வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பார்வைக்கு வந்தவை
1
 
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  உலகப்படங்கள்
   
 
  Apacaylpto

ஓவியர் ஜீவா
     
  உலகப்படங்கள் முகப்பு  
   
   
       

பகலில் வந்த இரவு

A Film by W.Durant
Year --
Run time : --

“A great civilization is not conquered from without until it has destroyed itself from within”
                                                                                                                             --W.Durant

 
சின்ன வயதில் முத்து காமிக்ஸ், நான் தவறாமல் படித்து மகிழ்ந்த புத்தகங்களில் ஒன்று. பல வகையான உளவாளிகளும் சாகச வீரர்களும் விளையாடிய களம். பொது அறிவை திரைப்படங்களின் மூலமும் படக்கதைகளின் மூலமும் பெற்று வந்த சிறுவர்களில் நானும் ஒருவன். அந்த கதைகளில் ஒன்று ''தலை கேட்ட தங்கப்புதையல''. மெக்சிகோ தேசத்து மாயன் மற்றும் அஸ்டெக் நாகரிகங்கள் குறித்த அறிவையும் தேடலையும் துவக்கி வைத்த பலகணிக் கதவு அது. அதே போலத்தான் சாகசக் காட்சிகள் நிறைந்த ஆங்கிலப்படங்களும் பைத்தியமாய் அடித்தன. அன்று முதல் இன்று வரை எத்தனையோ அதிரடி நடிகர்களை பிற நாடுகளிலிருந்து ஹாலிவுட் ஸ்வீகரித்தது.

ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்த 'டிம்', 'மேட் மாக்ஸ்' படங்களில் நடித்து பெயர் பெற்ற மெல் கிப்சன் எண்பதுகளில் ஹாலிவுட்டில் புகழ் பெறலானார். 'மேட் மாக்ஸ்' பல பாகங்களாக வந்து பெரும் வெற்றியையும் அடைந்தது. பின்னாளில் பல ஹாலிவுட் நடிகர்களைப் போல மெல் கிப்சனும் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். 'பிரேவ் ஹார்ட்' ஒரு வீரனின் வரலாற்றை சொன்ன அற்புதமான படம். இயேசு கிறிஸ்துவின் கடைசி மணி நேரங்களை பதிவு செய்தது -'தி பேஷ்ஷன் ஆஃப் க்ரைஸ்ட்'. இதுவும் பல பாராட்டுக்களை குவித்த படம். இயேசு பட்ட துன்பங்களை ரத்தக்களரியின் வீச்சு பொங்க சொன்னது இந்தப் படம். சென்ற வருடம் நம் நாட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது ''அபகலிப்டோ''. 9 நூற்றாண்டுகளுக்கு முன் மெக்சிகோவின் மாயன் நாகரிகத்தின் கடைசி நாட்களில் நடைபெறுகிறது இதன் கதை.

மாயா நாகரிகம் பல உன்னத நிலைகளை அடைந்த ஒன்று என்பது சரித்திரம். இந்த சாதனைகளின் பின்னே வன்முறையும் அடக்குமுறையும் கலந்த உதிர மணம் இருப்பதும் உண்மை. இது எல்லா நாகரிகங்களுக்கும் அரசுகளுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றல்லவா.

கதை என்று சொல்வதை விட இரண்டு மூன்று நாட்களுக்குள் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு. தபியர் என்றழைக்கப்படும் காட்டுப்பன்றியை போல தோற்றமளிக்கும் வனவிலங்கை வேட்டையாடுகிறது ஒரு கானகக்குழு. மிகக் கொடூரமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பொறி அவ்விலங்கை குத்திக்கிழிக்கிறது. இதயம் ஒருவனுக்கு பங்கு. ஈரல் மற்றொருவனுக்கு. மனைவியை திருப்திப்படுத்த முடியாத ஒருவனுக்கு மிருகத்தின் விதைகள். குதூகலத்தின் நடுவில் ஒரு அவலக்காட்சி. பசியால் பீடிக்கப்பட்டு காட்டுக்குள் புலம் பெயர்ந்து செல்லும் ஒரு அகதிகள் கூட்டம் தென்படுகிறது. பயத்தில் உறைந்து போன கண்களுடன் யாடமிருந்தோ தப்பிச்செல்லும் அவர்களுடைய முகங்கள் 'சிறுத்தைப் பாதங்களின்' சிந்தையை பாதிக்கின்றன. அவனுடைய தந்தை அவனை தேற்றுகிறார் –''எக்காரணம் கொண்டும் அவர்களின் முகத்தில் தென்படும் பயத்தை உன் மீது சுமந்து கொள்ளாதே, அது உன்னை வீழ்த்தி விடும்''.

