கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

வணக்கம்..குறும்படம் தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. திரைத்துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தொடர்களாக இப்பகுதியில் இடம்பெறும்.
 
 

தொடர் பற்றி
------------------


தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தில் வெளிவந்த சாப்ளின் பற்றிய தொடர் அதன் வாசகர்களிடையே பரவலான வரவேற்பினை பெற்றது. அதன் முடிவில் பெரும்பாலான வாசகர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் தொடர் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த புதன்கிழமை முதல் நமது தளத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கைத் தொடர் வெளிவர இருக்கிறது.

சாப்ளின் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் எழுதி தனது எழுத்தால் பல ஆர்வலர்களை கவர்ந்த திரு. அக்னிப் பார்வை அவர்கள்தான் இந்தத் தொடரையும் எழுத உள்ளார். சாப்ளின் தொடர் முடியும் தருவாயில் வாசகர்களின் கோரிக்கைக்காக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பற்றிய தொடர் கட்டுரைகள் எழுத அவர் மேற்கொண்ட முயற்சிகள் கணக்கிலடங்காதவை. மிகுந்த பணிச்சுமைகளுக்கு இடையிலும் இந்தத் தொடரை செவ்வனே நடத்தி செல்ல அவர் மேற்கொண்டு இருக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் வாசகர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி  
     
 

அக்னிப்பார்வை

இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவள்ளுரில். படித்தது கணிப்பொறி பொறியியல்.

வாணியம்பாடியில் படிக்கும் போது கல்லூரிக்கு போனதை விட திரையரங்கிற்கு போனது அதிகம் என்று கூறும் இவர் இலக்கியத்திலும் ஆர்வமுடையவர். புத்தகங்களை உயிராக மதிக்கும் இவர் புத்தகங்கள், சினிமா இவை போதும் வாழ்க்கையை ஓட்ட என நினைப்பவர். திரைப்படங்களை பற்றி தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வருபவர். இவரது வலைப்பூவைப் படிக்க: http://agnipaarvai.blogspot.com

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS தொடர்கள் TS ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் TS அக்னிப்பார்வை தொடர்கள் வாயில்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – ௦08

அக்னிப்பார்வை  

ஸ்பீல்பெர்க் வியாதி

ஸ்பீல்பெர்க் யுனிவர்சல் ஸ்டுடியோவில் வேலை பார்த்த பொழுது அதன் துணை தலைவராக இருந்த ஜென்னிங்ஸ் லாங் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. லாங் ஸ்பீல்பெர்கின் துடிப்பையும் திறமையையும் பார்த்து வியந்தார். இவர்களின் நட்பு ஸ்டுடியோவையும் தாண்டி லாங்கின் குடும்பத்தாரும் ஸ்பீல்பெர்கை தங்களின் குடும்பத்து உறுப்பினர் போலவே நடத்தினர். ஸ்பீல்பெர்கும் லாங் மற்றும் அவரின் மனைவியின் பிறந்த நாள் முதல் பல முக்கிய நாட்களில் வாழ்த்து செய்தி அனுப்புவதும் பரிசுகளை அனுப்புவதையும் தொடர்ந்து செய்து வந்தார்.

லாங்கின் பெண் ஒரு உளவியல் துறை மாணவி. அவர் எப்பொழுதும் கூறும் ஒரு விஷயம், ”இப்பொழுது இருக்கும் பல இளைஞர்களுக்கு ’ஸ்பீல்பெர்க் வியாதி’ உள்ளது அதாவது தாங்களால் ஸ்பீல்பெர்க் மாதிரி படமெடுக்க முடியும் என நம்பி இயக்க வருவதும் பின்பு அது மிகவும் கடினம் என்று தெரிந்த மனமுடைந்து போகிறார்கள்”.

லாங்கின் நட்பால் ஸ்பீல்பேர்கிற்கு கைமேல் பலன் கிடைத்தது.யுனிவர்சல் ஸ்டுடியோவின் ஒரு படத்திற்கு திரைக்கதை அமைக்கும் குழுவில் ஸ்பீல்பெர்க் சேர்க்கபட்டார். டெக்ஸாஸ் மாநிலத்தில் நடந்த ஒரு சுவாரிசியமான சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு திரைக்கதை அமைக்குமாறு லாங் உத்தரவிட்டார் அது தான் “ தெ ஸுகர்லாண்ட் எக்ஸ்பிரஸ்”.

