வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பார்வைக்கு வந்தவை
1
 
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  உலகப்படங்கள்
   
 
  Babel

ஓவியர் ஜீவா
     
  உலகப்படங்கள் முகப்பு  
   
   
       

பாபெல்

A Film by
Year --
Run time : --

That is why it was called Babel—because there the LORD confused the language of the whole world. From there the LORD scattered them over the face of the whole earth.

                                                                             Genesis 11:1-9 

 
'அமோரஸ் பெரோஸ்' என்று ஒரு மெக்சிகன் திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். வெவ்வேறு தளங்களில் இயங்கும் திரைக்கதையும் கதை மாந்தர்களும் ஓரு குவிமையத்தில் இணையும் கதை. தமிழில் மணிரத்தினம் இதே உத்தியை பயன்படுத்தி 'ஆயுத எழுத்து' என்ற திரைப்படத்தை  இயக்கினார். அலெஜாண்டிரோ கான்சலஸ் இனரி ட்டு இயக்கிய 'அமோரஸ் பெரோஸ' போன்ற கொலாஜ் ஒட்டுப்பட உத்தியை பயன்படுத்தி அவர் இயக்கிய மற்றொரு புதிய படம் 'பாபெல்'. சொர்க்கத்தை எட்டும் அளவுக்கு பாபெல் கோபுரத்தை கட்டத் துணிந்த மனிதர்களின் ஆணவத்தை அடக்க, இறைவன் பல்வேறு மொழிகளை உருவாக்கியதாகவும், ஒருவர் மொழி மற்றொருவருக்கு தெரியாததால், ஏற்பட்ட குழப்பத்தால்,

கோபுரம் கட்டும் பணி நின்று போனதாகவும் பழைய ஏற்பாட்டில் ஒரு கதை உண்டு. இதே போல் மனிதர்களுக்கிடையே தொடர்பியல் அறுந்தோ புரியாமலோ போனால் ஏற்படக்கூடிய குழப்பங்களை திரைக்கதையாக்கி இயக்கப்பட்ட திரைப்படம் 'பாபெல்'.

கிட்டத்தட்ட நான்கு கதைகளை வெவ்வேறு தளங்களில் உருவாக்கி ஒரு கண்ணியில் இணைக்கும் உத்தியை இயக்குனர் வெகு சுவாரசியமாகவும் பதைபதைக்கும் முறையிலும் கையாண்டிருப்பது, உலகம் முழுவதும் பேசப்படும் இந்த திரைப்படத்தின் சிறப்பு. 

ஒரு துப்பாக்கி இந்த சங்கிலித் தொடரை துவக்கி வைக்கிறது. மொராக்கோவில் ஒரு தந்தை தன் மகன்களுக்கு ஒரு துப்பாக்கியை விலைக்கு வாங்கித் தருகிறார். விற்பவன் ஒரு பழைய வேட்டை கைடு.  ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கு துப்பாக்கி, ஆடுகளை ஓநாய்களிடமிருந்து காக்கப்போகும் ஒரு ஆயுதம். சுட்டுப் பழகுகிறார்கள். அண்ணன் கொஞ்சம் மந்தம். தம்பி கொஞ்சம் சுறுசுறுப்பு அதிகம். சுட்டுக்காட்டுகிறான். வியாபாரி  சொன்னது போல் 3 கிலோமீட்டர் ஒன்றும் போகவில்லை. கீழே பள்ளத்தில் ஒரு பஸ் வருகிறது. விளையாட்டாக குறி வைத்து சுடுகிறான். பஸ் சிறிது தூரம் சென்று நின்றுவிடுகிறது. சம்திங் ராங் என்று இருவரும் அவசரமாக வீட்டுக்கு ஓடிவிடுகிறார்கள்.    இது ஒரு பகுதி.

