வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பார்வைக்கு வந்தவை
1
 
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  உலகப்படங்கள்
   
 
  LIFE IS BEAUTIFUL

ஓவியர் ஜீவா
     
  உலகப்படங்கள் முகப்பு  
   
   
       

வாழ்க்கை அழகானது

A Film by
Year --
Run time : --

“When, in 1933, the then Minister of propagands, Joseph Goebbels, offered me the leadership of the German film industry, I left the Country that Same evening and did not return until 1958, From that moment I never spoke again the German language.”
                                                                                                                             -  Fritz lang

 
இரண்டாம் உலகப்போர் சென்ற நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதனை பின்புலமாக அமைத்து, ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் தயாரி க்கப்பட்டன. அமெரிக்க, ஆங்கில, ஐரோப்பிய, ருஷ்ய திரைப்படங்கள் நமக்கு நிறைய காணக்கிடைத்தவை. நமக்குக் கிடைத்ததெல்லாம் நேச நாடுகளின் சார்பான திரைப்படங்களே!நாஜிஸம், பாசிசம் என்ற கொள்கைகளை தூக்கிக் பிடித்தவர்களின் சார்புத் திரைப்படங்களை காணக்கிடைத்திருக்கிறதா நமக்கு? முசோலினியின் பாசிச இத்தாலியிலும், ஹிட்லரின் நாஜி ஜெர்மனியிலும், அவர்கள் வீரத்தையும், ஆரிய இனத்தின் மேன்மையையும் போற்றும் திரைப்படங்கள், இரண்டாம் உலகப்போருக்கு முன்பாகவே ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

கட்சி பிரச்சார நிபுணர்களுக்கு திரைப்பட ஊடகத்தில் அனுபவம் இல்லாததால், நாஜி பிரச்சாரம் பத்திரிகைத் துறையினரால் திரைப்பட வடிவமாக்கப்பட்டது. பின்னர் டாக்டர் ஜோசப் கோயபல்ஸ் அரசியல் அரங்கிற்கு வந்தபோது, நிலைமை மாறியது. ஹிட்லரைப் போல் அவரும் ஒரு திரைப்பட ரசிகர்; மேலும் ருஷ்ய மக்களின் மீது ருஷ்யப் புரட்சித் திரைப்படங்களின் தாக்கத்தை உணர்ந்து, அது போல் ஜெர்மன் திரைப்படங்களையும் சக்தி மிக்க பிரச்சார சாதனங்களாக்க திட்டமிட்டார். அவருடைய முயற்சியால் தேசிய திரைப்படக்கழகம் உருவாக்கப்பட்டு பிரச்சார அமைச்சரவையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயக்கப்பட்டது. தயாரிப்பு விநியோகம், திரையிடம் அனைத்தையும் இந்தக் கழகமே கையாண்டது. கதைகளும், திரைக்கதைகளும் அனுமதி பெறவேண்டியவையாயின. முடிக்கப்பட்ட திரைப்படங்களையும் பார்வையிட்டு அனுமதி தந்தவுடன்தான் திரையிட முடியும். செய்தித் தொகுப்புகளில்தான் பிரச்சாரத்தை முழுமையாக செய்யமுடியும் என்பதால் 45 நிமிட நியூஸ் ரீல்கள் தயாரித்து வெளியிடப்பட்டன. பாவம் மக்கள்! நீண்ட ராணுவ அணிவகுப்புகள், ஆர்ய இனத்தவர்களின் உடல் வலிமையையும் வனப்பையும் பறைசாற்றும் விளையாட்டுப் போட்டிகளும், ஜெர்மன் பெண்களின் மேனி உறுதி அத்லெடிக் பயிற்சிகளும், ஹிட்லர் மற்றும் அவர் ஆட்சியின் மீதும் மயாதையையும், பெருமிதத்தையும் பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்தின.

