் & 23ம் புலிகேசி
அதே இரட்டை பிள்ளைகள், அதே மாமன், அதே போல் ஒரு குழந்தை கடத்தப் படுகிறது. ஒரு பிள்ளை மாமன் சொல் கேட்டு வளர்ந்து யாரடி நீ மோகினி பாடுகிறார். இதில் ஆடிவா தேடிவா பாடுகிறார். இன்னொரு பிள்ளை சொந்த புத்தியுடன் வளர்ந்து தம்பியை சிறையில் தள்ளி மாமணைத்திருத்தி நாட்டை மீட்டு தம்பியைத்திருத்தி கடைசியில் சுபம்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷ்யம். முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையும் சமுதாய சீர்திருத்த கருத்துக்களும் இது கண்டிப்பாக வர வேற்கத்தகுந்த ஒன்று.
எங்க வீட்டுப் பிள்ளை கூட மேலே சொன்ன கதைதான் அது முற்றிலும் கண்ணாடி பிம்மம் போல் ரீமேக் செய்யப் பட்டுக் கொண்டேஏஏஏ இருக்கிறது
இது முதல் கட்டுரை. இந்த தலைப்பில் இவர் தொடராக பல கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். மேலும் படிக்க அவர் வலைப்பூவில் ஒரு சுற்று சுற்றி வாருங்கள்.
பூக்கள் மலரும்...
|