பௌர்ணமி இரவு பற்றி தினமணி
கொஞ்சம் நிலவு... கொஞ்சம் உணவு... நிறைய சினிமா!
திரைப்பட இயக்குனராக வேண்டும். திரைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற வண்ணக் கனவுகளோடு தினம் தினம் சென்னையை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கும் இளைஞர் கூட்டத்துக்கு, நல்ல சினிமா என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்பதையெல்லாம் மாதம் தோறும் பெüர்ணமி நாளில் விளக்கி வருகிறது "குறும்பட வட்டம்' என்னும் சென்னையைச் சேர்ந்த அமைப்பு. இதன் நிறுவனர்கள் அருண், குணசேகரன் ஆகிய இருவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியிலிருப்பவர்கள்.
பெüர்ணமி இரவின் நிலா வெளிச்சத்தில் கையில் சுவையான உணவுடன் அகிரா குரோசேவா போன்றவர்களின் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் இரவு தங்கிவிட்டு காலையில் எழுந்து செல்வதற்கும் சென்னை,யுனைட்டெட் இந்தியா காலனியில் இருக்கும் தங்களின் அலுவலகத்திலேயே வழி செய்து கொடுத்திருக்கும் அருண் மற்றும் குணசேகரன் அமைப்பின் மற்ற செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசியதிலிருந்து...
""நானும் அருணும் அப்போது ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அருண் இயக்குனருக்கான பயிற்சியை ஒரு தனியார் நிறுவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தார். எனக்கும் கலை சார்ந்த விஷயங்களில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருக்கவே, ஒத்த கருத்துடைய அருணுடன் என்னையும் இணைத்துக் கொண்டேன். எங்களுடைய பணிகளுக்கு முதல் கட்டமாக தமிழ் ஸ்டூடியோ டாட் காம் என்னும் இணைய தளத்தை தொடங்கினோம்.
இதைத் தொடர்ந்து குறும்பட வட்டம் என்ற அமைப்பைத் தொடங்கி மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் சென்னை, இக்ஷா மையத்தில் கூடி குறும்படங்கள் திரையிடுதல், எழுத்தாளர்களோடு, துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வை கடந்த 20 மாதங்களாகத் தொடர்ந்து நடத்திவருகிறோம்...''என்றார் குணசேகரன்.
""குறும்படம் எடுக்க ஆர்வமாக இருப்பவர்களுக்கு உதவும் வகையிலும் அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளைச் சொல்வதற்கும் வழிசெய்கிறோம். இதற்கான ஆலோசனைக் கூட்டம் வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் எங்களின் அலுவலகத்திலேயே நடக்கிறது. நல்ல கருத்தோடு குறும்படம் எடுக்கவேண்டும் என்று ஆர்வத்தோடு வருபவர்களுக்கு படம் பிடிப்பதற்கு கேமரா மற்றும் எடிட்டிங் வசதிகளை இலவசமாகவே செய்துத் தருகிறோம். அப்படி தற்போது எங்களின் உதவியோடு நான்கு குறும்படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
நான்கு நிமிடமே ஓடக்கூடிய "இப்ப வருந்தி என்ன பயன்?' என்னும் குறும்படம் எங்களின் முதல் தயாரிப்பு. உதவி செய்கிறோமே தவிர, அந்தப் படைப்பிற்கு நாங்கள் எந்த வகையிலும் சொந்தம் கொண்டாடுவது கிடையாது. அவர் அந்தப் படத்தை எந்த நாட்டில் நடக்கும் குறும்படப் போட்டிக்கும் அனுப்பலாம்.
ஆரம்ப காலத்தில் குறும்படம் தயாரிக்க நினைத்தபோது, நாங்கள் ஐ.டி.துறையில் பணியில் இருப்பதால் எங்களின் பணத்தின் மீதே குறியாக பலர் இருந்தனர்.
அவர்கள் சொல்லும் பட்ஜெட்டை எல்லாம் எங்களால் நினைத்தே பார்க்கமுடியாத நிலை. அன்றைக்கு எங்களால் முடியாததை இன்றைக்கு எங்களால் மற்றவர்களுக்கு இலவசமாக தரமுடிவதில் எங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி. அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இன்னும் நாங்கள் எடுக்க நினைத்த குறும்படத்தை எடுக்கவில்லை..'' என்றார் அருண்.
அருண் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் குணசேகரன். "பெüர்ணமி இரவில் உலக அளவில் வெளிவந்த சிறந்த இயக்குனர்களின் படம், ஈரானிய படங்கள், ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட குறும்படங்கள், தமிழில் எடுக்கப்படும் குறும்படங்கள் என எல்லாவற்றையும் திரையிடுவோம். மாதந்தோறும் இந்த நிகழ்வுக்கு திரைத் துறை சார்ந்த ஒரு பிரமுகரை அழைத்து திரையிட்ட படங்களைப் பற்றி பேசச் சொல்லுவோம்!
கிராமத்தில் இருந்து சினிமா கனவுகளோடு வருபவர்கள் அகிரா குரோசேவா, பெர்க்மான் என்ற முத்திரை பதித்த இயக்குனர்களின் பெயர்களை எல்லாம் கேட்டிருக்கவே மாட்டார்கள். அவர்களின் மிரட்சியைப் போக்கி அவர்களை நல்ல சினிமா ரசிகர்களாகவும் படைப்பாளிகளாகவும் ஆகவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.
ற்ட்ஹம்ண்க்ஷ்ட்ள்ற்ன்க்ண்ர்.ஸ்ரீர்ம் என்னும் எங்களின் இணைய தளத்தின் விளம்பர வருவாயிலும் மாதம் தோறும் விருப்பப்பட்டவர்கள் தரும் 50 ரூபாயும் எங்களின் சொந்தப் பணமும்தான் இந்த முயற்சிகளுக்கு உதவுகின்றது.
எங்களின் இந்த இணைய தளத்தில் திரைப்படத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் அந்தத் துறையின் நுணுக்கங்களை எழுதியிருக்கிறார்கள். "பாரதி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜ்குமார் ஒளிப்பதிவின் நுணுக்கங்களைப் பற்றியும் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்ற ஜெயராஜ் நடிப்புப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். நாங்கள் திரையிடும் சிறந்த குறும்படங்களை எடுத்த இயக்குநர்களுக்கு விருது அளித்து மரியாதை செய்கிறோம்'' என்றார்.
http://www.dinamani.com/edition/story.aspx?&
SectionName=Kadhir&artid=232611&SectionID=
146&MainSectionID=146&SEO=&Title=%E0%AE%
95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E2%80%8B%E0
%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%
AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81...%E2%80
%8B%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D
%E2%80%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%
AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81...%E2%80%8
B%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%
AE%AF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE
%BF%E0%AE%AE%E0%AE%BE
------------------------------------------------------------------------------------
பௌர்ணமி இரவு பற்றி தினமலர்
|