பஸஸில் பயணிப்பவர்கள் எல்லோரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள். ஒரு அமெரிக்க தம்பதி  தாய் நாட்டில் குழந்தைகளை தாதியிடம் விட்டு விட்டு சொந்த சோகத்தை மறக்க சுற்றுலா வந்தவர்கள். திடீரென்று கழுத்தில் ரத்தம் வடிய மயங்கிச்சாய்கிறாள் மனைவி (கேட் பிளான்செட்). யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. குண்டுக்காயம் கண்டு குழம்புகிறார்கள். யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்? பக்கத்தில் மருத்துவமனைகள் கொண்ட பெரிய நகரங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கணவன் (பிராட் பிட்) மருத்துவ உதவிக்காக அலை மோதுகிறான். சுற்றுலா வழிகாட்டிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பக்கத்திலிருக்கும் அவனது கிராமத்திற்கு சென்றால் எதாவது டாக்டரை ஏற்பாடு செய்யலாம். பஸ் கிராமத்திற்கு செல்கிறது. தொலைபேசி மூலம் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டால், தீவிரவாதத் தாக்குதலாயிருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள். மொராக்கோ அதிகாரிகளுக்கு இந்த கருத்தோடு உடன்பாடு இல்லை. அங்கு தீவிரவாதக்கும்பல் ஏதுமில்லை என்று அவர்கள் கடுமையாக மறுக்கிறார்கள். இதனால் மருத்துவ உதவியையோ ஆம்புலன்ûஸயோ அனுப்ப தயக்கம் காட்டுகிறார்கள்.  இது ஒரு பகுதி.

 
அமெரிக்க தம்பதிகளின் குழந்தைகள் ஒரு மெக்சிகோ நாட்டு தாதியின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவளுக்கு முறையான பணி அனுமதி அங்கு கிடையாது என்பதை கூட அறியமாட்டாள். அவளுடைய ஒரே மகனுக்கு மெக்சிகோவில் திருமணம். குழந்தைகளை வேறு யாரிடமாவது விட்டு விட்டு செல்ல தயங்கும் நிலை. அவர்களின் பெற்றோர் அனுமதியின்றி அவர்களையும் தன்னுடன்

திருமணத்திற்கு அழைத்துச் சென்று விட்டு மறுநாளே திரும்பி விடலாம் என்று கருதி தன் மருமகனுடன் கிளம்பிச்செல்கிறாள். குழந்தைகளுக்கு மெக்சிகோ நாட்டு திருமணம் ஒரு புதிய அனுபவம். எங்கும் குடியும் கும்மாளமும், ஒரே மகிழ்ச்சிதான். தாதிக்கு பழைய காதலனுடன் ஒரு புதிய சந்திப்பு கூட ஏற்படுகிறது. திருமண சடங்குகள் முடிந்தவுடன் குழந்தைகளுடன் திரும்பச் செல்லவேண்டும். மருமகனோ முழு போதையில் இருக்கிறான். ஆனாலும் பிடிவாதமாக வண்டியை செலுத்துகிறான். வழியில் எல்லையை ஒட்டிய சுங்கச்சாவடியில் சோதனைக்குள்ளாகிறார்கள். தாதியிடம் முறையான பணி அனுமதி இல்லை. குழந்தைகளை எல்லை தாண்டி அழைத்து வர, பெற்றோரிடம் வாங்கிய அனுமதிக்கடிதமும் இல்லை. வண்டியோட்டியோ குடிபோதையில் இருக்கிறான். ஏகப்பட்ட சிக்கல்கள். மனம் குழம்பிய மருமகன் திடீரென்று வண்டியை கிளப்பிக்கொண்டு விரைகிறான். காவலர்கள் துரத்துகின்றனர். ஒரு காட்டுப்பகுதியில் தாதியையும் குழந்தைகளயும் இறக்கி விட்டு விட்டு காவலர்களுக்கு போக்குக் காட்டி விட்டு வருகிறேன் என்று சொல்லி ஓடிவிடுகிறான். காட்டுப்பகுதியில் குழந்தைகளுடன் இருட்டில் செய்வதறியாது நடக்கிறாள் வயதான தாதி.      இது ஒரு பகுதி.

