வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
சிற்றிதழ்கள் அறிமுகம்
1
 
1 சிற்றிதழ் -1
1
1 சிற்றிதழ் -2
1
1 சிற்றிதழ் - 3
1
1 சிற்றிதழ் -4
1
1 சிற்றிதழ் - 5
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  சிற்றிதழ்கள் அறிமுகம்
   
 
    தேடல்
ஆசிரியர்:
 எஸ். முருகன்

அறிமுகம் செய்பவர்: வலம்புரி லேனா

<--- வலம்புரி லேனா
   அட்டைப்படம் --->
 
       

பார்க்கப்போகும் சிற்ற்திதழ் "தேடல்"
இதன் ஆசிரியர்: எஸ். முருகன்

இந்த இதழை நமக்கு அறிமுகம் செய்பவர்: வலம்புரி லேனா

இதழ் முகவரி:

தேடல்,
34, வடக்கு ரத்தினசபாபதிபுரம் தெரு,
திருநகரம், அருப்புக்கோட்டை, 626 101,
செல்போன் 97889 66910



"தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்"

 
என்ற கவியரசு வைரமுத்துவின் அர்த்தம் நிறைந்த வரிகளை உரக்கச் சொல்லியபடி அருப்புக்கோட்டையிலிருந்து வெளிவரும் இதழ் `தேடல்’ 1998 தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய இவ்விதழ் இதுவரை 75 இதழ்களை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் மாத இதழாக வந்தது. இடையில் சிறிது காலம் தடைப்பட்டுத் தற்போது மீண்டும் தன் இலக்கியத் தேடலைத் தொடங்கியுள்ளது. சிறந்த சிற்றிதழுக்கான தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கப் பரிசினை இவ்விதழ் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சட்டைப்பைக்குள் வைக்கும் பாக்கெட் சைஸ் அளவில் 16 பக்கங்களுடன் வெளியானது, அட்டைப் படத்துடன் உள்ளே கவிதைக்குரிய படம், அல்லது ஓவியம் ஆகியவற்றோடு இருந்தது. தற்போது செய்தித்தாள் வடிவில் மாதப் பத்திரிகையாக வந்து

கொண்டிருக்கிறது. வாசித்து முடிக்க மிகக் குறைவான நேரமே செலவாகும். ஆனால் வாசித்து முடித்த பிறகு அதனைப் போல இரண்டு மடங்கு நேரம் நம்மை சிந்தனையில் ஆழ்த்திவிடும்.

காதல் சார்ந்த முதிர்ச்சியும் செறிவும் மிக்க கவிதைகள் இதழின் சிறப்பு என சொல்லலாம். அதற்காக சமூகம் சார்ந்த கவிதைகளிலும் குறை கொல்ல முடியாது; கன்னத்தில் அறைகிற கருத்துக்களை காகிதத்தில் இறக்கி வைத்திருப்பர்.

வாக்குறுதிப் புழுதிகளை
வாரியிறைத்துப் போயின
பிரச்சார வாகனங்கள்
வழக்கம்போல் எம்மக்கள்
ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்
ஓட்டுக்கு
எவ்வளவு தேறுமென!
அருணோதயத்தின் `வியாபாரம்’ என்ற இந்தக் கவிதை ஜனநாயகத்தின் கேலிக்கூத்தைச் சாடுகிறது.

அமரத்துவம் மிக்க காதலர்களையெல்லாம்
கவனத்தில் கொண்டு வந்தாய்
தத்துவங்கள் பல பேசி
சமாதானம் அடைந்தாய்
என்னிடம் பெற்ற யாவற்றையும்
திரும்ப தந்தாய்
உணர்வு கொன்று
உள்ளத்தைச் சிறை மீட்டாய்
எல்லாம் முடிந்ததென
இமை மூடித் திரும்பினாய்
அந்நொடி கசிந்த
உன் கண்ணீர்த் துளி
காட்டிக் கொடுத்தது
முழுதாய் என்னிடம் நீ
தோற்றுப் போனதை!

பாலப்பட்டி ஓவியர் என். அஞ்சுகத்தின் கவிதை இது. காதலர்களின் உன்னதமான பிரிவையும், அதில வெற்றி பெற்று நிற்கும் காதலையும் காட்சிப் படுத்துகிறது.

கவிதை நூல்களில் `படித்ததில் பிடித்தது’ என்று நல்ல கவிதைகளையும், `கேட்டதில் பிடித்தது’ என்ற திரை இசைப் பாடல்களில் நல்ல வரிகளையும் மறு வாசிப்புக்குத் தருகின்றனர்.

லட்சத் தீவும், காஷ்மீரும் பிரச்சனைக்குள் போய் சிக்கிக்கொண்ட வரலாற்று உண்மைகளை, தொடர் கட்டுரைகளாக்கியுள்ளனர்.

ப்ளக்ஸ் பேனர் வருகை ஓவியர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதை அவர்களின் நேர்காணல் மூலம் கருத்துக்கள் பெற்று வெளியிட்டுள்ளார் எஸ் முருகன்.

மு. முருகேஷ், புன்னகை சிவா, ஜே. தமிழ்ச் செல்வன், கவியோவியத் தமிழன், செங்கதிர்ச் செல்வன் ஆகியோரது கவிதைகள் நறுக்கென மனதில் குத்துகிறது.

இதழின் ஆசிரியர் எஸ் முருகன் ஓர் ஓவியர் என்பதால் இதழினை நுணுக்கமான, கலை நேர்த்தி மிக்க வடிவமைப்புடன் தயாரிக்கிறார். அருணோதயமும், பா. இராஜேந்திரனும் ஆசிரியர் குழுவில் துணை நிற்கின்றனர்.

கட்டுரை, கவிதை, சிறுகதை, தகவல் தொகுப்பு, உள்ளூர் செய்திகள் என இடம் பெற்றாலும் கவிதைக்கான நல்லதொரு தேடலை வாசகர்கள் மத்தியில் உருவாக்குகிறது.

இதழ் முகவரி தேடல், 34, வடக்கு ரத்தினசபாபதிபுரம் தெரு, திருநகரம், அருப்புக்கோட்டை, 626 101, செல்: 97889 66910

வாசகர்கள் சிற்றிதழ்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிற்றிதழ் பற்றிய அறிமுகத்தை தமிழ் ஸ்டுடியோ.காமிற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

thamizhstudio@gmail.com


அடுத்து...


கருத்து பதிவு

 

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.