கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

 

 

 

 
     
     
     
   
பயிற்சி பட்டறைகள்
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS   பயிற்சி பட்டறைகள் பயிற்சி பட்டறைகள்
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ - திரைப்பட ரசனை பயிற்சி வகுப்பு.
ஆதவன்  


நாள்: 26-11-2011, சனிக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் (10 AM)

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

பயிற்சிக் கொடுப்பவர்: ஆர்.ஆர். சீனிவாசன்

நன்கொடை: ரூபாய் - 250/-


வணக்கம் நண்பர்களே,

தமிழில் மாற்று ஊடக வளர்ச்சியின் மிக பெரிய பங்கு வகிப்பது Film Appreciation எனப்படும் திரைப்பட ரசனையே. ஆனால் தமிழ் திரைப்படங்களால் பெரும்பாலும் பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்ட தமிழ் திரைப்பட பார்வையாளர்களால் தங்களுக்கான உலக சினிமா ரசனையை சரியான முறையில் வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. அப்படியான ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இன்றும் பல உலகப் படங்களை புரியவில்லை என்று சொன்னால் அருகில் இருப்பவர்கள் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்றெண்ணி புரிந்தது போல் பாவனை செய்யும் உலக திரைப்பட ரசிகர்களே அதிகம்.

ஆனால் திரைப்படம் எடுப்பது மட்டுமல்ல. திரைப்படம் பார்ப்பதும் ஒரு கலைதான். எப்போதும் தாங்களாகவே திரைப்படம் எடுத்து தங்களை செம்மைப் படுத்திக் கொள்ளும் திரை அறிஞர்களைப் போல சிலர் தாங்களாகவே திரைப்படங்களைப் பார்த்து தங்கள் ரசனையை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கானது அல்ல இந்த ரசனை வளர்ப்பு பயிற்சி. ஆனால் எதையும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம், எதிலும் கொஞ்சம் முறையான பயிற்சி வேண்டும், உலகத் திரைப்படங்களை இன்னும் ஆழமாக ரசிக்கத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற சுயப் பிரக்ஞை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த திரைப்பட ரசனை பயறிசி வகுப்பு.

எனவே இதில் ஆர்வமுள்ள எல்லாரும் கலந்துக் கொள்ளலாம்.

வகுப்பின் தொடர்ச்சியாக திங்களன்று மாலை நான்கு முதல் இரண்டு உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய ரசனை வகுப்பும், விவாதமும் நடைபெறும்.

இவை அனைத்திற்கும் ஒரு சிறிய நன்கொடை உண்டு. இதனை கட்டணம் என்கிற வகையில் வைக்க முடியாது.

நன்கொடை: ரூபாய் - 250/-

தொடர்புக்கு: 9840698236


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்
Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com