தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஏழாவது பௌர்ணமி இரவு: (24-08-2010) இரவு எட்டு மணி.
முதலில் தமிழ் குறும்படம் " கனவு கீர்த்தனை " திரையிடப்பட்டது. அதுபற்றி விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நிலாச்சோறு வழங்கப்பட்டது.
பின்னர் "where is my Friend home" என்கிற ஈரானியத் திரைப்படம் திரையிடப்பட்டது.
நிகழ்வு இரவு 1 மணிக்கு முடிவுற்றது. ஆனால் சுமார் ஐந்து மணிவரை தொடர் விவாதங்கள் நைபெற்றது. அனைவரும் அதிகாலை ஆறுமணியளவில் புறப்பட்டு சென்றனர்.
நிகழ்வின் முழு ஒளிப்படங்களையும் காண:
http://picasaweb.google.co.in/thamizhstudio/7
------------------------------------------------------------------------------------------------------
செவ்வாய்க்கிழமை, 24-08-2010
இரவு 08.30 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 01.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும்.
இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)
திரையிடப்படும் படங்கள்:
தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படம். இயக்கம்: ரவி சுப்பிரமணியன்
இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்: Where is my Friend's Home ஈரானிய திரைப்படம்.
இத்திரைப்படம் மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0093342/
(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)
முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268
|