தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.
வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
தயாரிப்பு - ச…சு…கிரியேசன்ஸ்
ஒளிப்பதிவு – எஸ்.அரவிந்த்குமார்
படத்தொகுப்பு மற்றும் ஒலிச்சேர்க்கை
அ.சு.அருண்
கதை, திரைக்கதை, இயக்கம்
-கு. சண்முக சுதந்தரம்.
வருடம் -
கதைச் சுருக்கம்
கோவிலுக்கு வரும் பக்தர்கள், இறைவனிடம் பக்திகொண்டு வருவது கிடையாது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விண்ணப்பங்களை இறைவனிடம் கூறி அதை செய்தால் இதை செய்வேன் என்று பேரங்கள் வேறு பேசிவிட்டுச்செல்கின்றார்கள். இறைவனிடம் வரும் முரண்பட்ட பக்தர்களின் வேண்டுகோள்களை இந்தக்குறும்படம் சுட்டிக்காட்டுகின்றது.
ஒரு பணக்காரன் தன்னிடம் இருக்கும் பணம் திருட்டு போகக்கூடாது அதற்கு நீதான் துணை என வேண்டுவதும், திருடன் அந்தப்பணக்காரனிடமிருந்து திருடுவதற்கு நீதான் அருள்புரியவேண்டும் என வேண்டுவதும், பின்னர்வரும் காவற்துறை அதிகாரி அந்த திருடனை பிடிக்க துணைநிற்கவேண்டும் என வந்தனை செய்வதும் நச் என்று உள்ளது.