ஆனால் இவையெல்லாம் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நம் நினைவிலும் சரித்திரத்திலும் தங்கியவை வேறு வகைப் படங்களே. சமீபத்தில் வெளியான La vitae’ bella (life is beautiful) ஒரு குறிப்பிடத்தக்க இத்தாலிய திரைப்படம். எந்த போர்க்காட்சியும் இடம் பெறாத இரண்டாம் உலகப் போர் பின்னணியில் ஒரு அற்புத வாழ்க்கைச்சித்திரம். திரைப்படம் முழுவதும் போர், இனவெறி அவலப்பின்னணியில் நகைச்சுவையும், மனித வாழ்வின் நம்பிக்கையும் விரவிக் கிடக்கிறது. “பினாச்சியோ”, அஸ்டெரிக்ஸ் ஆபிளிக்ஸ் போன்ற திரைப்படங்களில் நாம் கண்டிருந்த ராபெர்ட்டோ பெனிக்னி, கதாநாயகனாக தோன்றி, படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். சாப்ளின் யுகத்தை நினைவூட்டக்கூடிய பாத்திரப் படைப்புகள். சிறந்த படம், சிறந்த நடிகர், இயக்குனர், திரைக்கதை, இசை போன்ற 7 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, சிறந்த அயல் மொழிப்படம் என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்தப் படத்தின் கதைதான் என்ன?

“ஒரு பழங்கதை போல் சோகம் இருக்கிறது. ஒரு பழங்கதை போல் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் இருக்கிறது” என்ற முன்னுரையுடன் 1939, இத்தாலியில் கதை தொடங்குகிறது.

தன் நண்பனுடன் கார் பயணத்தில் இருக்கிறான் கைடோ. வண்டியில் பிரேக் பழுதாகிவிடுகிறது. வழியெங்கும் அது தொடர்பான நகைச்சுவை நிகழ்வுகள், விபத்துக்கள், பழுது பார்க்க நிறுத்திய ஓரிடத்தில் கதாநாயகியுடன் முதல் சந்திப்பு. எப்போதும் குதூகலம் பொங்கி வழியும் கைடோ, அவளை இளவரசியென்றே விளையாட்டாக அழைக்கிறான்.

நகரத்தில் ஒரு புத்தகக்கடை திறக்கும் உத்தேசத்தில் இருக்கும் கைடோ, அதிகாரியை கேலி செய்ததாக அனுமதி மறுக்கப்படுகிறான். கைடோவின் தனிக்கட்டை மாமா, தன் பழைய வீட்டை அவன் தங்குவதற்கு தருகிறார், “கரிபால்டி இந்த கட்டிலில் படுத்ததாக ஒரு கதை உண்டு?” என்று கூறும் அவர், தான் சர்வராக பணிபுயும் விடுதியிலேயே அவனுக்கும் வேலை ஏற்பாடு செய்கிறார். வெவ்வேறு திடீர் சந்தர்ப்பங்களில் கதாநாயகி டோராவை சந்திக்கிறான் கைடோ. அவன் மீது இவனுக்கு கடும் ஈர்ப்பு. விடுதி வாடிக்கையாளர் டாக்டர் லெஸ்ஸிங்குடன் பழக்கம் ஏற்படுகிறது. அவர் ஒரு குறுக்கெழுத்து வெறியர். சாப்பாட்டை மறந்து புதிர்களை விடுவிக்கும் சிந்தனையில் தன்னை மறப்பவர். கைடோ அவருக்கு ஈடு கொடுக்கும் புத்திசாலி. “ஜீனியஸ்” என்றே அவர் அவனை அழைப்பார். இருவருக்கும் இனம் தெரியாத நட்பு. ஆம்! அவர் ஜெர்மானியர். இவன் யூதன். ஒரு நாள் ஒரு பள்ளி ஆய்வாளர் உணவருந்த வருகிறார். டோரா பணிபுயும் பள்ளியில் ஆய்வு செய்ய வந்திருப்பதாக அறியும் கைடோ, அவளை சந்திக்கும் ஆவலில், அவருக்கு முன்னதாகவே பள்ளிக்கு ஆய்வாளர் வேடத்தில் செல்கிறான். “ஆரிய இனத்தின் மேன்மை குறித்து” மாணவர்களிடம் உறையாற்ற வேண்டிய கட்டாயம். ஆரியர்களின் தொப்புள் முடிச்சு வலுவானது: அவிழ்க்க முடியாதது, ஆகவே மேன்மையானது என்ற ரீதியில் இவன் பேசிக்கொண்டிருக்க, உண்மையான ஆய்வாளர் வர, இவன் தப்பிக்க என்று ஒரே களேபரம்! இடையிலேயே ஞாயிறு அன்று டோரோ நாடகம் பார்க்க போவதை அறிந்த கொண்டு அரங்கத்திற்குப் போகிறான். பால்கனியில் இருந்த டோரா நாடகம் பார்க்க, தரைத்தளத்திலிருந்து கழுத்தை திருப்பி அவளையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் இவன். பக்கத்திலிருக்கும் பெண்மணி சந்தேகப் பார்வை வீச, ஒரு காதுதான் தனக்கு கேட்கும் என்பதால் அதை மேடையே நோக்கி வைத்திருப்பதாக சொல்கிறான்.