வேட்டைக்கறியுடன் குடியிருப்புக்கு திரும்புகின்றனர். நிறைமாத கர்ப்பிணி அவன் மனைவி, ஒரு குட்டி மகனும் உண்டு. அவனும் தன் மூதாதையர்களைப்போல் அந்தக்காட்டின் குடிமகனாய் வாழ வேண்டியவன்…இரவில் தூக்கம் வருவதில்லை. தந்தையின் ஆணைப்படி மறக்க வேண்டிய அகதிகளின் முகங்கள் கண்முன்னே நிழலாடுகின்றன. அந்த இரவு நேரத்தில்தான் ஜீரோ உல்ஃப் தலைமையிலான ஆக்கிரமிப்பாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து நாசம் செய்கிறார்கள். குடிசைகளுக்கு தீ வைக்கப்படுகிறது. சிறுத்தை பாதம் மனைவியையும் மகனையும் சிறுது தூரத்திலுள்ள ஒரு பாழுங்கிணறு போன்ற குழியில் மறைத்து வைத்துவிட்டு தன் சுற்றத்தாரை காக்க மீண்டும் வருகிறான். பெரும் சண்டையின் முடிவில் தந்தையின் கழுத்து அறுக்கப்படுகிறது. ''எதற்கும் அஞ்சாதே மகனே'' என்று கூறிவிட்டு இறந்து போகிறான் அவன். திடமான உடல் படைத்த ஆண்பெண் அனைவரும் கழியிலும் கயிற்றிலும் பிணைக்கப்பட்டு காட்டு வழியே இழுத்துச்செல்லப்படுகின்றனர்.. ஒரு கொடும் பயணம் ஆரம்பமாகிறது.

பொங்கி வரும் காட்டாறுகள், பயங்கரமான மலைச்சரிவுகள், வழியெங்கும் நிகழ்த்தப்பட்ட அழிவுகள், எரிந்த பின் காற்றில் பரவி நிற்கும் கரும்புகை, அழுகிக் கிடக்கும் மனித உடல்கள், கொடும் வியாதியால் பீடிக்கப்பட்டு மரணத்தை நோக்கி நிற்கும் மனிதர்கள்.

உடலெல்லாம் புண்ணாகிக்கிடக்கும் சிறுமியொருத்தி இவர்களை நெருங்கி வருகிறாள். மருந்தில்லா நோயை கண்டு அஞ்சி விலகிப்போ என்று அடித்து விரட்டுகிறார்கள். சன்னதம் வந்தது போல் அவள் சாபமிடுகிறாள். ''பகலில் ஒரு இரவு வரும். அதிலிருந்து எழுந்து வரும் மனிதனால் உங்களுக்கு அழிவு உண்டு. அவன் சிறுத்தையை ஏவி உங்களை அழிப்பான்'' என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அலறுகிறாள். பல உயிர்களை இழந்து விட்டு பயணம் ஒரு சுண்ணாம்புச் சுரங்கத்தில் முடிகிறது. ஏராளமான அடிமைகள் உடலெல்லாம் சுண்ணாம்பு தூள் பரவி, வாயிலிருந்து ரத்தம் வடிய அங்கு உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.

சுற்றுப்புறங்களெல்லாம் கட்டிடங்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன. மாயா நாகரிகத்திற்கே உரிய பிரம்மாண்டமான பிரமிட்டுகளும், அடிமைச்சந்தைகளும், சீமாட்டிகளும் பலி பீடங்களும் நிறைந்த காட்சிகள். 

கைதிகள் பிரமிட்டின் உச்சிக்கு கொண்டு வரப்படுகின்றனர். தலைமைப்பூசாரி வரிசையாக பலி கொடுத்துக்கொண்டு வருகிறார். வெட்டப்பட்ட தலைகள் படிக்கட்டுகளில் உருண்டு கீழே வருகின்றன. தலையற்ற முண்டங்கள் வீசியெறியப்படுகின்றன. தலைகள் மந்திரப்பொருட்களாக கூடைகளில் வாரி வைத்து பூசிக்கப்பட, சில தலைகள் அழுகி, உருகி, ஈட்டி முனைகளை அலங்கரிக்கின்றன.

