வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பார்வைக்கு வந்தவை
1
 
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  உலகப்படங்கள்
   
 
  Modern Times

ஓவியர் ஜீவா
     
  உலகப்படங்கள் முகப்பு  
   
   
       

ஒலியின் மீதான இறுதிப்போர்

A Film by
Year --
Run time : --


Charlie’s virtually unique ability to involve our emotions in what is essentially

a comedic context is extraordinary. It is,I suppose, due to the fact that he is not simply a comic and, as Sir. Laurance Olivier said “perhaps the greatest actor in the cinema,” but that, above all he is a clown.

Sir Richard Attenborough
From “private screening”
The american film insitiute

 
வறுமையை பறை சாற்றும் தொள தொள காற்சட்டை, வெவ்வேறு திசைகளில் நீட்டிக் கொண்டிருக்கும் பெரிய அளவு காலணிகள்: நாகரீகத் தோற்றத்திற்காக வட்ட தொப்பி, வளைந்த பிரம்பு, வாத்து நடையுடன் பாவமில்லா கண்களுடன் திரிந்து கொண்டிருந்த இந்த மனிதனை அறியாதவர் எவர்? நாடோடி தோற்றத்தில் இறவாப்புகழ் பெற்ற சாப்ளினின் திரைப்படத் தோற்றம் இந்த 'Tramp”

சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்களில் வரும் இருண்ட லண்டன் சேரிப் பகுதிகள்தான் இந்த சார்லஸ் பிறந்து வளர்ந்த இடங்களாகும். மேடைப் பாடகியான தாயாரின் ஆரோக்கியம் சீர் குலைந்த போது, சகோதரருடன் மேடையேறவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. அப்போது வயது 5 தான்.

இளமையில் வறுமையும் பசியுமே அவருக்கு உரமூட்டின. அவருடைய சுற்றுப் புறங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டதுதான் “tramp” பாத்திரம்.

சமூகத்தின் பலியாடுகளில் ஒருவன் தான் இந்த நாடோடி. ஆனால் தன் விதிக்கு அவன் எப்போதும் தலை வணங்குவதில்லை. நாடக மேடையில் “Pantomime”என்ற அபிநயக் கலையில் வித்தகராகத் திகழ்ந்து, பின்னர் மௌனப்படங்களில் அதே பாணியை தக்க வைத்து தனக்கென்று ஒரு இடத்தை தேடிக் கொண்டார் சாப்ளின். ஒரு ரீல், இரண்டு ரீல், நகைச்சுவைப் படங்களை ஏராளமான எண்ணிக்கையில் இயக்கினார். பின்னர் முழு நீளத் திரைப்படங்களையும் இயக்கிய போது பெரும் புகழடைந்தார். மிகை உணர்ச்சிகள் கொண்டவை, எளிமையான அரசியல், சமூக கருத்துகள் கொண்டவை, என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டாலும், சாதாரண மனிதனை கவரக்கூடிய “slapstick” வகை காமெடியும், அதிகாரத்தை கிண்டலடிக்கும் தோரணையும், அவருடைய திரைப்படங்களை வெற்றி படைப்புகளாக்கின. அமெரிக்கப் பள்ளத்தாக்குகளில் தங்கத்தை தேடியலையும் மாந்தர்களை பற்றிய கோல்டு ரஷ் (Gold Rush - 1925), ஒரு குருட்டுப் பெண்ணுக்கும் நடோடிக்கும் உள்ள அசாதாரண உறவைச் சொல்ல சிட்டி லைட்ஸ் (City Lights - 1931) தொழிற்புரட்சி காலத்தில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் மோதும் முஷ்டிகளுக்கு நடுவே சிக்கியிருக்கும் அப்பாவியின் கதையை சொன்ன மாடர்ன் டைம்ஸ் (Modern Times- 1935), ஹிட்லரை, அவன் காலத்திலேயே கிண்டல் செய்து எடுக்கப்பட்ட தி கிரேட் டிக்டேட்டர் (The Great Dictator - 1940) என்று அவருடைய பயணம் நீண்டது. பேசும் பட காலத்திலும் மார்லன் பிராண்டோ, சோபியா லாரன் போன்ற நட்சத்திரங்களை பயன்படுத்தி நிறைய திரைப்படங்களை இயக்கினார். சிட்டி லைட்ஸ் மட்டும் நம் நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை நகலெடுக்கப்பட்டு ஏதாவது ஒரு மொழியில் வந்து கொண்டேயிருக்கிறது. T.R.ராமச்சந்திரன் நடித்த “ராஜி என் கண்மனி” தொடங்கி தமிழில் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் வெளிவந்துவிட்டன. ராஜி என் கண்மனியில், சார்லி சாப்ளின் சிட்டி லைட்ஸ்க்காக இசையமைத்த பின்னணி இசையை பிரதியெடுத்து, மல்லிகைப் பூ வேணுமா என்ற பாடலும் வெளியிட்டனர். இந்தி மொழியில் இயக்குனர் ராஜ்கபூர், தன் பங்குக்கு “tramp” கதாப்பாத்திரத்தை ஆவாரா, ஸ்ரீ 420, போன்ற படங்களில் இந்தியப்படுத்தினர். 1920, 30 களில் சாப்ளின் தான் உலகத்திலேயே புகழ் மிக்க மனிதராய் திகழ்ந்தார். அவர் அறிமுகத்திற்காகவும், அவருடன் விருந்துண்ணவும் காத்திருந்த பெரிய மனிதர்கள் ஏராளம். பெர்னார்ட் ஷா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பண்டித நேரு என்று பெரிய பட்டியல். விதி விலக்காக மகாத்மா காந்தி மட்டும் யாரிந்த மிஸ்டர் சாப்ளின் என்று கேட்டாராம். பின்னர் இருவரும் சந்தித்தது நடந்த கதை.

