கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

வணக்கம்..குறும்படம் தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. திரைத்துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தொடர்களாக இப்பகுதியில் இடம்பெறும்.
 
 

தொடர் பற்றி
------------------


தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தில் வெளிவந்த சாப்ளின் பற்றிய தொடர் அதன் வாசகர்களிடையே பரவலான வரவேற்பினை பெற்றது. அதன் முடிவில் பெரும்பாலான வாசகர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் தொடர் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த புதன்கிழமை முதல் நமது தளத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கைத் தொடர் வெளிவர இருக்கிறது.

சாப்ளின் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் எழுதி தனது எழுத்தால் பல ஆர்வலர்களை கவர்ந்த திரு. அக்னிப் பார்வை அவர்கள்தான் இந்தத் தொடரையும் எழுத உள்ளார். சாப்ளின் தொடர் முடியும் தருவாயில் வாசகர்களின் கோரிக்கைக்காக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பற்றிய தொடர் கட்டுரைகள் எழுத அவர் மேற்கொண்ட முயற்சிகள் கணக்கிலடங்காதவை. மிகுந்த பணிச்சுமைகளுக்கு இடையிலும் இந்தத் தொடரை செவ்வனே நடத்தி செல்ல அவர் மேற்கொண்டு இருக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் வாசகர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி  
     
 

அக்னிப்பார்வை

இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவள்ளுரில். படித்தது கணிப்பொறி பொறியியல்.

வாணியம்பாடியில் படிக்கும் போது கல்லூரிக்கு போனதை விட திரையரங்கிற்கு போனது அதிகம் என்று கூறும் இவர் இலக்கியத்திலும் ஆர்வமுடையவர். புத்தகங்களை உயிராக மதிக்கும் இவர் புத்தகங்கள், சினிமா இவை போதும் வாழ்க்கையை ஓட்ட என நினைப்பவர். திரைப்படங்களை பற்றி தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வருபவர். இவரது வலைப்பூவைப் படிக்க: http://agnipaarvai.blogspot.com

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS தொடர்கள் TS ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் TS அக்னிப்பார்வை தொடர்கள் வாயில்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – 21

அக்னிப்பார்வை  

ஸ்பீல்பெர்க் தேறமாட்டார்!

ஸ்பீல்பேர்கின் நண்பரும் ஆம்பலின் நிறுவனத்தின் பங்குதாரருமான கேத்திலின் ஒரு உண்மை கதையை பற்றிய புத்தகத்தை ஸ்பீல்பேர்கிடம் கொடுத்தார். 1830களில் ஸ்பானிய கப்பல் ஒன்று ஆப்ரிக்க அடிமைகளுடன் பிடிப்படுகையில், அத்தனை அரசியல்களின் நடுவில் அந்த மக்களின் விடுதலை பற்றிய கதை. ஸ்பீல்பேர்க் ஆராய்ச்சிகளுடன் படத்தை எடுக்க தொடங்கினார். ஏற்கனவே கறுப்பினத்தவரை பற்றிய ’த கலர் பர்பிள்’ எடுத்த அனுபவத்துடன்.

படத்தை பற்றி பார்ப்பதற்கு முன் கறுப்பின அடிமை வாழ்வை பற்றி சிறிது பார்த்துவிடுவோம்.

அடிமைகள் மூலம் அனைத்து வேலைகளையும் செய்துக்கொண்டு சுகம் காணும் சமுகம் பல நூறு ஆண்டுகளாக்கு முன்பே இருந்துள்ளது. காலம் கடந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தொடங்கியவுடன் அடிமைகள் வாழ்வில் ருசித்தவர்களின் பார்வை ஆப்ரிக்கா பக்கம் திரும்பியது.

காடுகளில் ஒன்றாக வாழ்ந்த அந்த மக்களுக்கு தெரிந்ததெல்லாம், அவர்களுக்கு ஆபத்து விலங்குகள் மூலமாகவோ அல்லது மாறும் இயற்கை மழையினலோ மட்டும் என்று. அவ்ர்கள் நினைப்பில் மண்ணள்ளி போட்டனர் வெள்ளையர்கள். துப்பாக்கியுடனும், ஆயுதங்களுடனும் சென்று அந்த மக்களை கொன்று மிரளுபவர்களை சங்கிலியில் பினைத்து அடிமைகளாக ஐரோப்ப முழுவதும் குவித்தனர். பின்பு அதன் நீட்சியாக ஐரோப்ப குடியேரிகளின் தேசமான அமெரிக்காவும் அதையே செய்தது.