ஜப்பானில் வாழும் சீகோ என்ற இளம் பெண்ணை சுற்றி அடுத்த பகுதி தொடங்குகிறது. பிறவி ஊமையான சீகோ, மனப்பிறழ்வின் தாக்கங்களோடு வாழ்கிறாள். சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட அவளது தாயின் மரணம் அவளை மிகவும் பாதித்திருக்கிறது. ஊனத்தின் காரணமாக இளைஞர்கள் அவளிடம் நெருங்குவதில்லை என்ற பெருங்கவலை பீடித்து, காமவேட்கையால் தவிக்கிறாள். இளைஞர்களை கவருவதற்கு அவள் செய்யும் சில செய்கைகள், இங்கே அச்சிட முடியாது. அவளுடைய தந்தையை விசாரிக்க சில காவல் அதிகாகள் அடிக்கடி வருகிறார்கள். தாயின் மரணம் குறித்து விசாரிக்கத்தான் வருகிறார்கள் என்று கருதி, அதில் ஒருவனிடம், அந்த தற்கொலை குறித்து புதிய ஒரு கற்பனைக்கதையை கூறுகிறாள். ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரியிடமே நிர்வாணமாக வந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி இறைஞ்சுகிறாள்.  மூலக்கதைக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் வரும் இந்த ஜப்பானிய பகுதியை இயக்குனர் எதற்காக சித்தரிக்கிறார் என்ற வினாவுக்கான விடை படத்தின் பிற்பகுதியில்தான் வருகிறது.

மொராக்கோ போலீசார் தீவிரமாக சம்பவம் நடந்த காட்டுப் பகுதியில் விசாரித்து வருகிறார்கள். துப்பாக்கி குண்டுகளிலிருந்து எந்த ரக துப்பாக்கியென்று அறிந்து, அந்த வகை யாரிடமிருந்தது என்று விசாரிக்கையில், துப்பாக்கியை விற்ற வேட்டை வழிகாட்டி சிக்குகிறான். அது கள்ளத்தனமாக வாங்கப்பட்டதல்ல என்றும், ஒரு ஜப்பானிய வேட்டைக்காரர் தனக்கு அன்பளிப்பாக கொடுத்தது என்றும் பதிலளிக்கிறான். இது தீவிரவாதிகளால் கள்ளத்தனமாக தருவிக்கப்பட்ட துப்பாக்கி அல்ல என்று நிரூபிப்பதற்காக, ஜப்பான் நாட்டு போலீசாருடன் தொடர்பு கொண்டு அதன் உண்மையான சொந்தக்காரரிடம் விசாரிக்க சொல்கிறார்கள். அவர்தான் ஒரு காலத்தில் வேட்டைப் பைத்தியமாக இருந்த சீகோவின் தந்தை! இந்த விசாரணையைத்தான் சீகோ தன் தாயின் தற்கொலையோடு குழப்பியிருக்கிறாள்.

 
அமெரிக்க தம்பதிகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது. உள்ளூர் மருத்துவர் உதிரம் வெளியேறாமல் இருக்க ஒரு தையல் போடுகிறார். வேறு எதுவும் செய்ய முடியவில்லை. பஸ்ஸில் வந்த மற்ற பயணிகள் பொறுமை இழக்கிறார்கள். பயணத்தை இவர்கள் இல்லாமல் தொடர முடிவெடுக்கிறார்கள்.

அவர்களுக்கு இது ஏதோ தீவிரவாதச்செயல் என்ற பயம் திகிலூட்டுகிறது. சுற்றி நிற்கும் கிராமவாசிகளிடன் மொழித் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. அவர்களை சும்மா பார்த்தாலே இவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தம்பதிகளை விட்டு விட்டு பேருந்தை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். காயம் பட்ட பெண் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள். சிறுநீர் கழிப்பது கூட பெரும் அவஸ்தையாக இருக்கிறது. கிராமத்து கிழவி, வலியை மறக்க ஒரு முறை ஓபியத்தை புகைக்க வைக்கிறாள். போதையில் வலி மறந்து உறங்கிப்போகிறாள் அவள்.