ஓர் இயக்குனராக சாப்ளினுடைய திரைப்பட உத்திகள் மிகச் சாதாரணமானவைதான். நகைச்சுவைக்கு லாங்-ஷாட்; சோகக்காட்சிக்கு க்ளோஸ்-அப்! மாடர்ன் டைம்ஸில் வரும் வார்த்தைகளற்ற பாடலும், சறுக்கு விளையாட்டு காட்சியும் நல்ல உதாரணங்கள் – ஓடியாட நிறைய இடம் தேவையல்லவா: ஆகவே லாங்ஷாட். சிட்டி லைட்ஸில் சாப்ளின் பார்வை மீண்ட பெண்ணிடம் தன்னை வெளிப்படுத்தும் போது காமிரா மிக அண்மைக்கு பயணம் செய்து அந்த உணர்ச்சி மயமான காட்சிக்கு வலிமை சேர்க்கிறது. சாப்ளின் படைப்புகளில் ஒரு சோற்றுப் பதமாக மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தை பார்ப்போம்.

தொழிற்புரட்சியின் அப்போதைய உச்சகட்டம். பகாசுர எந்திரங்கள் இறைச்சலிடும் தொழிற்சாலை. ராட்சச பற்சக்கரங்களும் தொழிலாளர்களை முதலாளி கண்காணிக்கும் பெரும் திரைகளும் (கழிவறைகளிலும் உண்டு) சிக்கலான விசைகளும், சுற்றி சுற்றி ஓடும் கன்வேயர் பெல்ட்களும் கொண்ட கூடங்கள். ஓடிக்கொண்டிருக்கும் பெல்ட்டின் மீது பயணிக்கும் உதிரி பாகங்களின் போல்ட்டுகளை, ஸ்பானர் கொண்டு முடுக்கும் பணி சாப்ளினுக்கு. பக்கத்து தடியனுக்கு சம்மட்டியால் அதை அடிக்கும் வேலை. ஒரே லயத்துடன் செய்ய வேண்டும். கொஞ்சம் தவறினால் அல்லோலகல்லோலமாகிவிடும்.

 
பணி இடைவேளையில் உணவருந்தும் நேரத்தையும் மிச்சப்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கச்செய்ய, ஒரு புதிய சோறூட்டும் எந்திரம் தயாரிக்கப்படுகிறது. பரிசோதனை எலியாக சிக்குபவர் சாப்ளின் தான். கன்வேயர் பெல்ட் ஓடும் போதே, சாப்பாட்டு எந்திரம் சார்லி அருகில் உருட்டி செல்லப்படுகிறது. 1930 களின் வருங்கால மகத்தான படைப்பு வாய்க்கு நேராக நாலைந்து உணவுத் தட்டுகளுடன் ஒரு தட்டையான அமைப்பு.