 
நாடகம் முடிந்து வெளியே வரும்போது கடும் மழை! டோராவுடன் வந்தவன் கைடோவின் பழைய எதிரியான அதிகாரி. அவன் காரை எடுத்து வருவதற்குள், நண்பனின் காரை எடுத்து வந்து அவளை உள்ளே ஏற்றி பறக்கிறான் கைடோ! அவள் செய்வதறியாது திகைக்க, தாறுமாறாக வண்டி ஓடுகிறது. மேற்கூறை பிரிந்து, ஸ்டீயரிங்கும் கையோடு வருகிறது.

மழை நீர் உள்ளே பாய, அவள் கேட்கிறாள், “எவ்வளவு நாளாக வண்டி ஓட்டுகிறாய்?” அவன் பதில்: “இப்போதுதான் பத்து நிமிடமாக!” ஸ்டீயரிங்கின் மேல் சீட் தலையணையை கவிழ்த்து கையில் ஏந்தி அவளுக்கு குடை பிடித்து வீட்டில் விடுகிறான். காதலையும் சொல்லாமல் சொல்கிறான்.

விடுதியில் பெரிய விருந்து. டோராவுக்கும் அதிகாரிக்கும் நிச்சயதார்த்தம்! கைடோவின் மாமா அழைப்பதால் வெளியே வருகிறான் அவன். அவருடைய அபிமான வெள்ளைக் குதிரை “ராபின் ஹøட்”. முழுவதும் பச்சை வர்ணம் அடிக்கப்பட்டு “யூதக்குதிரை” என்ற எழுதப்பட்டிருக்கிறது. இனவெறியின் முதல் நிழல் திரையில் நம் முன்னே கவிகிறது!.

விருந்தில் முதல் முத்தம் பரிமாறப்படுகிறது. மேஜைக்கு அடியில்! யூதக்குதிரையை விடுதிக்குள் ஓட்டி வந்து அதன் மேல் டோராவை கவர்ந்து செல்கிறான் கைடோ.

ஆண்டுகள் கடந்து, குழந்தை ஜோஷøவாவுடன் சைக்கிளில் செல்கிறான் கைடோ. யுத்தம் மற்றும் இனவெறியின் அடையாளங்கள் திரையில் புலப்படுகின்றன. சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள், நடை பயிலும் ராணுவ வீரர்கள், “யூதர் கடை” என்று கதவுகளில் எழுதப்பட்ட கடைகள்… சில கடைகளில் “யூதர்களும் நாய்களும்” உள்ளே நுழையக்கூடாது என்று அறிவிப்புகள். சின்னப் பையனுக்கு புரியவில்லை. அப்பா விளக்கமளிக்கிறார். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அங்கு ஒரு கடையில் “சீனர்களும் கங்காருகளும்” நுழையக்கூடாது என்றும் “இன்னொரு கடையில் சிலந்திகளும் ஜெர்மானிய பழங்குடிகளும் நுழையக்கூடாது” என்றும் எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் சகஜம் தான் என்று சொன்னவுடன் பையன் சமாதானமாகிறான்.

