தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.
வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
ஓளிப்பதிவு – அரவிந்
இசை – அருள் ஆனந்தம்
ஓளித்தொகுப்பு – விஜயன்
கதை, திரைக்கதை,
வசனம், இயக்கம்
-ஏ.எம்.சரவணா
வருடம் - 2008
கதைச் சுருக்கம்
அறியாமை காரணமாக “தன் மகன்தானே அவனை நான் வேலைக்கு வைத்திருந்தால் என்ன தப்பு?” என கேள்வி கேட்டு மகனின் பாடசாலை கல்வியை மறுக்கும் தந்தையினுடைய அறியாமையை விலக்கி, இதுபோன்ற பல தந்தையர்களின் அறியாமையினை விலக்க முற்படும் குறும்படம் அறியாமை.
தாயை இழந்து தந்தையுடன், பாடசாலை கனவுகளுடன் வாழும் சிறுவன், தள்ளுவண்டியில் பழம் விற்று பிழைப்பு நடத்தும் தந்தை என இருவரையும் மையமிட்டு சுழல்கின்றது கதை.
நண்பர்கள், சுற்றத்தார்கள் சிறுவனை பாடசாலைக்கு அனுப்பும்படி கூறினால் கோபமடைகின்றார் தந்தை. இறுதியில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரியின் நிதானமான பேச்சு, அவருக்குப்புரியும்படியான அறிவுரைகளின்மூலம் திருந்தி, தனது மகன் பள்ளி செல்லும் அழகை இரசிக்கின்றார் தந்தை.