இவன் முறை வருகிறது. பலிபீடத்தில் கிடத்தப்படுகிறான். வானம் இருள்கிறது. நிலவு சூரியனை மெல்ல மறைக்க, கிரகணம் ஏற்படுகிறது. பகலில் ஏற்பட்ட இருட்டு பீதியை கிளப்ப, பூசாரி இறைஞ்சுகிறான் - ''இறைவா, எங்கள் பலிகளை நீ ஏற்றுக்கொண்டுவிட்டாய் என்றால் மீண்டும் சூரியனை எங்களுக்கு கொடு'! கிரகணம் விலக எங்கும் ஆரவாரம் கிளம்புகிறது. பலி அத்தோடு நிறுத்தப்பட்டு இவர்கள் வேறு இடம் நோக்கி இழுத்துச்செல்லப்படுகிறார்கள்.

அது ஒரு நீண்ட மைதானம். மறுமுனையில் காடு தொடங்குகிறது. ஜீரோ உல்ஃபின் மகன் கட் ராக் அந்த எல்லையில் நிறுத்தப்படுகிறான். இரண்டிரண்டு பேராக அவிழ்த்து விடப்படுகிறார்கள். சீறி வரும் அம்புகளையும் கற்களையும் ஈட்டிகளையும், முடிந்தால் கட் ராக்கையும் தாண்டித்தான் காட்டுக்குள் செல்ல முடியும். செத்து மடிகின்றனர் கைதிகள். இவன் முறை வருகிறது, நேராகச் செல்லாமல் குறுக்கே பாய்ந்து பாய்ந்து ஓடுகிறான். மயிழையில் ஆயுதங்கள் தொடாமல் செல்கின்றன. அப்படியும் விலாவில் பாய்ந்த அம்பை, பிடுங்கி எறிகிறான். கட் ராக்கையும் கொன்று வீழ்த்திவிட்டு காட்டுக்குள் ஓடுகிறான். அங்கு ஒரு பரந்த வெளியில் ஈக்களின் காதை கிழிக்கும் ரீங்கார ஓசையின் பின்னணியில் நூற்றுக்கணக்கான தலையில்லா முண்டங்கள் புழுத்துக்கிடக்கின்றன. தாண்டி ஓடுகிறான். மகன் இறந்து கிடக்கும் காட்சி உல்ஃபை கடும் கோபத்திற்குள்ளாக்குகிறது. சிறுத்தைப்பாதத்தை கொன்றால்தான் அடங்கும் என்று குழுவினரோடு துரத்திச்செல்கிறான்.

இவனது வழியில் குறுக்கிடுகிறது ஒரு பெரும் நீர்வீழ்ச்சி. வேறு வழியில்லை, குதித்து விடுகிறான். பின் தொடர்ந்த கூட்டம் திகைத்து நின்றாலும் அவர்களும் பின்தொடர்ந்து குதிக்கின்றனர். தந்தையின் அறிவுரைகள் நினைவுக்கு வருகின்றன. ஆம், இது எனது வனம். இங்கு ஜெயிக்க வேண்டியது நான் என்ற உணர்வு பீறிட, ஒரு பெரும் ஜீவ மரண போராட்டத்திற்கு பின் மீண்டும் தப்பிச்செல்கிறான். மரத்தின் மீது பதுங்கியிருக்கும்போது ஒரு பெரும் கருஞ்சிறுத்தை தன் குட்டிக்கு அருகே இவனை பார்த்ததால் ஆங்காரத்துடன் துரத்திவருகிறது. ஓரிடத்தில் துரத்தல்களின் பாதைகள் இணைய எதிரிகளின் மீது அது பாய்ந்து ஒருவனை கொன்றும் விடுகிறது. தாக்கப்பட்டு அதுவும் இறந்து போகிறது. எதிரிகள் ஒவ்வொருவராக மடிய நேரிடுகிறது. பன்றிக்கு வைத்த பொறியில் சிக்கி முக்கிய எதிரியும் இறந்து போகிறான். பெருமழை பொழிய ஆரம்பிக்கிறது. குழந்தையுடன் கிணற்றில் தவித்த இவனது மனைவியும் மகனும் பசியால் துடிக்கிறார்கள். வெள்ளம் உள்ளே வடியும்போது, அவளுக்கு பிரசவ வலியும் ஏற்படுகிறது. நீருக்குள்ளேயே பிரசவித்து குழந்தையையும் கையில் எடுக்கிறாள். சரியான நேரத்தில் கணவன் வந்து தன் குடும்பத்தை மீட்டெடுக்கிறான். மீதமிருக்கும் இரண்டு எதிரிகள் இன்னும் துரத்தி வர, ஓட்டத்தின் இறுதி முடிவு கடற்கரையில் நிகழ்கிறது.

