கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
தாகம் - குறும்பட விமர்சனம்

 

ஆர்.அபிலாஷ்  

எழுத்து, இயக்கம்: மா.யோகநாதன்
இசை: பா.சதீஷ்
படத்தொகுப்பு: பா.பிரமோத்
ஒளிப்பதிவு: சீ.அரவிந்த்குமார்

”தாகம்” ஒரு தேர்தல் பிரச்சார மைக்கை விட சத்தமான படம். மரம் வெட்டுதல் போன்ற இயற்கை அழிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இயற்கை வளங்களை, குறிப்பாக நீர்வளத்தை, கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிப்பதே இப்படத்தின் இயக்குநர் மா.யோகநாதனின் உத்தேசம். இந்த பரப்புரையில் இயக்குநர் இரு தவறுகள் செய்கிறார். சூழலியல் பிரச்சனை பன்முகத்தன்மை கொண்டது மற்றும் சிக்கலானது. உதாரணமாக, இந்த வருட கோடையில் வெப்பம் அதிகம் ஆனதற்கான காரணங்களில் அப்காகினிஸ்தான் போர் வரை அடக்கம். இயக்குநர் உலக வெப்பமயமாதலை ஒரு விவசாயி நுண்பேசி, கார், வீடு வாங்கி, சட்டை பேண்ட் அணிந்து தலை சிலுப்புவதற்காக பேராசைப்பட்டு சில மரங்களை வெட்டி விற்கும் பாவச்செயலின் விளைவாக சுருக்கி விடுகிறார். இப்படியான பாமர நம்பிக்கையை பரப்புவதற்காக கணிசமான பணம் மற்றும் மனித ஆற்றல் விரயமாக்கியுள்ள மா.யோகநாதன் அதற்கு பதில் சில மரக்கன்றுகளை நட்டு திருப்தி உற்றிருக்கலாம். அடுத்து சினிமாவில் அரைப்பக்க வசனம் கடத்தும் சேதியை ஒரு அரைநொடி நேர காட்சியால் மேலும் அழுத்தமாய் சொல்ல முடியும்.

சினிமாவின் குறிப்பிடத்தக்க சிறப்பே காட்சிகளின் மூலம் மொழியைக் கடந்து பார்வையாள மனதுடன் உரையாட முடிவது தான். ஆனால் மா.யோகநாதன் சினிமா மொழியை புறக்கணித்து வசனங்களின் சிலுவையில் ஏறிக் கொள்கிறார். உதாரணமாக முதல் காட்சியில் புயலடித்து மரம் சாய்ந்துள்ளதை நாயகனான அவினாசி கவனிக்கிறார். புயலின் பாதிப்பை காட்ட இலை தழைகளும், குப்பை பொருட்களும் சிதறிக் கிடக்கும் ஒரு காட்சி போதும். ஆனால் அவினாசியை “நேத்து புயலடிச்சிருக்கு போலே” என்று குளோசப்பில் சொல்ல வைக்கிறார் இயக்குனர். நல்லவேளை அவினாசிக்கு கோபமோ சிரிப்போ வருவது போல் காட்சியில்லை. இருந்தால் “ஆஹா எனக்கு கோபம்/சிர்ப்பு வருது போல” என்று சொல்ல செய்திருப்பார். அவினாசி புயலில் விழுந்த மரத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு தோட்டத்து மரமாக வெட்டி விற்கிறார். இப்படி அவர் பணத்தாசையால் பீடிக்கப்பட்டு இயற்கையை அழிப்பதை சொல்லவும் இயக்குநர் நிறைய காட்சிகளை வீணடிக்கிறார். இறுதியில் செல்லமுத்து என்ற கோமணதாரி ஒரு சொம்பு தண்ணீரில் குளிப்பதை காட்டி ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதை விளக்குகிறார். பின்னரும் திருப்தி அடையாமல் அவினாசி சூடாகி விட்ட தன் காருக்குள் ஊற்ற தண்ணீர் தேடி பொட்டல் வெளி எல்லாம் அலைந்து தளர்ந்து வீழ்ந்த பறவையை போல் மண்ணில் கிடப்பதை டாப் ஆங்கிளில் காட்டி முடிக்கிறார். அவிநாசி, அவரது தாய் முதல் சொம்பு நீரில் குளிக்கும் செல்லமுத்து வரை அனைவரும் படுமோசமாக நடித்திருந்தாலும் நம்மால் மன்னிக்க முடியாதது படத்தொகுப்பாளர் பா.பிரமோத்தை தான். ஓட்டைக் குடத்தால் மொண்டு மொண்டு ஊற்றினால் தாகம் எப்படி தணியும்

நச்சுனு ஒரு வார்த்தை : ஓட்டைக் குடத்தால் மொண்டு மொண்டு ஊற்றினால் தாகம் எப்படி தணியும்

abilashchandran70@gmail.com
thiruttusavi.blogspot.com

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

15 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

nice review.. sevli vimarsanam kooda nanraaga irundhadhu. abilash adutha ve.sa. superb.

