வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
சிகரம் தொட்டவர்கள்
1
 
1 டி. ஜி. லிங்கப்பா
1
1 டி. ஜி. லிங்கப்பா-2
1
1 டி. ஜி. லிங்கப்பா-3
1
1 டி. ஜி. லிங்கப்பா-4
1
1 டி. ஜி. லிங்கப்பா-5
1
1 சி. ஆர். சுப்பராமன்-1
1
1 சி. ஆர். சுப்பராமன்-2
1
1 சி. ஆர். சுப்பராமன்-3
1
1 சி. ஆர். சுப்பராமன்-4
1
1 சி. ஆர். சுப்பராமன்-5
1
1 சி. ஆர். சுப்பராமன்-6
1
1 சி. ஆர். சுப்பராமன்-7
1
1 சி. ஆர். சுப்பராமன்-7
1
1 எஸ்.வி. வெங்கட்ராமன்-1
1
1 எஸ்.வி. வெங்கட்ராமன்-2
1
1 எஸ்.வி. வெங்கட்ராமன்-3
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
 
  சிகரம் தொட்டவர்கள்
   
 
தொடர்கள் முதல் பக்கம்

டி. ஜி. லிங்கப்பா.- P.G.S. மணியன்

பழைய திரைப்பட பாடல்களை வானொலியின் திரைகானங்களிலோ பண்பலை வரிசைகளிலோ அல்லது தொலைக்காட்சிகளில் பழைய பாடல்கள் நிகழ்ச்சிகளிலோ தினம் ஒரு முறையாவது பி. சுசீலா "அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ" என்று தன்னுடைய குளுமை நிறைந்த குரலில் அழைக்க தவறமாட்டார்.

அந்த இனியபாடலுக்கு இசை அமைத்தவர்தான் டி.ஜி. லிங்கப்பா. அவரது தந்தையும் ஒரு இசை அமைப்பாளர்தான்.

பிரபல இசை அமைப்பாளர் டி. கோவிந்தராஜுலு நாயுடுவின் மகன் தான் டி. ஜி. லிங்கப்பா..

இவரது தந்தை டி. கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் இசை அமைப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள்:

1. மாய மனிதன்.
2. அந்தமான் கைதி (எம்ஜியார் நடித்த படம்)
3. மனிதனும் மிருகமும்
4. ராஜ பக்தி
5. கள்வனின் காதலி (சிவாஜி - பானுமதி)
6. நம் நாடு (பழைய படம்.)
7. பாக்தாத் திருடன் (எம்ஜீயார்-வைஜயந்திமாலா)
8. பத்தரை மாத்து தங்கம்.
9. சாந்த சக்குபாய்
10. வேடன் கண்ணப்பா.


தந்தையே ஒரு இசை அமைப்பாளராக இருந்த காரணத்தால் டி.ஜி. லிங்கப்பா அவரது தந்தையிடமே இசைபயிற்சி பெற்றார்.

திருச்சி சின்ன கண்ணம்மாள் வீதியில் இந்த குடும்பம் தங்கி இருந்தது. அங்குதான் எம். கே.. தியாகராஜ பாகவதர் அடிக்கடி பாடிக்கொண்டு இருந்தார். அந்த நாட்களில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் நாடகங்களுக்கு டி. கோவிந்தராஜுலு ஹார்மோனியம் வாசித்து வந்தார். மிகச் சிறந்த இசை வல்லுனரான கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் தான் தமிழ் இசை வித்தகி கே. பி. சுந்தராம்பாளுக்கு இசைப் பயிற்சி அளித்தவரும் கூட.

அதன் பிறகு பின்னாட்களில்...

இசைக் கருவிகளையும் கிராமபோன் ரிக்கார்டுகளையும் விற்பனை செய்து வந்தார் அவர். ஆனால் அந்த வியாபாரம் அவர் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அவருக்கு அளிக்கவில்லை. அதனால் அவர் கண்ட ஒரே பயன் அவரது மகனான லிங்கப்பா பலதரப்பட்ட வாத்தியங்களையும் லாகவமாக கையாளும் தேர்ச்சியை பெற்றதுதான்.

வாழ்வில் பசுமையை தேடி 1940௦ஆம் ஆண்டு கோவிந்தராஜுலு நாயுடு திருச்சியை விட்டு இடம் பெயர்ந்து சென்னைக்கு வந்தார்.

வந்தாரை வாழ வைக்கும் சென்னைப் பட்டினம் அவரை குடும்பத்துடன் இருகரம் நீட்டி வரவேற்றது. 

சிகரம் தொடுவோம்...அடுத்து
கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.