ஹால் மற்றும் மேத்தியு ராப் உடன் இணைந்து ஸ்பீல்பேர்க் திரைக்கதை அமைக்கும் பணியை தொடங்கினார். டெக்ஸாஸ் மாநிலத்தில் முறையாக இரண்டு வாரம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர். ஒரு வழியாக திரைக்கதையையும் அமைத்தனர். ஆனால் சில காரணங்களை சொல்லி ஸ்டுடியோ அந்த திரைக்கதையை நிராகரித்தது. இன்னொருபக்கம் ஸ்பீல்பெர்கும் அவரின் கோ ஆர்டினேட்டரும் இந்த திரைக்கதை பலமாக நம்பியிருந்தனர்.

ஜுனக் மற்றும் பிரவுன் எனும் இரு நண்பர்கள் ஒன்றாக் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியிருந்தனர். யுனிவர்ஸல் ஸ்டுடியோவுடன் ஒரு ஒப்பந்த்தை ஏற்படுத்திகொண்டனர். அதாவது யுனிவர்ஸலின் திரைப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர்.
ஸ்பீல்பெர்கின் கோ ஆர்டினேட்டர் ஜூனக்கை சந்தித்து ஸ்பீல்பெர்க் உருவாக்கியிருந்த டெக்ஸாஸை மையமாக கொண்ட அவரின் திரைக்கதையை கொடுத்தார். அதற்கு முதலில் வைத்திருந்த பெயர் “ஸுகர்லேண்ட்”.

ஸூகர்லேண்ட் திரைக்கதையை பார்த்து, இதை ஸ்பீல்பேர்க் இயக்குகினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தார் ஜுனக். என்ன ஒரு பிரச்சணை அந்த கதையை யுனிவர்சல் ஸ்டுடியோ ஏற்கனவே மூன்று முறை நிரகரித்திருந்தனர். ஆனால் ஜூனாக் வாதாடி படம் எடுக்கும் உரிமையை பெற்றார்.

ஒரு வழியாக ஸ்பீல்பெர்க் ஒரு முழு நீள திரைப்படம் எடுக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார். ஸ்பீல்பெர்க் அடுத்த கட்ட வேலைகளை தொடங்கினார். நடிகர்கள் தேர்வு.

சுகர்லேண்ட் எக்ஸ்பிரஸில் நடிக்க பல முக்கிய நடிகைகள் மறுத்தனர். இதனால் கடைசியாக கோல்டி ஹான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கோல்டி ஹான் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றவர். அப்பொழுது மிக பிரபலமாக் இருந்த ’லாஃப் இன்’ என்ற தொலைக்காட்சி தொடரில் ஒரு பிரபலமான நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று அமெரிக்க ரசிகர்களை கவர்ந்திருந்திருதார். ஒரு வழியாக படப்பிடிப்பு தொடங்கும் தேதி உறுதியாகியது.

ஜுனகை பொருத்தவரை ஸ்பீல்பெர்க் மீது நம்பிக்கையிருந்தாலும் முதல் நாளே சிரம்ப்படுத்த வேண்டாம் என்று எண்ணியிருந்தார். தன்னுடைய உதவியாளாரை அழைத்து முதல் நாள் படப்பிடிப்பன்று ஸ்பீல்பெர்கை ஏதாவது எளிதான காட்சிகளை மட்டும் படம்பிடிக்க சொல்லுங்கள். போக போக பழகியதும் கடினமான காட்சிகளை எடுக்கலாம் என்று சொல்லியனுப்பினார்.

மாலை பொழுது ஜுனக் படபிடிப்பு தளத்திற்கு சென்ற போது ஸ்பீல்பெர்க் படத்தின் மிக கடினமான காட்சியை எடுத்து முடித்துவிட்டிருந்தார். ஜூனக் ஒரு புன்னகையுடன் ஸ்பீல்பெர்கின் திறமையை கணகிட்டு விட்டார், ”ஸ்பீல்பெர்க் ஒரு ஜீனியஸ்”.

டெக்ஸாஸ் மாநில பாதுகாப்பு துறையினரால் கைது செய்யப்படும் கதாநாயகன் அங்கிருந்து தப்பித்து, சிலரை பணய கைதியாக வைத்து தன்னுடைய குழந்தையையும் மனைவியயும் அழைத்துக்கொண்டு காரில் தப்பிக்க முயலுகிறான். அவன் வெற்றிகரமாக தப்பித்தானா? என்பது தான் படத்தின் கதை.

