கனடாவை கலக்கும் தமிழன்! - இசையமைப்பாளர் கபிலேஷ்வர்
 |
கபிலேஷ்வர். இளமையான இசையமைப்பாளர் துள்ளலான பாடலாசிரியர், இனிமையான பாடகர், தமிழின் முன்னணி பின்னணிப் பாடகிகளான சுசிலா, ஜானகி, சுவர்ணலதா, சுஜாதா, ஹரிணி, சின்மயி, மகாநதி ஷோபனா, பவதாரணி, சுசித்ரா அனைவரும் இவரது இசையில் இவருடன் பாடியுள்ளனர். பாடகர்கள் எஸ்.பி.பி., உன்னிகிருஷ்ணன், ஸ்ரீனிவாஸ், பிரசன்னா மற்றும் பலரும் இவரது இசையில் பாடியுள்ளனர். கனடா செல்லும் தமிழ் திரை உலகினருக்கு உறுதுணையாக இருப்பவர். மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, சுவிஸ், பிரான்ஸ், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள்
|
மத்தியில் இவரது இசை ஆல்பங்களுக்கு நல்ல வரவேற்பு உண்ட. புதிய புதிய திறமைசாலிகளை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்துவதில் எனக்கு விருப்பம், ஆசை என்கிறார் கபிலேஷ்வர்.
தற்போது கனடா நாட்டின் குடிமகனாக இருக்கும் இவர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் எனது சொந்த ஊர் பள்ளிப்படிப்பு அங்கேதான். எனக்கு சின்ன வயசிலே இசையின் மீது நிறைய ஆர்வம். எங்கப்பா ஒரு இசைக்கலைஞர். புல்லாங்குழல், மிருதங்கம், ஆர்மோனியம் சொல்லி கொடுப்பாங்க.
நான் முதல்ல ஜெயக்குமார், செந்தில்குமார் என்பவர்களிடம் இசை கற்றுக் கொண்டு பின் என் 15 வது வயதில் கனடாவில் குடியேறினேன். பின் கனடாவில் விஜயலட்சுமி ஸ்ரீனிவாசனிடம் இசை கற்றுக் கொண்டு, பாட்வின் மார்க்கரேட், பூவுஸ், பிராக்கர்ஸ் ஆகியோரிடம் வெஸ்டர்ன் இசையையும் கற்றுத் தேர்ந்தேன் என்கிறார்.
'காதல் நிலா', 'இதயம் உனதல்லவா', 'மலரே மௌனமா', 'சுவாசம்' உள்பட 12 ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன். அதோடு கனடாவில் தயாரான காதல் நயாகரா, உள்ளம் கவர்ந்தவனே, காதல் ஏஞ்சல், சுகம் சுகமே, கனடியன் காற்றாடி, உபசாந்தி போனற் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் என்று தன் இசை வரலாற்றை கூறுகிறார்.
கனடா நாட்டில் இசைக்காக பல விருதுகள் வாங்கி உள்ளேன். கனடாவின் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், மேயர், எம்.பி., கவுன்சிலர் என நிறைய பேர் என்னைப் பாராட்டி கௌரவித்துள்னர் என்று கூறும் அவர் சென்னை பற்றி பேசுகையில் நெகிழ்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் அவரது சகோதரி ஏ.ஆர்.ரெஹானா அவர்களும் நான் இசைத்துறையில் வளர எனக்கு நிறைய உதவி புரிகிறார்கள்.
என் இசை வளர்ச்சியை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு என்றும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஒருமுறை சென்னையில் ராமசந்திரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் எனக்கொரு ஆபரேஷன் நடந்தது. அப்போது எனக்கு உதவிய எம்.ஆர்.கேண்டீன் உரிமையாளர் ராஜமாணிக்கத்தையும் அவரது மகள் டாக்டர் அமுதவளளியையும் என்றும் நான் மறக்க முடியாது என்று கூறுகிறார்.
இப்ப உள்ள தமிழ் இசையமைப்பாளர்கள் எல்லாருமே தனித்தனி ஸ்டைல்ல கலக்குறாங்க. ரொம்ப சந்தோஷமான விஷயம் அது. முன்னாடி மியூசிக் டைரக்டர்ஸ் ரெக்கார்டிங் என்ஜினியர்களை நம்பிட்டிருப்பாங்க. ஆனா, அதை மாத்தி ஏ.ஆர்.ரகுமான் சார் புது டிரெண்ட் உருவாக்கி வைச்சாரு. டெக்னாலஜிய வச்சி அவர் மிகப் பெரிய சாதனைகள் பண்ணிட்டிருக்கார். அதைப் பின்பற்றிதான் யுவன், ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த் தேவா, இமான், ஹாரிஸ் ஜெயராஜ் அப்புறம் நான்... நாங்க எல்லாருமே பண்றோம்.
நான் பின்னணி இசையை கற்றுக் கொண்டது தேவா சார் குடும்பத்துக்கிட்டதான். சபாஷ்-முரளி அண்ணன் எனக்கு ரொம்ப பிரெண்ட்லியா சொல்லித் தருவாங்க. என்னுடைய இசையின் மூலமாக காது கேட்காதவர்களுக்கும், வாய்பேச முடியாதவர்களுக்கும், பார்க்க முடியாதவர்களுக்கும், நாடு விட்டு நாடு வந்து கஷ்டப்படும் தமிழர்களுக்கும் உதவுவேன் என்கிறார்.
தமிழ்ப் படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. வரப்போகிற புத்தாண்டில் நல்ல கதையாக தேர்வு செய்து தமிழக மக்களிடம் இசை அமைப்பாளராக நான் அறிமுகம் ஆனேன்.
திரவியம் தேடப்படும்...
|