அதில் செவ்வக இறைச்சித் துண்டுகள், ஒரு கோப்பை காபி, ஒரு உருளையில் செருகப்பட்ட மக்காச் சோளக் கதிர், சிறு துண்டு குழைந்த பாலாடை, உச்சகட்டமாக ஒரு நீள கைப்பிடியின் நுனியில் அமைந்த வாய் துடைப்பான், அதாவது ஒரு பிறைவடிவ கடற்பஞ்சு. முதலில் சாப்பாட்டு எந்திரம் சீராகத்தான் இயங்கத் தொடங்குகிறது. பணி புரிந்து கொண்டே சாப்ளின் சாப்பிட வைக்கப்படுகிறார். எந்திர வரிசை ஒலியெழுப்ப, முதலாளிகள் மகிழ்வுற, எந்திரத்தை வடிவமைத்தவர் பெருமையுற எல்லாமே சரியாகத்தான் ஆரம்பிக்கிறது…. பிறகு எந்திரத்தின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. மௌனப் படங்களுக்கே உரிய நகைச்சுவை வேகம் அரங்கேறத் தொடங்க எந்திரம் தாறுமாறாக இயங்க ஆரம்பிக்கிறது. இறைச்சித் துண்டுகள் நிறைந்து வழியும் வாயில் மேலும் மேலும் திணிக்கப்பட சூடான காபி உடலை நனைக்க, முகமெங்கும் பாலாடை எறியப்பட. கடைசல் எந்திரத்தில் சிக்கியது போல் மக்காச் சோளமும் பற்களும் மோதிப் போராட, இடையிடையே முகம் துடைப்பான் முகத்தில் அறைய, குழப்பத்தின் உச்ச நிலை. இந்த குழப்பத்தின் பின்னே நடிகர் சாப்ளின் தான் நம் நினைவில் நிற்க, இயக்குனரை நாம் மறந்து போய் விடுகிறோம். யாருக்கு வெற்றி?

கன்வேயர் பெல்ட் காட்சிகள் Choreography என்றழைக்கப்படும் நடன அமைப்புக்கலையின் உன்னத உதாரணங்களாகும். முகத்தை சுற்றும் ஒரு ஈயை விரட்டும் போது, ஒரு விநாடி லயம் தவறிவிட ஏற்படும் தவறுகள், தொடர் தவறுகளையும், பெரும் குழப்பங்களையும் சேதங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. மனம் பிறழ்ந்து விடுகிறது நாயகனுக்கு. ஒரு அழகான பாலே நடனத்தை நிகழ்த்திய படியே, முடிந்த அனைத்தையும் சாப்ளின் ஸ்பானரால் முடுக்கியபடியே செல்லும் காட்சி உலக சினிமா வரலாற்றில் செதுக்கிய சித்திரம்.

மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வருகிறார் சாப்ளின். தெருவில் செல்லும் சரக்கு லாரியிலிருந்து அபாய அறிவிப்பு செங்கொடி கீழே விழுந்து விட, அதை கையில் ஏந்தி லாரி டிரைவரிடம் ஒப்படைக்க சாப்ளின் விரைகிறார். அதே சமயம் ஒரு தொழிலாளர் போராட்ட ஊர்வலம் பின்னால் வருகிறது. கையில் செங்கொடி ஏந்திய சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தலைவரைப் போல் தோற்றம் தர நேர்கிறது. காவலர்கள் கொடியை பிடுங்க முயல, வேறொருவர் உடைமையான அதை சாப்ளின் தர மறுக்க, போலீஸ் வண்டிக்குள் தூக்கி எறியப்படுகிறார். புரட்சி வீரனுக்கு சிறை வாசம்.

அப்போதும் சிறைக்குள் போதை மருந்துகள் உலாவி வருகின்றன. தவறுதலாக சாப்ளின் உப்புக்கு பதில் ப்ரௌன் சுகரை தூவி சாப்பிடுகிறார். போதை தலைக்கேறியவுடன், சிறைக்குள் வேறு சிலர் நிகழ்த்தும் தப்பித்தல் முயற்சியை விளையாட்டாகவே தடுத்து விடுகிறார். சிறைக்குள் ராஜ மரியாதை கிடைக்கிறது. கதை இப்படி சென்று கொண்டிருக்கையில் நமக்கு கதாநாயகியும் அறிமுகமாகிறாள். சுதந்திரப்பறவையாய் திரியும் இந்த இளம் பெண், படகுத்துறையில், உணவுக்காக சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறாள். அவள் தந்தை வீதி ரகளை ஒன்றில் கொல்லப்பட, சட்டம் அவளையும் சகோதரர்களையும் தத்தெடுக்கிறது. அவளோ தப்பித்து வீதிக்கு ஓடுகிறாள்.

