தமிழ் ஸ்டுடியோ நடத்திய இரண்டாவது குறும்பட வட்டம் சென்னை இக்சா மையத்தில் கடந்த ஞாயறு (23-11-2008) நடைபெற்றது. முதல் குறும்பட வட்டத்தில் கலந்து கொண்ட ஆர்வலர்களை விட அதிகமான ஆர்வலர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
முதலில் தமிழ் ஸ்டுடியோ நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்றனர். அடுத்து நிழல் திரு. திருநாவுக்கரசு அவர்கள் குறும்பட விற்பனை பற்றிய விரிவான அறிக்கை ஒன்றை வாசித்தார். தொடர்ந்து அனைத்து ஆர்வலர்களும் குறும்பட விற்பனை பற்றி தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.
அடுத்து தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய பிரிவில் அறிவித்தபடி ஒவ்வொரு மாதமும் சிறந்த சிறுகதை மற்றும் சிறந்த கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் மாதமாக, இம்மாதம் சிறந்த சிறுகதைக்காக "அம்மாச்சி வீட்டுத் திண்ணை" எனும் சிறுகதையின் அசிரியர் திரு. ராஜ்குமார் அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதனை நிழல் திருநாவுக்கரசு அவர்கள் வழங்கினார்கள்
சிறந்த கவிதைக்கான இம்மாத பரிசு வெள்ளக்கொவிலை சேர்ந்த திரு. ஈஸ்வரன் அவர்கள் "தடுப்பது யார்?" எனும் கவிதைக்காக வழங்கப்பட்டது. அவர் வர இயலாத காரணத்தால் அவர் சார்பில் தமிழ் ஸ்டுடியோ நிர்வாகி திரு. குணசேகரன் செங்கோடன் பெற்றுக் கொண்டார். இதனை தமிழில் ஸ்டுடியோ இலக்கியப் பிரிவை சேர்ந்த திரு. ப. செந்தாமரைக் கண்ணன் அவர்கள் வழங்கினார்.
அடுத்தாக திரையிடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலாவதாக திரு. கௌரி சங்கர் இயக்கிய "லீ சாக்" எனும் குறும்படம் திரையிடப்பட்டது. பரவலாக அனைவரது பாராட்டையும் பெற்ற இக்குறும்படம் உலக அளவில் பல்வேறு பரிசுத்தொகையும் பெற்றுள்ளது. படத்தின் இறுதியில் ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் அக்குறும்படம் பற்றிய கருத்தினை பதிவு செய்தனர்.
இறுதியில் அக்குறும்பட பற்றியும் ஆர்வலர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமும் அளிக்க வந்த இயக்குனர் கௌரி சங்கர் தான் நினைக்காத புது புதுக் கோணங்களில் தனது குறும்படத்தை ஆர்வலர்கள் நினைத்துள்ளதாக கூறினார். மேலும் உலக அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்ட தனது குறும்படம் தயாரிப்பு செலவை விட பலமடங்கு அதிக பரிசுத் தொகை பெற்றுத் தந்தாகவும், எனவே குறும்படம் எடுப்பவர்கள் தங்கள் குறும்படத்தை இது போன்ற விழாவிற்கு அனுப்பி வைக்கும் தெளிவை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இறுதியில் படம் பற்றி தனது தன்னிலை விளக்கம் அளித்து விடைபெற்றார்.
அடுத்து திரு. கார்த்திக் சோமசுந்தரம் இயக்கிய "நானும் என் விக்கியும்" குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் இக்குறும்படம் பற்றி வாசகர்கள் தங்கள் ஐயங்களையும் வினாக்களையும் எழுப்பினர். அவர்களுக்கு பதிலளித்து பேசிய இயக்குனர் இக்குறும்படம் வேறு எந்தப் படத்தின் தாக்கமும் அல்ல என்பதை விளக்கினார்.
மேலும் முதல் குறும்படத்தில் உள்ள ஒரு சில குறைகளை வாசகர்கள் ஒரு சிலர் சுட்டிக்காட்டினர். அந்தக் குறைகள் இரண்டாவது குறும்படத்தில் நடைபெறமால் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்தார். இறுதியில் தேநீர் விருந்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://picasaweb.google.co.in/thamizhstudio/SecondKurumbadaVattam#
--------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாவது குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: நவம்பர் 23, 2008. ஞாயறு மாலை 2 மணிக்கு
முன் திட்ட நிகழ்வுகள்:
குறும்பட ஒளிபரப்பு : அதுபற்றிய கலந்தாய்வு
இலக்கியமும் குறும்படமும் : இலக்கியத்தை எப்படி குறும்பட வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்வது என்பது பற்றி கலந்தாய்வு
குறும்பட செலவுத்தொகையை எப்படி குறைப்பது என்ற கலந்தாய்வு
முதல் குறும்பட வட்டத்தில் கலந்தாய்வு செய்த குறும்பட விற்பனை பற்றிய முன்னேற்றம் பற்றி விவரித்தல்.
மேலும் விபரங்களுக்கு:
9840698236, 9894422268
|