தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய முதல் பௌர்ணமி இரவு: (28-02-2010) இரவு எட்டு மணி.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் திரு. சார்லி, படத்தொகுப்பாளர், திரு. லெனின் அவர்கள், நாடகவியலாளர் திரு. வெளி ரங்கராஜன், தியேட்டர் லேப், திரு. ஜெயராவ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
முதலில் தமிழ் குறும்படம் "என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்" திரையிடப்பட்டது. அதுபற்றி விரிவான கலந்துரையாட நடைபெற்றது.
பின்னர் நிலாச்சோறு பரிமாறப்பட்டது.
பின்னர் "Departures" என்கிற ஜப்பானிய திரைப்படம் திரையிடப்பட்டு அதுகுறித்தான விவாதம் நடைபெற்றது.
நிகழ்வு இரவு 1 மணிக்கு முடிவுற்றது. அனைவரும் அதிகாலை ஆறுமணியளவில் புறப்பட்டு சென்றனர்.
நிகழ்வின் முழு ஒளிப்படங்களையும் காண: http://picasaweb.google.com/thamizhstudio/SYiNkJ#
-------------------------------------------------------------------------------------
ஞாயிறு, 28-02-2010
இரவு 8 மணிக்கு. நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் இருபது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)
திரையிடப்படும் படங்கள்:
உலக அளவில் அனைவரும் பார்க்க வேண்டிய அரிய திரைப்படம்:
உலக அளவில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட குறும்படம்: லிட்டில் டெர்ரரிஸ்ட்
லிட்டில் டெர்ரரிஸ்ட் குறும்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0425200/plotsummary
தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்
என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம் குறும்படத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள: http://www.imdb.com/title/tt1402517/
இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர், மற்றும் முதல் மாத நிகழ்வை தொடங்கி வைப்பவர்: திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil.
(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)
முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268
|