அமெரிக்க வெள்ளை அரசு, ஆப்பிரிக்க அடிமைகள் வைத்திருப்பதை சட்டப்படி குற்றமில்லை என்றது ஒருப்படி மேலே போய் அவர்களை சொத்தாக கணக்கிட்டது. ஒரு வெள்ளையனுக்கு சொந்தமாக நிலம், கால்நடைகளுடன், அடிமைகளையும் சேர்த்தே அவன் சொத்து கணக்கிடப்பட்டது.

ஆரம்பக்கால கறுப்பின இலக்கியங்கள் அடிமைகளின் நிலையை விளக்கியது. அதை இன்றும் ஆப்ரிக்கர்கள் கறுப்பின வேத நூலாக கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு ’ரூட்ஸ்- ஏழு தலைமுறை’எனும் நாவல். கறுப்பர்கள் ஆப்ரிக்காவில் தங்கள் குழந்தைகளை பயமுறுத்த “சாப்பிடவில்லை என்றால் அந்த வெள்ளை பேய் உன்னை பிடித்துக்கொண்டு போய்விடும்” என்று பயமுறுத்துவார்கள். கறுப்பின அடிமைகள் வரலாற்றை தெரிந்துக்கொண்டால் தூக்கம் நிச்சயம் போய்விடும்.

சரி அதே நிலையுடன் வாருங்கள், வெள்ளையர்கள் என்பது பொதுப்பெயர் தான் அது ஐரோப்பா, அமெரிக்கா என்று இரு தேசங்களையும் குறிக்கும்.

கறுப்பர்களை அதாவது ஆண்கள், சில பெண்கள் குழந்தைகள் என 44 பேரை ஏற்றி செல்லும் ஸ்பானிய வணிகர்கள் கப்பலான அமிஸ்டாட், நடுகடலில் அந்த ஆப்ரிக்கர்களால் கைப்பற்றப்பட்டு திசை திரும்பி அமெரிக்கா வருகிறது. அமெரிக்க கடல் எல்லையில் அவர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது.

அமெரிக்காவில் இருக்கும் ஆப்ரிக்கர்கள் சிலர் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்க, ஸ்பேயின் நாட்டின் மகாராணியின் கடிதத்தால் அமெரிக்க அரசு ஸ்பெயினுக்கு ஆதரவாக போக, இன்னொரு பக்கம் அமெரிக்க கப்பற்படை அவர்கள் மீது கொலைக்குற்றத்திற்க்கான விசாரனை தொடுக்க வேண்டும் என கோர, அடிமைகள் விலங்கு பூட்டி விலங்குகளாக நிற்க, அமெரிக்க முன்னால் அதிபர் ஜான் ஆடம்ஸ் நீதிமன்றத்தில் வாதாடி அவர்களை மீட்கிறார்.

படம் தொடங்கும் போது, மின்னொளியில் ஒரு கறுப்பினத்தவரின் முகம் காட்டப்பட, அவர் ரத்ததுடன் கப்பலில் இருக்கும் ஒரு ஆணியை பிடுங்கி தன் விலங்குகளை உடைக்கிறார். பின்பு அந்த கப்பலை கைப்பற்றி கப்பலின் திசையை திருப்பி கொண்டு எந்த பக்கம் செல்ல வேண்டும் என தெரியாமல், ஏக்கத்துடன் நட்சித்திரங்களை பார்க்க பின்னால் ஒலிக்கும் ஜான் வில்லியம்ஸ் இசையுடன் அந்த காட்சி ஒரு கவிதை. மனதை இறுக்கும் கவிதை.

அடிமைகள் அனைவரும் அமெரிக்காவில் வீதியில் சங்கிலியுடன் அழைத்து செல்ல பார்க்கும் அனைவரும் வெள்ளையர்கள். ஒன்றிரண்டு வெள்ளையர்கள் அவர்களை சீண்ட, அந்த பக்கம் யரோ ஒரு ஆப்பரிக்கர் குதிரை வண்டி ஓட்டி செல்லும் போது, அனைவரும் பரவசமக தங்கள் மொழியில் அவரை கூப்பிடுகிறார்கள். அவர் குதிரை ஓட்டியப்படி செல்ல. அவர்கள் கண்களில் ஏக்கத்தை பார்க்க வேண்டுமே!