படப்பிடிப்பு தளத்தின் முழுக்கட்டுப்பட்டையும் தன்னிடம் வைத்திருந்தார் ஸ்பீல்பெர்க். அவருக்கு இந்த தொழிலின் பல நுணுக்கங்கள் அத்துபடியாக இருந்தது. அவருக்கு தொழிழ்நுட்பத்தை பற்றிய அறிவு அதிகமாக் இருந்தது. அனைவரிடமும் மரியதையாக பழகி வேலை வாங்கும் திறமையும் இருந்தது.

இந்த படத்திற்க்காக அவரிடம் ஒளிப்பதிவாளாராக பணிபுரிந்தவர் ஜிக்மண்ட். ஜிக்மண்டிர்கும் ஸ்பீல்பெர்கிர்கும் நட்பு ஏற்பட்டது. வெறும் தொழில் ரீதியாக மட்டும் பழகாமல் அவர்கள் மத்தியில் ஒரு ஆழமான நட்பு ஏற்பட்டது. பெரும்பாலும் இருவரும் ஒன்றாகவே தங்கள் உணவை எடுத்துக்கொண்டனர். இருவருக்கும் ரசனையும், எண்ண்ங்களும் கூட ஒரே மாதிரியாக் இருந்த்து. இருவருக்குமே பிடித்த படம் சிட்டிசன் கேன், இருவருக்கும் பிடித்த இயக்குனர் ஃபெலினி.

இதற்கு முன் ஸ்பீல்பேர்க் இயக்கிய ட்யுல் திரைபடமும் சரி சுகர்லேண்டும் சரி பெரும்பாலன காட்சிகள் பயணத்தை குறிப்பவை. இரண்டும் பொரும்பாலும் பயணத்தை சார்ந்த படங்கள். அதனால் ட்யுல் படத்தின் அனுபவங்கள் ஸ்பீல்பேர்கிற்கு நன்றாக உதவியது. உடன் நணபரான ஜிக்மண்ட் வேறு பல புதிய முயற்சிகளை சோதித்து பார்த்தனர். 360 டிகிரி ஷாட் ஒன்றை முதன் முறையாக ஓடும் காரில் எடுத்தது, உள்பட.

இந்த படத்தில் ஸ்பீல்பெர்கிற்கு இன்னொரு நட்பு கிடைத்தது அவர் தான் இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ். இன்று வரை தொடரும் கூட்டணி அது. படத்தில் அவ்வளவு உழைப்பு போட்டும் படத்தின் முதல் நிலை விமர்சனம் திருப்திகரமாகயில்லை.

இதனால் படத்தின் வெளியீடு தள்ளிபோய் கொண்டேயிருந்தது.முதலில் இதை அப்பொழுது மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த “த எக்ஸார்ஸிஸ்ட்” உடன் மோதவிட ஸ்டுடியோ விரும்பவில்லை.

கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து படம் வெளியிடபட்டது. அதற்குள் படத்தை பற்றிய பரவலான நெகடிவ் விமர்சனம் பரவி இருந்தது. இன்னொரு பக்கம் நகைச்சுவை நடிகையாக அறியபட்ட கோல்டி ஹான் இதில் மிக சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்தது ஒரு மிகப்பெரிய பின்னடைவு. மக்கள் ரசிக்கவில்லை.

படத்தின் இறுதி காட்சியில் சோக மயமானது.. உண்மையில் படத்தின் தொலைக்காட்சி உரிமையால் நஷ்ட்டம் ஏற்படவில்லை. ஸ்பீல்பெர்க் பாடத்தை கற்றுக்கொண்டார். அடுத்த முறை இந்த தப்பை செய்ய கூடாது. தன் புது படத்தின் திரைக்கதையில் கவனத்தை திருப்பினார்.

அது தான் உலகின் முதல் சூப்பர் டூபர் ஹிட் திரைப்படம், ’ஜாஸ்’.ஆனால் வெற்றி நேராக கைக்கு கிடைக்வில்லை, படப்பிடிப்பின் போது ஸ்பீல்பெர்க் தன் வாழ்க்கையையே பணயமாக வைத்தார்.

பிரம்மாண்டம் வளரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.