இங்கே பொறுப்பான கைதி சார்லிக்கு விடுதலை. நன்னடத்தை சிபாரிசு கடிதத்துடன் வேலை தேடி வெளியே வருகிறார். எங்குபோனாலும் அப்பாவித் தனத்தினால் பிரச்சனைகள். படகுத் துறைக்கு வேலைக்கு போய், ஒரு சின்ன ஆப்பை உருவி எடுத்தால், ஒரு கப்பலே கடலுக்குள் சென்று விடுகிறது. ஆகவே மீண்டும் போலீஸ் வண்டிக்குள் விசிறி அடிக்கப்படுகிறார். ரொட்டி திருடி மாட்டிக் கொள்ளும் கதாநாயகியும் அதே வண்டியில். முதல் சந்திப்பு நிகழும் போதே ஒரு சாலை விபத்து; இருவரும் மீண்டும் வீதிக்கே வருகிறார்கள். ஏழ்மையின் அவலங்களில் இருந்து காதல் மலர்கிறது. எதிர்கால கனவு இல்லம் கற்பனையில் நிகழ்கிறது. ஜன்னலில் நீளும் மரக்கிளையிலிருந்து ஆப்பிள் ஒடித்து கடிப்பதும், கதவு நிலைக்கு வெளியே படரும் திராட்சைக் கொடியிலிருந்து பழம் பறித்து விழுங்குவதும். வாசலில் நின்று பசு தானே மடியில் பாலை பீச்சியடிப்பதுமான இன்பக் கனவு. கனவும் பசி சார்ந்ததாக இருக்கிறது. கோல்ட் ரஷ்ஷில் பசிக் கொடுமையில் தன் காலணியை வேக வைத்து தின்னும் அவலக்காட்சிக்கு சரியான மாற்றாக அமைகிறது இந்தக் காட்சி.

ஷெரீஃபின் சிபாரிசுக்கடிதம் ஒரு பல்பொருள் அங்காடியில் இரவுக் காவலாளி வேலை வாங்கிக் கொடுக்கிறது. வேலை கிடைத்த மறு நிமிடமே பின்வாசல் வழியே, காதலியை உள்ளே அழைத்துச் சென்று, அவள் வயிறு நிறைய கடைப் பண்டங்களை கொடுத்து பசியாற்றுகிறார். இந்த பல்பொருள் அங்காடிக் காட்சிகளை மறக்க முடியாதவையாக இயக்கியிருப்பார் சாப்ளின். ரோலர் ஸ்கேட்டிங் சக்கரங்களை காலில் பொருத்திக் கொண்டு, கண்ணையும் கட்டிக் கொண்டு, கைப்பிடிச் சுவரில்லா மாடியில் சாப்ளின் களிக்கும் சறுக்கு விளையாட்டு ஒரு அற்புத சாகசம், காதலியின் பசியாற்றிவிட்டு, ஒரு பஞ்சணையில் படுக்கவும் வைத்து விட்டுத் தான், தன் பணியையே தொடங்குகிறார். முதல் இரவே சோதனையாக அமைகிறது. கள்ளர்கள் அங்காடிக்குள் நுழைந்து விட கைகலப்பு நிகழ்கிறது. அவர்கள் வேறு யாருமல்ல சாப்ளினுடன் முன்பு பணிபுரிந்து கதவடைப்பினால் வேலையிழந்த தடியன் வகையறாதான். பசிக் கொடுமை அவர்களையும் திருடத் தூண்டிவிட்டது. கள்ளர்களுக்கு துணை போனதாக குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் காவல் வண்டிக்குள் தூக்கி எறியப்படுகிறார் சாப்ளின். சிறைவாசமும் விடுதலையும் தொடர்கிறது.

