திரைப்படங்கள் பற்றிய வலைப்பூக்களின் தேடலின் போது கிடைத்தவை இந்த வலைப்பூ. நாம் பார்த்து ரசித்த பலதிரைப்படங்கள் பல உலகத் திரைப்படங்களின் தழுவல் என்பதை இந்த வலைப்பூ எடுத்துக்காட்டினாலும் அவற்றை அப்படியே நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. முழ உண்மையும் அற்ற முழு பொய்யும் அற்ற ஒரு தகவல் இங்கு பகிரப்பட்டுள்ளது. இவற்றை இனம்பிரித்து அறிந்துக் கொள்வதே பண்பாளர்களின் கடமை. இனி வலைப்பூ செய்தி.
திருடி எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள்!
உன்னைப் போல் ஒருவன், முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் மற்றும் அவள் அப்படித்தான் போன்ற உன்னத திரைப்படங்கள், நாவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். மேலும் இத் திரைப்படங்கள் தமிழில் மாற்று சினிமாவிட்க்கான களத்தையும் உருவாகியது.
 |
புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' குறுநாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும்; நாவலுக்கும் உதிரிப்பூக்கள் திரைப்படத்திட்க்குமான இடைவெளி. அப்படி இருந்தும் கூட இயக்குனர் மகேந்திரன், மூலக்கதை 'புதுமைப்பித்தன்' என்று குறிப்பிட்டிருப்பார். இது தான் இயக்குனர் மகேந்திரனின் நேர்மையின் வெளிப்பாடு. |
சமீபத்திய தமிழ் சினிமாவில், தமிழ் வாழ்க்கை கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. வேட்டி, சேலையுடன் நடிகர், நடிகையை திரையில் பார்த்தே பல நாட்களாகிவிட்டது. கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களும் அரிதாகவே வெளிவருகிறது.
ஈரான், கொரியா, சீனா போன்ற நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வண்ணம் திரைப்படங்களை உருவாக்கி வருகின்றது. ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம் அதிகமாக இருந்த காலத்திலேயே அகிரா குரசோவாவின் திரைப்படங்கள் யாவும் ஜப்பானியத் திரைப்படமாகவே இருந்தது.
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காட்சி ஊடகத்தை(visval medium) பக்கம், பக்கமாக வசனம் பேசி ஏறக்குறைய நாடகங்களைப் போல வானொலியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இயக்குனர் மகேந்திரனின் வருகை தமிழ் சினிமாவில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது.
இயக்குனர் பாலா, விழிம்பு நிலை மனிதர்களை முன் வைத்து தமிழ் சினிமாவில் புதிய சாத்தியங்களை உருவாக்கி வருகிறார். அவரின் திரைப் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் கூட தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். 'நான் கடவுள்' திரைப்படம் கூட, எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
தமிழில் சினிமாவில் மாற்று முயற்சிகள் அரங்கேறும் அதே வேளையில், வெகுஜன மக்களின் பார்வைக்கு எட்டாத ஈரான், கொரியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளின் திரைப்படங்களை திருடும் போக்கு தமிழில் அதிகரித்துவருகிறது. இதுவரை வெளிநாட்டுப் திரைப்படங்களை உல்ட்டா செய்து வெளிவந்த, வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்...
அதே கண்கள் - ரோஷோமான்
நாயகன் - காட் பாதர்
ரோஜா - ஹெல்ட் ஹாஷ்பேஜ்
ஆயுத எழுத்து - அமரோஸ் பெரோ
கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் - சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி
போக்கிரி - டோனி ப்ராஸ்கோ
குஷி - வென் ஹேரி மெட் சாலி
ஜேஜே - செரண்டிபிட்டி
காதலர் தினம் - யூ ஹேவ் காட் மெயில்
நம்மவர் - டூ சார் வித் லவ்
காக்க காக்க - த அன்டச்சபிள்
வெயில், ஆட்டோகிராப் - சினிமா பாரடைசோ
மே மாதம் - ரோமன் ஹாலிடே
குணா - டை மீ அப் டை மீ டவ்ன்
சதிலீலாவதி - ஷீ டெவில்
புதுப்பேட்டை - சிட்டி ஆப் காட்
கஜினி - மெமண்டோ
துரை - கிளாடியேட்டர்
அந்நியன் - செவென்
பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்
வேட்டையாடு,விளையாடு - மர்டர் ஆப் மெமரிஸ்
அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர்
தாம் தூம் - ரெட் கார்னர்
சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட்
வேகம்,நாயகன்(2008) - செல்லுலர்
அலிபாபா - த்ரீ அயர்ன்
அவ்வை சண்முகி - மிஸ்டர் டவ்ட் பயர்
பச்சைக்கிளி முத்துச்சரம் - டிரைல்டு
பொல்லாதவன் - பீஜிங்க் பை சைக்கிள்
நந்தலாலா - கிகிஜிரோ
யோகி - சோட்சி
வாரணம் ஆயிரம் - கிளாசிக்
என்ன நண்பர்களே மூச்சு திணறுகிறதா? இது எனக்கு தெரிந்த பட்டியல் மட்டுமே. இது இன்னும் நீ...........ளமானது. சக கலைஞனின் வியர்வையை, ரத்தத்தை, உழைப்பை திருடுவது எவ்வளவு அருவருப்பான விஷயம். ஒரு வாரத்திற்க்கு முன், சன் மியூசிக் தொலைக்காட்சியில் வெங்கட் பிரபு "நாங்கள் சரோஜாவை இங்கிலீஷ் படத்துல இருந்து சுட்டோம்" என்று தவறான உதாரணங்களை முன் வைத்து சிரிக்கிறார்.