அனுப்பியவர் Duraisami on Friday, 11.06.10 @ 10:43am

அடடா. இயக்குனர் மனம் என்ன பாடு படும்.. இருந்தாலும், இதுப் போன்ற விமர்சனங்கள் நிச்சமயம் தேவை. இந்த இயக்குனர் இதனை நிச்சயம் பொசிடிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்த்துகள்.

அனுப்பியவர் மனி on Sunday, 13.06.10 @ 08:35am

sondhak kasil soonyam vaithuk kondargalo? abilashin vimarsanam nach nu iruku.

அனுப்பியவர் Ramesh K on Sunday, 13.06.10 @ 22:28pm

abilash konjam adhikamagave thittuvadhaga thonrugiradhu. pavam pala ayirangal selavu seidhu eduthirupargal. ippadiya thittuvadhu. too much.

அனுப்பியவர் Madhan DFT on Sunday, 13.06.10 @ 22:42pm

ennanga aniyayama irukum. ipadiya eluthuradhu. anyway naan andhap padathai parkavillai. adhanal abilashai apadiye nammbi vida vendiyadhuthan. abilsh thodarungal.

அனுப்பியவர் Jothimani on Sunday, 13.06.10 @ 22:50pm

muttap payalgale ippadiya padam edukiradhu. indhap padathai nanum parthirukiren. abilash solvadhu unamaiye. anal enaku idhelam thonravillaiye. adhuthan eluthalanin vetri super abilash.

அனுப்பியவர் Muthu on Sunday, 13.06.10 @ 23:00pm

thodarndhu idhup ponru nalla vimarsanangal velivandhal kurumbadangal nalla muraiyil velivarum. ungal pani sirandhadhu.valthugal.

அனுப்பியவர் Manikandan J on Sunday, 13.06.10 @ 23:26pm

nice review.

அனுப்பியவர் durai on Monday, 14.06.10 @ 00:52am

thamizh thiraiyulagathirku matraga indhak kurumbadangal vara vendum.valthugal.

அனுப்பியவர் Sundar on Monday, 14.06.10 @ 02:24am

abilash idhellam konjam over!!! pavam indha kurumbada iyakkunargal.. eduthu vittuthan pogattume? adharkaaga ippadiya? enru oru kannottathil thonrinalum, indha vimarsanathai avargal nalla vidhathil eduthuk konru munnera vendum. neengal iyakunargalai seppanidum velaiyai parkkireergal. valthugal.

அனுப்பியவர் Anand on Monday, 14.06.10 @ 22:19pm

நல்ல விமர்சனம்.

அனுப்பியவர் கனெஷ் on Monday, 14.06.10 @ 22:39pm

ippadi thalaiyil kottinalthan ivargal thirundhuvargal. good abilash.

அனுப்பியவர் Desing on Tuesday, 15.06.10 @ 00:05am

enna irundhalum kurumbada iyakkunargalai parattuvadhe thagum. konjam parattivittuthan pongelen.

அனுப்பியவர் Ramesh on Wednesday, 16.06.10 @ 02:31am

தம்பி விமர்சனம் எழுதியதர்க்கு மகிழ்ச்சி,

உங்க விமர்சனதிர்க்கு பதில் கூடிய விரைவில் கிடைக்கும்......எனக்கு பதில் அனுப்ப நேரம் கிடைக்க வில்லை......

இப்படிக்கு
இப்படத்தின் இயக்குநர்,

அனுப்பியவர் மா.யோகநாதான். on Monday, 5.07.10 @ 19:12pm


விமர்சன நக்கீரரே ,
வணக்கமுங்க......தாகம் படம் ஒளிப்பதிவாளன் அரவிந்த் பணிவோடு எழுதுறேனுங்க .
நீங்க எழுதுன விமரசனத்த படிச்சி (தாகம் படம் பார்க்காத உங்க விமரசனத்த நம்புன குறும்பாடு கூட்டம்)
தங்கள பாராட்டுனவங்கள என்னத்த சொல்றதுங்க .......மந்தையில அப்படிதானுங்க இருக்குமுங்க ....
இந்த படம் எடுத்ததுக்கு இயக்குநர் நாலு மரக்கன்றுகளையாவது நட்ருக்கலாமுனு எழுதி இருக்கீங்க.....சரிதானுங்க ....ஆனா நீங்க எழுதறதுக்கு முன்னாடி இயக்குநர் யாருன்னு தெரிஞ்சுக்கனும்ங்க ....சரி அத கடைசில சொல்றேனுங்க ...

