வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
 

 

 

     
11
1
சிறுகதைகள்
1
 
1 கண்காட்சி
1
1 பாக்கெட் சாராயம்
1
1 லேசான தூறல்
1
1 அம்மாச்சி
1
1 மனிதம் நசுங்கிய...
1
1 வரன்
1
1 அம்மாசி
1
1 ஹாய்-டெக் மாப்பிள்ளை
1
1 பாராட்டு விழா
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1
1  
1
1  
1
1  
1  
1
1  
1
1  
1
1  
1  
1
1  
1
1  
1
1  
1  
1
 
  லேசான தூறல்
   
 

"சாரிப்பா மன்னிச்சுக்கோ.."

" செய்றதையெல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பா?.. "

" அதான் சொன்னேன்ல.. மறந்துட்டேன்... திருமண நாளை.."

" அப்ப இப்படியே ஒரு நல்ல  நாள்  பார்த்து என்னையும் மறந்துடுங்க.."

" ம். சரி.."

" என்னாஆஆஆஆ.....து?" 

" ம். இல்ல இல்ல ..கோவத்த பாரு.. ஆமா இந்த கோவத்தையெல்லாம் ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி காட்டல??"

" ம். பதில் சொல்ல மாட்டேன்.. "

" ஆமா.. ஏன்  காட்டலன்னா, நீங்க ஒழுங்க இருந்தீங்க.. இப்படி இல்ல.."

" பதில் சொல்லிட்ட.. கிகிகி.."

" போதும் சிரிப்பு.."

" அய்யோ என் வேலை அப்படிம்மா... புரிஞ்சுக்கோ."

" அதுக்காக நம்ம கல்யாண நாள்கூட மறக்குமா?.. எங்க அப்பா எவ்வளவோ பரவால்ல.."

" என்ன .. எல்லா நாளையும் மறந்துடுவாரா மொத்தமா?..கிகிகி"

" ரொம்ப கோபப்படுத்தாதீங்க.. இப்பவே நான் அப்பா வீட்டுக்கு போறேன்...1 வாரம்..க்ர்ர்ர்"

" ஆ..ஊ ன்னா அப்பா னு சொல்லி எதுக்கு கம்பேர் பண்ற... உங்க அப்பா ஓட்டை ரைஸ்மில் வெச்சுட்டு வீட்டுக்கு

பக்கத்திலேயே வண்டிஓட்டுறார், வக்கணையா 3 நேரம் சாப்பிட்டு தூங்கி... என் நிலைமை அப்படியா கணினி யை கட்டி அழுவுறேன்,

நேரம் காலம் இல்லாம.."

" சரி.சரி, என் தேவதையே, வழக்கம்போல வழியனுப்புவியாம்... "

" மரியாதையா போய்டுங்க, இன்னும் கோவம் வரதுக்குள்ள.. சே என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க.."

---------------------------------------------------------------------------------------------------------

மதியம்

தோழியுடன்...அரட்டை...

" நல்லா டோஸ் விட்டேன் .. பயந்துட்டாருப்பா.."

" அதானே .. அதெப்படி திருமண நாளை மறக்கலாம்.."

" ம். இப்பத்தான் திருப்தியா இருக்கு...ஆனா பாக்க பாவமாயும் இருக்கு வருக்கு வேலை அப்படி.."

" நீயும் கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாமோ என்னவோ.."

" சரி சரி அப்புரம் பேசுறேன்.,.சாயங்காலத்துக்கு ஏதாவது விசேஷமா ஸ்வீட் பண்ணனும்.."

"ம். விட்டுக்கொடுக்க மாட்டியே.."

---------------------------------------------------------------------------------------------------

சாயங்காலம்.. 

அலுவல் முடிந்து கோபத்துடன் வீட்டிற்கு வருகிறான் .

" கிளம்பு.."

" எங்க..?."

" ம். உங்க அப்பா வீட்டுக்குதான்.."

" ம். எதுக்குங்க."

" ம். காலங்காத்தால கோபப்படுத்தி மனுசன அலுவலகம் அனுப்ப வேண்டியது... அங்க போய் நான்

தப்பு தப்பா செய்ய வேண்டியது.."

" சரி அது காலையிலேயே முடிஞ்ச விஷயம்.. இப்ப போய்."

" அதெல்லாம் தெரியாது.. இன்னும் 1 வாரம் உங்க அப்பா வீட்டுலதான் .,.. அப்பதான் என்னால புராஜெக்ட் ஒழுங்கா முடிக்க முடியும்.."

" ச்......என்ன இது திடீரென்று..."

" இப்ப நீ கிளம்புறயா இல்ல நான் எடுத்து வைக்கவா?."

எரிச்சலுடன் எடுத்து வைக்கிறாள்..

காரை எரிச்சலுடன் ஓட்டிக்கொண்டே செல்கிறான்... அவளோ தொண தொணன்னு..

" சரி இப்பவாவது  ஒரு முடிவுக்கு வாங்க... ஏன் இந்த அவசரம்..."

"  நீ மட்டும் கோபப்ப்டலாம் நான் படக்கூடாதா.."

" அதுக்கு பழிக்குப்பழியா.. ?. சரி சாமி இனி கேட்கல போதுமா?."

" அதெல்லாம் போதாது.."

" அப்ப.. என்ன மன்னிப்பு கேட்கணுமா?.."

"  ம்.....ம்.. சரி ஆனா மன்னிப்பு  நான் சொல்ற மாதிரி சொல்லும்போது கேளு போதும்..."

" என்ன புதிர் போடுறீங்க?.. ஆமா கார் எங்க போகுது ஸ்டேஷன் போகாம..?."

"  பேசாம வா.."

" அட நீங்களே என்னை அப்பா வீடு வரை கொண்டு விடப்போறீங்களா??."

" இந்த தொண தொணப்பு தாங்காமதான் " பல்லை கடித்துக்கொண்டு...

" தங்காமதான்???"  பயத்துடன்...

" 1 வாரத்துக்கு.."

" 1 வாரத்துக்கு..?????"  திகிலுடன் 

" ஹஹஹஹா.."

"  நம்ம திருமண நாளை கொண்டாட ஊட்டி போறோம்....இப்ப உன் மன்னிப்பை தாராளமா இங்க தரலாம்.."


"..............:-)) "  நாணத்துடனும் பொய் கோபத்துடனும்......


--------------------------------------------------------------------------------------------------

சரி இப்படில்லாம் சர்பிரைஸ் கொடுக்காதீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க... தாய்குலத்துக்கு பிடிக்காது...:-)))

 -  சாந்தி

                                                                                                                                                                                    (முற்றும்)

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.