வெங்கட் பிரபுவிடம் ஒரு கேள்வி.
சுட்ட(திருடின) படத்துல எதுக்கு சார் 'a film by vengat prabu movie'னு போடுறிங்க?
இதில் மிஷ்கின், கவுதம் மேனன் போன்றவர்கள் 'காமிரா'வை கண்டுபிடித்தவர்கள் போல ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது கடும் எரிச்சல் உண்டாகிறது.
திரைப்பட மேதை 'லூயி பூனுவல்' உடன் ஒப்பிடப்படும் 'ஜான் ஆபிரகாம்' (அக்ராகரத்தில் கழுதை, அம்மா அறியான்) கடைசி வரை அங்கிகாரம் கிடைக்காமலேயே இறந்து போனார்.
இது தான் தமிழ் சினிமா ரசிகர்கள், ஒரு மகா கலைஞனுக்குக் கொடுத்த மிகப் பெரிய மரியாதை!
 |
தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். சில நேரங்களில் திரைத்துறையில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றனர். ஒரு கதைக்காக எழுத்தாளர் பெறும் சம்பளமும் மிகவும் குறைவாகவே உள்ளது. மெக்சிகோ நாட்டின் எழுத்தாளர் மார்க்வெஸின் 'நூற்றாண்டுகாலத் தனிமை' நாவலை திரைப்படமாக்க பல மில்லியன் டாலர் விலை பேசப்பட்டது. இந்த நிலைமையை நம் ஊரில் ஒரு எழுத்தாளர் நினைத்துக் கூட பார்க்க முடியாது. |
திரைப்பட மேதை பெலினியின் சினிமா பற்றியக் கருத்து:
"உண்மையின் முன்னால் நான் மிகுந்த மகிழ்ச்சியுள்ளவனாகிறேன். சினிமா வாழ்வை பிரதிபலிக்கவில்லை. மாறாக வாழ்வைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறது; காட்சிகள் வழியாக அந்த உண்மை நம்மை நெருங்கும் போது நாம் அதன் முன் செயலற்றவர்களாகிப் போகிறோம். நல்ல படைப்பாளன் ஒரு தாவரத்தைப் போல மர்மமாக அதே நேரம் நிமிச, நிமிசத்திட்க்கு வளர்ந்து கொண்டும் இருக்கிறான். கலைஞனின் வேலையே மனித ஆன்மாவை விழிப்படையச் செய்வதுதான்" நேர்மையான கலைஞனின் சத்தியமான வார்த்தையைப் பார்த்தீர்களா?
இங்கே பல இயக்குனர்களுக்கு சொந்த கருத்து என்பதே கிடையாது. இவர்கள் எல்லாம் பேட்டி கொடுக்கும் நேரத்தில் தங்களின் நேர்மையை சுய சோதனை செய்து கொண்டால், ஒரு வேளை நேர்மையான மக்களுக்கான திரைப்படங்கள் வரக்கூடும். நீண்ட, நெடிய வரலாற்றைக் கொண்ட நமது தமிழக மக்களின் வாழ்க்கையை படமாக்கும் பட்சத்தில், ரத்தமும், சதையுமான ஒரு உலக சினிமா நமக்குக் கிடைக்கும். நம்பிக்கையுடன் மாற்று சினிமாக்களை வரவேற்போம்.
நல்ல வேளை. அது நடக்கவில்லை.
பூக்கள் மலரும்...
|