வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய வணக்கம்.
தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருவதற்கு உங்களின் ஆதரவே மூலக்காரணம். எனவே வாசகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த மாதம் பல வினாக்கள் எங்களை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. அவற்றிற்கு விடையளிக்க வேண்டிய நேரம் இது.
தமிழ் ஸ்டுடியோ.காம் ஏன் தனது வாசகர்களுக்கு புத்தாண்டு, பொங்கல், குடியரசு நாள், போன்ற சிறப்பு மிக்க விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை?
தமிழ் ஸ்டுடியோவின் நோக்கம் இந்த சமூதாயத்தின் பல அறிய ஆவணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். குறும்பட ஆர்வலர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். இலக்கிய ஆர்வலர்களை போற்றிட வேண்டும். எனவே இது போன்ற விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதில் எவ்வித பயனும் விளைந்துவிடப் போவதில்லை. நாங்கள் வாழ்த்து சொல்வதனால் யாருக்கேனும் ஏதேனும் ஒரு வகையில் நன்மை ஏற்படுமாயின் நாங்கள் சொல்லத் தயார். சொல்லில் எங்களுக்கு நம்பிக்கையை விட செயலில் நம்பிக்கை அதிகம்.
தமிழ் ஸ்டுடியோ.காம் என்ன கால அளவில் புதுப்பிக்கபடுகிறது? ஏன் இன்னும் பல இணைப்புகள் நிறைவு செய்யப்படவில்லை?
வரவேற்பு கடிதத்தில் ஏற்கனவே நாங்கள் கூறியுள்ளோம். தமிழ் ஸ்டுடியோவின் ஒரு சில பகுதிகள் மாதமும், ஒரு சில பகுதிகள் வாரமும், ஒரு சில பகுதிகள் அதன் தேவைக்கு ஏற்ப புதுப்பிக்கப்படும் என்று. ஆனால் தொடர்களை பொருத்த வரையில் அது சார்ந்த படைப்பாளிகளை பொருத்தது. படைப்பாளிகளை வாரமோ அல்லது மாதமோ ஒரு உறுதியாக கட்டுரை தர வேண்டும் என்று யாராலும் பணிக்க முடியாது. எனவே அவர்கள் கட்டுரைகள் கொடுக்கும் கால நேரத்தைப் பொருத்து அந்தப் பகுதிகள் புதுப்பிக்கப்படும். மேலும், தமிழ் ஸ்டுடியோவின் இணைப்புகளை மீண்டும் ஒரு முறை பாருங்கள். இணைப்புகள் யாவும், பல அறிய செய்திகளைத் திரட்டும் முயற்சி. உதாரணமாக கொட்டகைகள் எனும் இணைப்பு, இப்பகுதியில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கொட்டகைகள் பற்றியும் தகவல் சேகரிக்கப் படுகிறது. இது எத்துனை சிரமம் என்பதை அது சார்ந்த வாசகர்கள் நன்கு அறிவார்கள். நாங்கள் முடிந்த வரை அனைத்துப் பகுதிகளையும் மாதம் ஒரு முறை புதுப்பிக்க முயற்சி செய்கிறோம். இனி வரும் காலங்களில், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் திங்களன்று தமிழ் ஸ்டுடியோவின் பெரும்பாலான பகுதிகள் புதுப்பிக்கப்படும். இதற்கு வாசகர்களின் முழு ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை. நீங்களும் உங்கள் பங்கேற்பை உறுதி செய்தால் தமிழ் ஸ்டுடியோ.காம் இன்னும் கூடுதல் வேகத்துடன் செயல்படும்.
தமிழ் ஸ்டுடியோ தனித்த ஓர் அமைப்பா? அல்லது வேறு எந்த நிறுவனத்துடனும் தொடர்பு உள்ளதா? அல்லது NGO போன்ற அமைப்புகளின் சார்பு தளமா?
தமிழ்ஸ்டுடியோ.காம் தனித்து செயல்படும் ஓர் அமைப்பாகும். அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்கிற எண்ணத்தால் பல்வேறு அமைப்புகள் நடத்தும் குறும்பட போட்டிகள், விழாக்கள், பயிற்சி பட்டறைகள் போன்றவற்றை அதன் வாசகர்களுக்கு தெரியப்படுத்துகிறது. தவிர தமிழ் ஸ்டுடியோ.காம் வேறு எந்த NGO அமைப்புகள், மற்றும் குறும்பட அமைப்புகளின் சார்பு தளம் அல்ல. அந்தந்த நிறுவனங்கள் நடத்தும் போட்டிகள், பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றுக்கு முழுக்க முழுக்க அந்த அந்த நிறுவனகளே பொறுப்பாகும். தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அதன் தனிப்பட்ட முயற்சியே.
தமிழ் ஸ்டுடியோ எனும், பெயரில் ஆங்கிலக் கலப்பு உள்ளது. தமிழர்களுக்காக தமிழில் நடத்தப் படும் இணையதளத்தின் பெயரில் ஏன் ஆங்கிலக் கலப்பு இருக்க வேண்டும்?
தமிழர்களுக்காக தமிழில் நடத்தப் படும் இணையதளமே தமிழ் ஸ்டுடியோ.காம் தமிழர்கள் நமது தளத்தை பார்வையிட வேண்டுமாயின் அதில் ஆங்கிலக் கலப்பு இருக்க வேண்டும். இல்லையெனில் இது வேற்று மொழி தளம் என்று பார்வையிடாமல் போய்விடுவர். (என்ன செய்ய தற்போதய நிலை இதுதான். உள்ளே அழைத்து வரும் யுத்திதான் இது. ஆனால் தளத்தில் முழு பொருளடக்கமும் முழுக்க முழுக்க முடிந்த வரை நல்ல தமிழிலேயே வழங்கப்படுகின்றது.
மேலும் தமிழ் ஸ்டுடியோ.காம் புதிதாக பயணக் கட்டுரைகள் என்கிற இணைப்பையும் விரைவில் ஏற்படுத்து உள்ளது. எனவே வாசகர்கள் தங்கள் பயண அனுபவங்களையும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
சென்னை மாநகரத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக கடந்த வார சென்னை என்கிற பகுதியும் இடம் பெற உள்ளது. எனவே சென்னையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாசகர்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடபு கொண்டு உங்கள் பகுதியின் நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். உங்கள் முதல் கட்டுரை சிறந்ததாக இருப்பின் நீங்கள் தமிழ் ஸ்டுடியோவின் நிரூபராக பணிபுரியும் வாய்ப்பும் ஊக்கத் தொகையும் கிடைக்கும். கிடைக்கும்.
|