உள்ளது உள்ளபடி இங்கு பதிவுகள் இடப்படும். அவற்றை படித்து, அந்த படத்தை பார்ப்பதா வேண்டாமா, என மக்களே தீர்மானம் மேற்கொள்ளட்டும். எங்கள் பணி
அனைத்து திரைப்படங்களையும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது மட்டுமே.
திரைப்படங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகின்றன என்பது பலர் மனதில் எழும் வினாவாக உள்ளது. ஆனால் நம்மையும் அறியாமல் நமக்குள் திரைப்படங்கள் உண்டு பண்ணி இருக்கும் மாற்றங்கள் எண்ணிலடங்கா.
எப்போது நாம் நாகரீக மனிதனாக மாறிவிட்டோமோ!! அப்போதே நமக்கு ஒருவித பொழுதுபோக்கு தேவைப்பட்டது. அதற்காக தோன்றியதே திரைப்படங்கள். ஆனால் இன்றும் அவற்றை அப்படியே வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தினால் அது நமது பலவீனத்தையே காட்டும். எப்படி நாம் படிபடியாக பரிணாம வளர்ச்சி பெற்றோமோ அதுபோல் திரைப்படங்களும் பரிணாம வளர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
தொழில்நுட்பம், நடிப்பு, யதார்த்தம் என அனைத்து விதமான துறைகளிலும் உலகத்திரைப்படங்கள் வளர்ந்து உள்ளன. எனவே அது போன்ற திரைப்படங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருவதே இந்தப் பகுதியின் நோக்கம்.
இரானிய திரைப்படங்கள், பிரேசில் திரைப்படங்கள், கொரிய திரைப்படங்கள், ஆங்கிலத்திரைப்படங்கள், ஜப்பானியத் திரைப்படங்கள் போன்றவற்றை இனம்பிரித்து ஒவ்வொரு பிரிவாக இந்தப் பகுதியில் வழங்க உள்ளோம். இதுதவிர்த்து வாசகர்கள் தங்கள் மனம் கவர்ந்த திரைப்படங்கள் பற்றிய செய்திகளையும், நிழற்படங்களையும் எங்களுக்கு அனுப்பிவைத்தால் அவையும் இங்கு வெளியிடப்படும்.
|