கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

இன்றைய நிலையில் ஒரு குறும்படம் எடுப்பது என்பது யாருக்கும் எட்டாக் கனியல்ல. டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு எங்கோ ஒரு கிராமத்தின் மூலையில் இருக்கும் திரை ஆர்வலர்கள் கூட தங்கள் எண்ணங்களை குறும்படமாக பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனால் உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அவர்கள் பத்து வருடத்திற்கு முன்பு செய்துப் பார்த்த பரிசோதனை முயற்சிகளையே நாம் இப்போதுதான் தொடங்கி உள்ளோம் என்பது புலப்படும். குறைந்தபட்சம் இப்போதாவது தொடங்கியதற்கு மகிழ்ச்சி கொள்வோமாக..

ஆர்வத்தோடு இத்துறையில் நுழையும் ஆர்வலர்கள் தங்கள் எண்ணங்களை அழகாக பதிவு செய்கிறார்கள். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சோடைப் போனவர்களாக உள்ளனர். திரைப்படக் கல்லூரியில் படித்து வெளிவரும் மாணவர்கள் எடுக்கும் குறும்படத்துடன் இவர்களால் தொழில்நுட்ப ரீதியாக போட்டியிட முடியாது. மேலும் அனைவராலும் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்து விட முடியாது. பலருக்கு அது எட்டாக் கனி என்பதில் ஐயமில்லை. ஆனால் அத்தகைய ஆர்வலர்களை நாம் கண்டு கொள்ளாமலேயே விட்டுவிட்டால் இச்சமூகம் சிறந்த படைப்பாளிகளை இழந்து விடும். எனவே அத்தகைய ஆர்வலர்களை தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தும் முயற்சியே இந்த பகுதி.

திரைப்படக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களோடு தொழில்நுட்ப ரீதியாக போட்டி போடும் அளவுக்கு மாற்ற ஆர்வலர்களையும் உருவாக்கும் இந்த முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை.

இங்கு திரைத்துறையின் அனைத்துப் பிரிவுகள் பற்றியும் கற்பிக்கப்படும். தமிழில் எடுக்கப்படும் குறும்படங்கள் உலகத்தரமான தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இங்கு திரைப்படக் கலையை இணையதளத்தில் கற்றுக் கொடுப்பது நீச்சலடிக்க அஞ்சல் வழியில் கற்றுக் கொடுப்பதற்கு சமம் என்பதை நாங்க அறிவோம். எனவே இங்கு தியரி எனப்படும் பாடம் மாட்டுமே கற்றுக் கொடுக்கப்படும். ஒவ்வொரு மாதம் அல்லது காலாண்டுக்கு (பயிற்சி பெற விரும்புபவர்களின் விருப்பத்திற்கேற்ப) ஒரு முறை நேரடி வகுப்புகள் எடுக்கப்படும். இவ்வகுப்புகள் மூலம் நீங்கள் இங்கு கற்றுக்கொள்ளும் பாடங்களின் ஐயங்களையும் தீர்த்துக் கொள்ளலாம். மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் இவ்வகுப்புகள் ஒரு மாதம் ஒரு பயிற்சி என்கிற அடிப்படையில் நடத்தப்படும். உதாரணமாக மாதத்தில் ஒரு நாள் முழுதும் ஒளிப்பதிவு பற்றி பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மாதம் ஒரு நாள் முழுதும் படத்தொகுப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்படும். எனவே ஆர்வலர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
ஆசிரியர் பற்றி  
     
 

பேச்சால் அறியப்படுவது மொழி. ஆனால் கலையைப் பொறுத்தவரை உணர்வுகளும் கண்களும் மட்டுமே பேசும். திரைப்படத்திற்கு அத்தகையக் கண்களாக விளங்கக் கூடியவர் ஒளிப்பதிவாளர். இந்தப் பகுதியில் ஒளிப்பதிவு கலையை நமக்குக் கற்றுக் கொடுக்கப் போகிறார். ஒளிப்பதிவாளர் திரு. சி. ஜெ. ராஜ்குமார்

இனி அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

சி.ஜெ. ராஜ்குமார் இவர் P.S.G கல்லூரியில் மெக்கானிக்கல் பட்டயப் படிப்பு படிக்கும்போதே ஒளிப்படக் கலை மீது ஆர்வம் கொண்டு கல்லூரியின் மூலமாகவே பல போட்டிகளில் கலந்துக் கொண்டு தேசிய அளவிலான ஒளிப்படப் போட்டிகளில் பரிசுகளை வென்றதோடு உடன் படித்த மாணவர்களையும் ஒளிப்படக் கலை மீது ஆர்வம் கொள்ள செய்தார். பின்னர், திரைப்பட ஒளிப்பதிவை பெங்களூரில் S.J.P. கல்லூரியில் மூன்றாண்டுகள் படித்து முடித்தார்.

