தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.
வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
தக்கையின் மீது நான்கு கண்கள் (Thakkaiyin Meedhu Naangu Kangal)
கதிர்வேல் மாயதாஸ்
தயாரிப்பு- ரேணுகா வசந்த்
நடிகர்கள்- A K வீராசாமி, ராம்சரவணன்,விஜயாம்மாள்
ஒளிப்பதிவு - பிஜு விஸ்வநாத்
ஒலிப்பதிவு- ஹித்தேஷ் கிருஷ்ணா
படத்தொகுப்பு- சசிமேனன்
கலை- ராதாகிருஷ்ணன் மங்களாத்
இசை- அரவிந்த் சங்கர்
கதை- ச.கந்தசாமி
திரைகதை, வசனம்,இயக்கம்- வசந்த்
வருடம் -
கதைச் சுருக்கம்
இக்கால தலைமுறையால் எதுவும் செய்ய இயலாது என்ற பழமைவாதிகளின் நினைப்பை உடைத்தெறிந்திருக்கிறது இந்த தக்கையின் மீது நான்கு கண்கள்.
ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடக்கும் செல்ல சண்டைகள் தான் கதை. பல வருடங்களாக மீன்பிடி தொழில் செய்து வருபவர் பெரியசாமி, அவருடைய பேரன் ராமு. பெரியசாமி நீண்ட நாட்களாகவே பெரிய மீனை பிடிக்க வேண்டுமென முயற்சிக்கிறார். இதைக்கண்ட ராமு தானும் அந்த பெரிய மீனை பிடிக்கபோவதாக கூறி ஆற்றில் இறங்குகிறான். என்னாலையே அந்த மீனை பிடிக்க முடியல, இந்த சின்ன பயன் எங்க பிடிக்கப் போறான்? என்று ராமு மீது கடிந்து கொள்கிறார். பெரியசாமி மீனை பிடிப்பதற்குள்ளாகவே ராமு பிடித்துவிடுகிறான். இது மேலும் தாத்தாவை எரிச்சலடைய செய்கிறது.
ராமுவை கன்னத்தில் அறைகிறார். பேரன் பிடித்த மீனை பாட்டி சமைத்து கொடுக்க அதை பெரியசாமி சாப்பிட மறுக்கிறார். பிறகு பெரியசாமி மனம் வருந்தி தனது மீன்பிடி வலையை ராமுவிடம் கொடுத்தனுப்புகிறார்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.