தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.
வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
தயாரிப்பு – சித்திரம் படைப்பகம்
ஒளிப்பதிவு – ஜோதிராஜ்
ஒளித்தொகுப்பு – ரியாஸ்
தயாரிப்பாளர் - லட்சுமிக்கண்ணு
எழுத்து, இயக்கம் - ரமேஸ்
வருடம் - 2009
கதைச் சுருக்கம்
கல்வியால் மட்டுமே மேன்நிலை அடையலாம், கல்வியில் திறமைகளை காட்டி சிறப்பான ஒரு நிலையினை அடையவேண்டும் என்ற தேடல் உடைய சிறுவன் வேலன் பற்றிய, மனதை உருக்கும் குறும்படம் தாகம்… பாடசாலையில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஏனைய மாணவர்கள் தடுமாறும்போது, எழுந்து திறமையாக பதில் சொல்கின்றான் வேலன். பாடசாலை தேர்வில் முதலாவதாக வருகின்றான் வேலன், ஆசிரியரின் பாராட்டை பெற்று ஆசிரியரின் அன்புக்குரியவனாகின்றான் வேலன். கல்லூரி ஆண்விழாவில் சித்திரம், பேச்சு, கட்டுரைப்போட்டி என அத்தனையிலும் வெற்றி பெற்று முதலாவதாக சிறப்பு பரிசும் பெறுகின்றான் வேலன்.
வேலன்!!! என்ற அதட்டலுடன் அவனது கவனவுகள் மட்டும் அல்ல பார்க்கும் எங்களின் கனவுகளும் தகர்கின்றது. ரீக்கடை ஒன்றில் இருந்து ரீக்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுசெல்கின்றான் அவன்.
அந்தநேரத்தில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை அத்தனை ஏக்கத்துடன் அவனது கண்கள் பார்க்கின்றது..
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.