பின்னர், ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானிடம் "காதல் கோட்டை" படத்திலிருந்து "பாண்டவர் பூமி" படம் வரை சுமார் பதினைந்து படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர் ஒளிப்பதிவு செய்த "ஆயிஷா" திரைப்படம் லண்டன் மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. மேலும் தேசிய விருது பெற்ற "ஜானகி விஸ்வநாதன்" இயக்கிய "கனவு மெய்ப்பட வேண்டும்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விருதுகளும் பெற்றுள்ளார்.

இவர் ஒளிப்பதிவு செய்த மற்றொரு திரைப்படமான "மண்" இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் எடுக்கப்பட்ட முதல் படம். ரா. புதியவன் இயக்கிய இப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது. பெரியார் படத்தில் முக்கியமானக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தது இவரே.

சமீபத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த "என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்" எனும் குறும்படம் "பெர்லின் திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் பங்கேற்றுள்ளது. இது வரை வேறெந்த தமிழ் படங்களும் இப்பெருமையை பெற்றதில்லை. மேலும் இப்படம் உலக பல விருதுகளை பெற்றுள்ளது.

நம்முடைய தமிழ் ஸ்டுடியோவிற்காக திரு. சி.ஜெ. ராஜ்குமார் அவர்கள் கற்றுக் கொடுக்கும் இந்த ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தின் பாடத்திட்டங்கள்:

1. ஒளிப்படம் மற்றும் திரைப்படக் கலை வரலாறு.
2. கேமரா வகைகள்
3. பிலிம் தோற்றமும் வளர்ச்சியும்
4. பிலிம் வகைகள்
5. கேமராக் கோணங்களும், அதனை இயக்குதலும்
6. லென்ஸ் வகைகளும், அதன் செயல்பாடுகளும்

மேலும், திரைப்படத் தயாரிப்பின்

முன்னேற்பாடுகள் (Pre-Production)
படப்பிடிப்பு (Shooting)
இறுதிக் கட்டப் படப்பிடிப்பு (Post Production)

ஆகியவையும் இதில் அடங்கும். மேலும் நேரடி வகுப்புகள் நடைபெறும் நாட்களும் உங்களுக்கு அறிவிக்கப்படும்.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொழில்நுட்பம் TS ஒளிப்பதிவு தொழில்நுட்பம் வாயில்

வாசகர்களுக்கு நன்றி !!!

சி. ஜெ. ராஜ்குமார்  

அசையும் படம் ஆரம்பமானது தமிழ் ஸ்டுடியோவில். இப்போது புத்தகமாக வெளிவந்தர்கான முழு முதற் காரணம் தமிழ் ஸ்டுடியோவின் இணைய தல வாசகர்களே. இக்கட்டுரைகள் இணையத்தில் வந்தபோது அவற்றை படித்து கருத்துகள் பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி. நானே எதிர்பாராத வகையில் இப்புத்தகம் பரவலான வரவேற்பையும் நெகிழ்வான பல அனுபவங்களையும் தந்து வருகிறது என்கிற மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.

சி. ஜெ. ராஜ்குமார்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

4 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

இப்போதுதான் பல விஷயங்கள் புரிகிறது ராஜ்குமார்.. மிக எளிமையாக பாடம் கற்றுக்கொள்கிறேன். நன்றி.

அனுப்பியவர் Madhan DFT on Thursday, 8.07.10 @ 09:45am

camera article is like construction so strong&new in its ownway.

அனுப்பியவர் விஜய் on Friday, 9.07.10 @ 11:39am

thank you madan,vijay for your comments...kindly pass on to your all friends who love films&technology.

அனுப்பியவர் c.j.rajkumar on Wednesday, 28.07.10 @ 22:06pm

மிக்க நன்றி சார்... எனக்கு ஒளிபதிவாளர் ஆக வேண்டும் என்பது என் கனவு... அதற்கு முதல் படி அமைத்து தந்தத்ற்கு நன்றி... ஆனால் டெக்னிகல் விசயங்கள் மட்டும் தெரிந்தால் மட்டும் போதுமா..???
மேலும் நான் என்ன விசயங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் சார்...

அனுப்பியவர் வினோத் குமார். இரா on Wednesday, 7.12.11 @ 02:06am

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.