 
ஆலை மீண்டும் திறக்கப்படுகிறது. தலைமை மெக்கானிக்கின் உதவியாளராக சாப்ளின் செய்யும் ரகளைகள் விலா நோகச் செய்யும். பல் சக்கரங்களின் விநோத இணைப்புகளில் சிக்கி மெக்கானிக் தவிக்கும் காட்சி, காண்பவர் சிந்தனையைத் தூண்டும்.

மீண்டும் தொழிலாளர் போராட்டம் வெடிக்க அனைவரும் மீண்டும் வீதிகளில்; காவல் வண்டியில்; இறுதியாக சார்லிக்கு விடுதலை.

காதலி இரவு விடுதியில் நடனம் ஆட, சூழ்நிலை சார்லியை பாடகராக்குகிறது. வார்த்தைகளற்ற கன்னா பின்னா பாடலொன்று அவர் தொண்டையிருந்து முதல் முதலாக வெளிப்படுகிறது. ஆம், பேசும் படத்தில் சார்லி சாப்ளின் குரல் ஒலிப்பது இப்போது தான், இந்தக் காட்சியில் தான்.

வழக்கம் போல் குழப்பமான சூழ்நிலையில் மீண்டும் வீதியில் எறியப்படுகிறார்கள். சாப்ளினுடைய அனைத்து படங்களிலும் இறுதிக் காட்சியில், தொடுவானத்தை நோக்கி வாத்து நடை போட்டுச் செல்லும் நாடோடி, இந்தத் திரைப்படத்தில் தன் இணையுடன் முதல் முறையாக நடந்து செல்கிறார்.

உலகத்தின் பழமையான ஒப்பனை அபிநயக் கலையின் அழிவைத் தான் பேசும் படங்கள் குறிக்கின்றன. அமைதியின் அழகை அவை அழித்தொழிக்கின்றன. என்று சொன்ன சார்லி சாப்ளின் பேசும் படங்களின் மேல் தொடுத்த இறுதிப் போர் தான் மாடர்ன் டைம்ஸ் என்று விமர்சகர்கள் கருதினர். அவர் பாடும் ஒரு அர்த்தமில்லா பாடலும், தொழிற்சாலை திரையிலும், ஒலி பெருக்கியிலும் கேட்பது மட்டுமே குரல்கள்.

மாடர்ன் டைம்ஸ் வெளியான போது பெரும் சர்ச்சைகள் எழுந்தன. கோமாளியை தத்துவஞானியாக்கும் முயற்சி என்றொரு குரல் எழுந்தது. பேசும் படங்களுக்கு ஈடு கொடுக்கத் தயங்கும் கோழை, பழமைவாதி என்றொரு குற்றச்சாட்டு. குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது என்றனர் சிலர். பாஸிச இத்தாலியிலும் ஜெர்மனியிலும் மாடர்ன் டைம்ஸ் தடை செய்யப்பட்டது. நவீன உற்பத்தித் திறன் குறித்த அங்கதம் சோவியத் ருஷ்ய அரசுக்கு அதிருப்தியைத் தந்தது.

சாப்ளின் விளக்கமளித்தார் ''அது என்னுடைய பழைய சார்லி பாத்திரம் தான். எந்த அரசியல் நோக்கமும் எனக்கில்லை. ஒழுங்கு படுத்தப்பட்ட வாழ்க்கை முறை மனிதர்களை இயந்திரங்களாக்குவது குறித்த எனது பார்வைதான் இத்திரைப்படம்.''

அமெரிக்க பஞ்ச காலத்தை ஒட்டியிருந்தாலும், மாடர்ன் டைம்ஸின் முக்கிய குணாம்சங்களாக திகழும் ராணுவ பாணியிலான தொழில் நிர்வாகம், கிளர்ச்சிகள், போராட்டங்கள், ஊர்வலங்கள், நகர்புறமாக, அரசு மற்றும் சமூக நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற கடுமை, பொருத்தமாகத் தான் இருக்கிறது. உணவுக்காக செய்யப்படும் திருட்டை நியாயப்படுத்துதல் போன்றவை, இந்த கால பின்னணியில் பார்த்தாலும் மிகவும் சரியாகத்தான் தோன்றுகிறது.

‘மாடர்ன் டைம்ஸ்’ எக்காலத்திற்கும் பொருந்தும் திரைக்காவியங்களில் ஒன்று!

----------------------------------------------------------------------------------------------------------------------------

 

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.