மற்றொரு நாகரிகத்தின் பிரதிநிதிகளாக சிலுவைகள் ஏந்திய வெள்ளையர்கள் கப்பலில் வந்து நட்புக்கரம் நீட்டி இறங்குகிறார்கள். எதிரிகள் இருவரும் அவர்களை நோக்கி ஸ்தம்பித்து நிற்க, இவர்கள் மட்டும் வரப்போகும் பதிய நாகரிகத்தை மறுத்து காட்டை நோக்கி திரும்பி நடக்கிறார்கள்.

மாயன் நாகரிகம் கட்டிடக்கலை, மருத்துவம், அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியிருந்தாலும், வன்முறையிலும், மூடச்சடங்குகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறது. இந்த மாறுபட்ட தன்மையை மிக எளிய ஒரு கதையில் பிரதிபலிப்பதில் இயக்குனர் பெரும் வெற்றியை அடைந்திருக்கிறார்

என்றுதான் சொல்ல வேண்டும். இவரது முந்தைய படமான ''பேஷன்னில்'' அராமிக் மற்றும் ஹீப்ரு மொழிகளையே கதாபாத்திரங்கள் பேசின. திரைப்பட பார்வையாளர்களுக்காக ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் இடப்பட்டன. அந்த மொழியையே பேசி நடிக்கும்பொழுதுதான் இயல்பாக இருக்கும் என்று மெல் கிப்சன் திடமாக நம்பினார். 'அபகாலிப்டோவில்' அதே போல் கதாபாத்திரங்கள் மாயன் மொழியையே பேசின. ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் உண்டு. இந்த உத்தி நம்மை திரைப்படத்துடன் ஒன்றிடச் செய்கிறது. அதே போல கணிப்பொறி சார்ந்த எபெக்ட்டுகளை விட செட்டுகள், மாடல்கள் என்று அமைத்து பழங்கால மெக்சிகோவை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தின் வளர்ச்சியும் அழிவும் வெளியார் கைகளில் இல்லை, அவர்கள் கையிலேயேதான் இருக்கிறது என்பதைத்தான் இந்த திரைப்படம் எளிய முறையில் சொல்கிறது.

மெல் கிப்சன் நிச்சயமாக உலகத்தரமிக்க இயக்குனர்களில் ஒருவராக தன் திரைப்படங்களில் மூலம் பரிமணித்து வருகிறார் என்பதற்கு இந்தப்படமும் ஒரு சான்று. இந்த படத்தை விமர்சிக்கையில் பல கேள்விகள் எழலாம். வானசாஸ்திரத்தையும் ஆராய்ந்த மாயன் நாககம், சூய கிரகணத்தை கண்டு அஞ்சியது ஏன் என்பதே ஒரு விசித்திரம்தான். இந்தப்படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் படம் முழுவதும் தெரிக்கும் உதிரம்தான். வன்முறையின் கொடும் வீச்சம் திணறடிக்கிறது என்றால் மிகையேயில்லை. கர்ப்ப வயிற்றின் உள்ளே நெளியும் குழந்தையின் கால் மேடிடும் இடங்களும், அவளுடைய பிரசவ வேதனையும் அவ்வளவு தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சியை படமாக்கியிருக்கும் விதமும் அற்புதம். நடிகர்கள் யாரும் நமக்கு எந்த விதத்திலும் அறிமுகமானவர்கள் இல்லை. மெக்சிகன் முகங்களும் கிட்டத்தட்ட இந்திய சாயலில் பெண்களும் புதிதாய் தெரிபவர்கள். தாட்சண்யத்திற்கு கூட மெல் கிப்சன் தன் முகத்தை காட்டவேயில்லை. ஒவ்வொரு சினிமா ரசிகனும் பார்த்து மகிழ வேண்டிய படம் இது.

 

----------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.