நீங்க ஒரு இலட்ச மரக்கன்றுகல நட்டு வளர்த்து ,இந்த இயற்க்கை சூழலுக்கு ஏதோ பெருசா செஞ்சது போல எழுதி இருந்தீங்க எதாவது இந்த இயற்கையை காப்பாற்ற செஞ்சுருகீங்களா ......? தெருஞ்சுக்குலாம்முனு தானுங்க ......

ஏன்னா எந்த ஆணியையும் புடுங்காம செய்யுற சுலபமான வேல விமர்சனம் தானுங்க ....நீங்க எழுதுனத திறனாய்வுனு வேற போட்ருக்காங்க......

பல பத்திரிக்கைகளும் பல லட்சம் பேர் பார்த்து இது படம் அல்ல பாடம் என்று சொன்னதை யாராலும் மறுக்க முடியாதுங்க ......

இருந்தும் ... இப்படத்தில் சில தவறுகள் இருப்பது எங்களுக்கும் தெரியும் ..... எங்களது நோக்கம் இயற்கையை காப்பாற்றுவதில் பெரும் பங்கு விவசாயிகளுக்கும் உண்டு என்பதை வலியுறுத்துவதுதான் . நீங்கள் சொல்வதைபோல இப்படத்தில் பன்முகத் தன்மையை நாங்கள் சொல்லாததற்கு காரணம் ....இங்கு மரத்தை வெட்டவேண்டாம் என்று சொன்னாலே காரணம் புரியாமல் மரத்தை வெட்டும் இக்கூட்டதிர்க்கு மத்தியில் இது போன்ற பிரச்சார படங்கள் தான் தேவை என்று நாங்கள் கருதினோம்.
நீங்க சொல்வதை போன்று பன்முகத்தன்மை வைத்து படம் எடுத்தால் உங்களைப்போன்று சில "அறிவு ஜீவிகளுக்கு"மட்டும்தான் புரியும் .

நீங்க எதாவது பன்முகத்தன்மையோடு படம் எடுத்திரிகீன்களா ? இல்லை ஒரு நிமிட குறும் படமாவது எடுத்துருக்கீங்களா ? தெருஞ்சுகலாமுன்னு தானுங்க ?

முட்டையே போடாம வலிக்குதுன்னு சொல்றது என்ன மாதிரி ஆளுங்களுக்கு புடிக்காதுங்க ?

நக்கீரரே........... செய்ய முடியாதவன் சென மாட்டை புடிக்குற மாதிரி ஆயிடகூடாதுங்க ......

அதனால தாங்க முன்கூட்டியே கேட்டுகுறேனுங்க ......

நான் மொதல்ல சொன்ன மாதிரி தாகம் படத்தின் இயக்குநரை பற்றி சில தகவல்களை சொல்றேனுங்க.....

1. இதுவரை ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு 70,௦௦௦௦௦ 000௦க்கு மேல் மரம்மாக்கி காட்டியவர்ருங்க ....

2 . 2008 இல் இதற்காக துணை ஜனாதிபதியிடம் பசுமைபோராளி (ECO WARRIOR ) விருது தென் இந்தியாவில் முதல் முதலில் பெற்றவறுங்க .....

3. 25 ஆண்டுகளா ஒவ்வொரு திங்கக்கிழமையும் பள்ளிக்கல்லுரிகளுக்கு சென்று மரம் நடுகிறப்பணியை செய்றவருங்க .....

4. இதுவரை எனக்கு தெரிந்தப்படி 2758 பள்ளிக்கல்லுரிகளுக்கு சென்று மரம் நட்ருக்காருங்க.......

5. இயற்க்கைக்கு எதிராக செயல் படும் நிறுவனங்கள் மீதும் மரம் வெட்டுவதை தடுக்கக் கோரியும் பல வழக்குகளை தொடுத்து வெற்றிகண்டவர் .............இந்த தாகம் படத்தோட இயக்குநருங்க.....


இனிமேல் நீங்க விமர்சனம் செய்யும் போது முழுமையாக படத்தை மட்டுமே விமர்சனம் செய்யுங்க... படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லைங்க .விமர்சனம் செய்வதில் மிகுந்த கவனமும் தொலை நோக்கு பார்வையும் வேண்டும். குறிப்பாக விமர்சனம் என்ற பெயரில் துணுக்குகளை எழுதக் கூடாதுங்க......

நன்றிங்க .....அபிலாஷ் ..








அனுப்பியவர் சி.சீ.அரவிந்த் குமார் on Wednesday, 7.07.10 @ 01:30am

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.