வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      திரைச்சிற்பிகள்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  கலைஞர்கள்
  திரைப்பார்வை
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  வினா விடை
  புதியவர்கள்
  1
கட்டுரைகள்
  நிழற்படக் காட்சி
  ஊர் சுற்றலாம் வாங்க
 
1
வரலாறு
 
1
ஆவணங்கள்
  வெட்டிப்பேச்சு
  தமிழ்தாசன் பக்கங்கள்
  'நிழல்' பக்கங்கள்
  கேப்ரியெல் பக்கங்கள்
  திரைமொழி
  வெள்ளித்திரை
  வலைப்பூக்கள்
  படித்ததில் பிடித்தது
  நூல்வெளி
  இலக்கியம்
  மற்றவை
  தொடர்புக்கு
  கருத்துப்பதிவு
 

 

     
11
1
தமிழ்தாசன் பக்கங்கள்
1
 
1
முதல் முத்தம்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
 
முதல் முத்தம்
   
 

ஒரிஸ்ஸாவின் கந்தமால் மாவட்டம்.. இந்தியாவின் இறையாண்மையை அடிக்கடி சோதித்துப் பார்க்கும் ஓர் இடம். ஒரு சிறு வார்த்தைக் கூட அங்கு மிகப் பெரிய சாதிக்கலவரத்தை தோற்றுவிக்கும் வல்லமை உடையது. தமிழகத்தில் மளிகைக் கடை வைத்திருப்போரை செல்லமாக நாடார் அல்லது அண்ணாச்சி என்றுதானே நாம் அழைப்போம். இதே போல் அங்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் மளிகைக் கடை நடத்தி வருவார்கள். அவர்களின் சாதிப்பெயரை சொல்லி ஒரு கிலோ...... பொருள் கொடுங்க என்று சொன்னால் போதும்.. அவர் நல்ல மனநிலையில் இருந்தால் தப்பித்தீர்கள். இல்லையேல் ஏன் என் சாதிக்கறந்தான் இந்த மாதிரி மளிகைக் கடை வைக்கணுமா... என்று தொடங்கி மாவட்டம் முழுதும் பரவி மிகப்பெரிய சாதிக்கலவரம் ஆகிவிடும்.

கலிங்க நாடாக விளங்கிய ஒரிஸ்ஸா பல சிறப்புகள் வாய்ந்தது. ஆனால் நான் தற்போது அங்கு செல்வது அதன் சிறப்புகளை ஆராய அல்ல. அங்கு அடிக்கடி நடைபெறும் சாதி / மதக் கலவரங்களை ஒரு ஆவணப்படமாக பதிவு செய்யும் பணியை ஒரு நிறுவனம் எனக்கு அளித்துள்ளது. எனவே ஒரு சில நாட்கள் நான் எனது குழுவுடன் அங்கு பயணமாகிறேன்.

இந்த இயக்குனர் எனும் வார்த்தை எனக்குள் எப்போதும் கனன்றுக் கொண்டே இருக்கும். நான் ஒவ்வொரு முறை சோர்வடையும்போதும் என்னை மீண்டும் ஒளியுடன் திகழ செய்யும் வல்லமை பெற்றது இந்த வார்த்தை. சிறு வயதில் பெண்களை மாடல்களாக படம் எடுக்கும் காட்சிகளை பார்த்து, அந்த ஆளுமையில் மயங்கி இது போல் நாமும் வர வேண்டும் என்ற எண்ணத்துடன், தீவிர முயற்சியில் படித்து இயக்குனரானேன். மற்றபடி எனக்கு அப்போது இந்தத் துறையில் பெரிய ஆர்வம் ஒன்றும் இல்லை. ஆனால் இன்று இத்துறையை, நான் என் உயிரை விட அதிகமாக நேசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் அணு அணுவாக எனது வாழ்நாளை ரசித்து வாழ எனக்கு கற்றுக்கொடுத்தது இந்தத் துறை.

செய்யும் தொழிலை நேர்மையாக செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். அதனால்தான் இந்தத் திட்டத்திற்கு நான் தலைமை ஏற்றதும் இதுப் பற்றி பல ஆய்வுகள் செய்து மிக நேர்த்தியாக இதை செயல்படுத்த ஒரிஸ்ஸாவே மிகச் சிறந்த இடம் என இனம் கண்டு அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றேன்.

முதல் நாள் படப்பிடிப்பில்

கருத்து பதிவு
  வடிவமைப்பும் பராமரிப்பும்: விசை