ஒருநாள் டோரா வீடு திரும்புகையில் எல்லாம் கலைந்து கிடக்கிறது. கைடோவும் மகனும் ராணுவ லாரியில் ஏற்றப்பட்டு யூத முகாமுக்கு அனுப்பப்பட்டதாக கேள்விப்பட்டு பதறுகிறாள். அவளும் வலிய முகாமுக்கு கிளம்புகிறாள். நாஜிஸத்தின் கொடிய கரங்கள் யூதர்களை உலுக்க அரம்பிக்கும் காட்சிகள் தொடர்கின்றன. முகாம்கள், சித்ரவதைகள், விஷவாயு அறைகள் என்று அந்த சூழ்நிலையிலும் தன் மகனிடம் தாங்கள் உல்லாசப்பயணம் வந்திருப்பதாகவும், ஒரு விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், ஜெயித்தால் பரிசாக ஒரு ராணுவ டாங்கி கிடைக்கும் என்றும் சொல்லி நம்ப வைக்கிறான். இடர்கள் சூழ்ந்த நிலையிலும் தன் குதூகலத் தோற்றத்தையும், நகைச்சுவை உணர்வையும், தன் மகனின் பார்வையிலிருந்து அகலா வண்ணம் பார்த்துக் கொள்கிறான். ஒரே முகாமில் இருந்தும் மனைவியை சந்திக்க முடியவில்லை! பழைய குறுக்கெழுத்து நண்பர் மருத்துவ அதிகாரியாய் பணிபுரிய வந்தவுடன் கிடைத்த சலுகையால், கேஸ் சேம்பருக்கு செல்லாமல் தப்பித்து அதிகாரிகள் கேன்டீனில் சர்வர் வேலை கிடைக்கிறது. இந்தச் சலுகையால் மனைவிக்கு பிடித்த பாடல்களை ஒலிபெருக்கியில் ஒலிபரப்புவதன் மூலம் தன் இருப்பை அவளுக்குத் தெரிவித்து விடுகிறான். மகனோ இவையேல்லாம் விளையாட்டின் ஒரு பகுதி என்றே நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறான். டாக்டர் லெஸ்ஸிங் ரகசியமாய் அவனை சந்திக்க வேண்டும் என்று செய்தி அனுப்ப, பெரும் மகிழ்ச்சியும், விடுதலை தாகமும் நிரம்பி வழிய அவரை சந்திக்கிறான். அவரோ, ஒரு புதிரின் விடை காணத்தான் அவளை அழைத்திருக்கிறார். அவருக்கு மனநிலை பிறழ்ந்து பித்து தலைக்கேறியிருப்பது கண்டு நொந்து போகிறான் கைடோ.

 
மகனின் தனிமை கண்டு நொந்து போய் ஒருநாள் அவனுடன் தப்பிக்க முயல்கிறான். முகாமின் சுழலும் ஒளிப்பாதையிலிருந்து தப்பி, மகனை ஒரு இரும்புப் பெட்டியில் மறைத்து விட்டு மனைவியைத் தேடி அலைகிறான். முயற்சி தோல்விடைந்து, சுழல் விளக்கின் ஒளிக்கதிர் அவன் மேல் பாய்கிறது.

சிக்கிக் கொள்கிறான். சிப்பாய்கள் இழுத்துச் செல்கிறார்கள். மகன் ஒளிந்திருக்கும் பெட்டியை கடக்கும்போது, இடுக்கு வழியே அவன் பார்த்துக் கொண்டிருப்பான், என்று உணர்ந்து கோமாளிபோல் வாத்து நடை பயில்கிறான். விளையாட்டின் ஒரு பகுதியல்லவா! ஒரு சந்து திருப்பத்தில் திரும்பியவுடன் வேட்டுச் சத்தம் கேட்கிறது.

குழந்தை பெட்டியிலிருந்து காலையில் வெளியே வருகிறான். எங்கும் புகை மண்டலம்! போர் முடிந்து விட்டது. ஒரு ராணுவ டாங்க் வருகிறது. விளையாட்டு முடிந்து வெற்றி கிடைத்துவிட்டது. என்று சிறுவன் மகிழ்கிறான். டாங்கிலிருந்து வெளிப்படும் அமெக்க வீரன் அவனை அள்ளி அணைத்து அழைத்துச் செல்கிறான். விடுதலையான யூதர்கள் சோர்ந்துபோய் சாலையில் நடந்து செல்கையில் அவர்களில் தாயை அடையாளம் கண்டு மகன் அழைக்கிறான். “அம்மா, விளையாட்டில் நாம் ஜெயித்துவிட்டோம்!”.

இநத படத்தை பார்க்காதவர்கள் உடனே பார்த்து விடுங்கள்..பார்த்தவர்கள் மீண்டும் ஒரு முறை பாருங்கள்…அற்புதமான அனுபவம். இந்த காலகட்டத்தின் இன்னொரு பகுதியை நகைச்சுவையாக சொன்ன இன்னுமொரு நல்ல படம் மெல் ப்ரூக்ஸின் – 'டு பி ஆர் நாட் டு பீ'.

----------------------------------------------------------------------------------------------------------------------------

 

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.