விருபா |
 |
தமிழ் புத்தகங்களை இணையத்தில் பெற்றிட ஓர் அருமையான தளம். தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது. பட்டப்பேறுகளுக்காகப் பல்கலைக்கழகங்களில், தமிழியல் தொடர்பில் அளிக்கப்பட்ட ஆய்வேடுகள் பற்றிய தகவல்களையும் தளத்தில் இணைக்கும் முயற்சியைத் தொடங்குகின்றது. |
|
| அந்திமழை |
 |
அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிடும் பயனுல் தளம். குறும்பட இயக்குனர்களின் நேர்காணல், சிற்றிதழ்களின் அறிமுகம், வேழாம்பல் குறிப்புகள், மண்மேல் நடந்த காற்று என ஏராளமான இலக்கிய தகவல்களுடன் தொடர்ந்து புதிப்பிக்கப் படும் தளம். நல்ல தமிழில் ஓர் அழகிய பதிப்பு இந்த தளம். |
|
| |
|
| அப்பால் தமிழ் |
 |
சலனத்தின் தாய் தளமான அப்பால் தமிழ் அதிகமான கதைகளையும், தொடர்களையும் வெளியிடுகிறது. ஈழத் தமிழர்களின் எழுத்துக்களும் இடம் பெற்று இருப்பது அழகு. நல்ல பல கட்டுரைகளையும் தாங்கி வரும் அப்பால் தமிழ் நல்ல பல கருத்துக்களையும் நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறது. |
|
| தமிழ் கூடல் |
 |
அன்றாட நிகழ்வுகள், திரைப்படச் செய்திகள், திரைப்பட விமர்சனம், கட்டுரைகள், தொடர்கள், பரிசுப்போட்டிகள் என விரியும் இத்தளம் மருத்துவம் சார்ந்த தகவல்களையும் நமக்குத் தருவது அழகு. இத்தளத்தில் வெளியாகி உள்ள கட்டுரைகள் நமக்குள் பலவித கேள்விகளை விட்டுச் செல்கிறது. கட்டுரைகள் அனைத்தும் வாசிக்கப் பட வேண்டியவை. |
|
| |
|
| கினோ உலகப் படங்கள் |
 |
உலகப் படங்களுக்கான ஓர் அருமையான தளம். உலகத் திரைப்படங்களின் திறனாய்வு, முன்னோட்டம் மற்றும் திரைப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளும் (கட்டணம் உண்டு) வசதி போன்றவை அமைந்திருப்பது அழகு. கிளாசிக்கல் எனப்படும் பழங்காலத் திரைப்படங்களின் தகவல்கள் கொடுக்கப் பட்டிருப்பது பலருக்கு பயனுள்ள ஒன்று. மேலும் நாடு இயக்குனர் வாரியாக படங்களைத் தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டு உள்ளது. |
|
| சினி அஸ்தே |
 |
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் திரைப்படங்களுக்கான கலை மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளுக்காக வெளிவரும் இதழ். புகழ்பெற்ற இயக்குனர்களின் எழுத்துக்கள் மற்றும் படங்களுக்கான திறனாய்வு, கலைஞர்களின் நேர்காணல் மற்றும் புத்தக மதிப்புரை போன்றவை இடம் பெற்றுள்ளன. |
|
| பால்ம் ஸ்ப்ரிங்க்ஸ் |
 |
குறும்படங்களுக்கான விழா நடத்தும் தளம். தொடர்ச்சியாக நடத்தப்படும் குறும்படப் போட்டிகள் இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. உறுப்பினராகும் வசதி செய்து தரப்பட்டு உள்ளது. போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் புகழ் பெற்ற இயக்குனர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன் பார்வைக்கு திரை இடப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் தன்னார்வத் தொண்டர்களாகவும் தங்கள் பங்களிப்பை செய்யலாம். தொடர்ந்து போட்டிகள் நடைபெறுவதால், தினமும் ஒருமுறை இத்தளத்தை பார்வையிட்டு வருவது நல்லது. |
|
| தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் |
 |
இந்திய அரசின் சார்பில் குறும்பட / ஆவணப்படங்களுக்காக நடத்தப்படும் தளம். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை சந்தைப் படுத்திக்கொள்ள அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இந்திய அரசு. இந்திய திரைப்பட நடிகர்களுக்காக ஒரு நலசங்கம் நிறுவப்பட்டுள்ளது. இதில் உறுப்பினராக விருப்பம் உள்ளவர்கள் தளத்தை ஒருமுறை பார்வை இடவும். தயாரிப்பாளர்களுக்கான வழிகாட்டலும் சட்ட விதிமுறைகளும் இடம் பெற்றுள்ளது அழகு. |
|
| << முன் பக்கம் | 1 2 அடுத்தப் பக்கம் >> |