மெக்சிகோ எல்லைப்பகுதி. காட்டில் பசியால் வாடும் குழந்தைகளுடன் தவித்து நிற்கிறாள் தாதி.  மயங்கிக் கிடக்கும் அவர்களை ஒரு புதர் நிழலில் விட்டு விட்டு உதவி தேடி கடும் வெயிலில் கிளம்பிப்போகிறாள். திக்குத் தெரியாமல் தள்ளாடி அலைந்து திரியும் இந்தக் காட்சி பார்வையாளர்களை மிகவும் பாதிக்கக்கூடியது. காவலரிடம் மாட்டிக்கொண்டு, அவர்கள் துணையுடனேயே குழந்தைகளை தேடுகிறாள்.

காவலர்கள் விசாரணைக்குப்பின், தீவிரவாதச்செயல் எதுவும் இல்லை என்று தெரிந்ததால், மருத்துவ உதவி ஒரு வழியாக கிராமத்திற்கு செல்கிறது. ஆம்புலன்ஸ் உதவியுடன் நகரத்திற்கு எடுத்து வருகிறார்கள். 

காவலர்களின் தேடுதல் வேட்டை சிறுவர்களை நெருங்குகிறது. தகப்பன் பதறிப் போகிறான். பதற்றத்தில் மலைக்கு தப்பி ஓடுகிறார்கள். பின்தொடரும் காவலர்கள் சுடும்போது, சின்னவன் திருப்பிச்சுடுகிறான். சண்டையில் குண்டடிபட்டு பெரியவன் இறந்து போகிறான். மனம் உடைந்து துப்பாக்கியை உடைத்து விட்டு சரணடைகிறான் சிறுவன்.

குழந்தைகளை மீட்ட காவலர்கள், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தாதியை மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்புகிறார்கள்.

டோக்யோவில் வீட்டிற்கு திரும்பி வரும் தந்தையிடம் காவலர், துப்பாக்கி குறித்து விசாரித்து விட்டுப் போகிறார். பால்கனியில், பிரமாண்ட நகரத்தின் ஒரு சிறு துளியாக முழு நிர்வாணமாக நின்று கொண்டிருக்கும் மகளை தந்தை ஆசுவாசப்படுத்துகிறார்.

இந்த திரைப்படங்களின் சம்பவங்கள் எந்த நேர்க்கோட்டிலும் வருவதில்லை. முன் பின்னாக தொகுக்கப் பட்டிருக்கின்றன. முன்னே கூறியது போல் வடிவமற்ற ஒரு ஒட்டுப்படம். கதாபாத்திரங்கள் முழு வீரியத்துடன் படைக்கப்பட்டிருக்கின்றனர். நடிகர்களின் தேர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. அமெரிக்க தம்பதிகளாக தோன்றும் ஹாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் இந்த இயக்குனரின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் வந்தவர்கள்.  தமிழ்ப்படங்களில் வயதான நடிகர்களை பல கோடி ரூபாய் செலவு செய்து, இளமைத் தோற்றத்திற்கான ஒப்பனைக்காக படாத பாடு படுகையில், உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான பிராட் பிட் தன் இளமைத்தோற்றத்தை முற்றிலுமாக மறைத்து ஒரு நடுத்தர வயது தந்தையின் வேடத்தில் தோன்றுகிறார்.

ஆங்கிலம், ஸ்பானிஷ், அராபிக், ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் இந்தப்படத்தின் மற்றொரு சிறப்பு பார்வையாளனை பதைபதைக்க வைப்பதுதான். ஒவ்வொரு வினாடியும் நிம்மதியிழக்கச்செய்கிறது. காட்சி வடிவங்களும் கதாபாத்திரங்களின் ஒத்திசைவும் சேர்ந்து இந்தத் திரைப்படத்தை வெகு உயரத்திற்கு, ஆண்டவன் நிறுத்தி வைத்த பாபெல் கோபுர உயரத்திற்கு, கொண்டு செல்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------

 

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.