அமெரிக்க கறுப்பராக மார்கன் ஃப்ரிமேன், முன்னால் அமெரிக்க அதிபர் ஜான் அடம்ஸாக ஆண்டனி ஆஃப்கின்ஸ். அப்போதைய அமெரிக்க அதிபரிடம் இந்த பிரச்சனையை எடுத்து செல்லும் முதல் காட்சி:

காரியதரிசி: 44 ஆப்ரிக்க அடிமைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்பானிய கப்பலிலிருந்து.

அதிபர்: நான் பல நாள் கழித்து இன்று தான் என் பிராந்தியை குடிக்கிறேன்.

காரியதரிசி: தெரிகிறது, ஆனால்..

அதிபர்: பாருங்கள் இந்த நாட்டில் லட்சகணக்கில் ஆப்ரிக்க அடிமைகள் இருக்கிறார்கள். நான் ஏன் 44 பேரை பற்றி கவலை பட வேண்டும்.

காரியதரிசி: கவலைப்பட வேண்டும்.. காலம்.

ஆமாம், அதிபரின் இந்த அலட்சியம் அவர்கள் ரத்தத்தில் ஊறியது. அடிமைகள் சொத்துதானே அது தானே சட்டம். ஆனால் ஜான் ஆடம்ஸ் அப்படி பார்க்கவில்லை. சுதந்திர போராட்டம் வரை ஆப்ரிக்கர்கள் அனைத்து மனித உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஆப்ரிக்கர்களின் எண்ணிக்கையையும் பலத்தையும் தெரிந்துக்கொண்ட ஜார்ஜ் வாஷிங்க்டன் அவர்களை அமெரிக்க சுதந்திர போரில் பங்கு பெற அழைத்தார். அப்படி பங்குபெறுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் வழங்கப்படும் என்றார். அமெரிக்க சுதந்திர போருக்கு பின் ஆப்பிரிக்கர்கள் சிலருக்கு பயன்பெற்றது, ஓரளவு அடிமைத்தனம் மறைந்தது – ஒரு 2 சதவீதம் அவ்வளவுதான். மற்றப்படி ஆப்ரிக்கர்களுக்கு ஓரளவு மதிப்பு அமெரிக்க குடிமை போரை தொடர்ந்து, 20ம் நூற்றாண்டில் மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் என போராளிகளால் கிடைத்தது.

ஆனால் படத்தின் இறுதி காட்சியில் நீதிமன்றத்தில் ஜான் ஆடம்ஸ் உணர்ச்சி பெருக்குடன் வாதாட, ஆப்ரிக்கர்களுக்கு விடுதலை கிடைத்தது வரலாறு தான் ஆனால் படத்தில் சொல்வது போல் ஒட்டு மொத்த அமெரிக்க சமுதாயமும் தங்கள் அடிமைகள் பற்றிய கருத்தோட்டதை மாற்றிக்கொள்ளவில்லை.

இது நிஜமாகவே ஸ்பீல்பேர்கின் இமேஜுக்கு ஒரு கறும்புள்ளித்தான், ஒரு முறை ஸ்பீல்பேர்க் பற்றி ப்ரென்ச்சு பிரபல இயக்குனர் கோடார்ட் கருத்துப்படி ஸ்பீல்பேர்க் பணத்தை குறியாகக் கொண்டு கலையை கொன்றுவிடுகிறார்.

அமெரிக்கர்கள் பற்றி நகைச்சுவையாக சொல்லுவார்கள் அவர்கள் பக்கத்து மாநிலத்தை பற்றிய செய்தியை படத்தால் உலக செய்தியை படிக்கிறார்கள் என்று, ஆமாம் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா தான் உலகம். பொதுவாக அமெரிக்க சினிமா விமர்சகர்கள் கொண்டாடுவது போல ஸ்பீல்பேர்கை ஐரோப்பிய சினிமா விமர்சகர்கள் கொண்டாடுவதில்லை. காரணம் ஸ்பீல்பேர்க் பணம் பன்ணுகிறார் கலையை வளர்க்கவில்லை.

ஏதோ போனால் போகட்டுமென்று ஸ்பீல்பேர்கின் ஈடீயை மட்டும் நல்ல படம் என்பார்கள். பாருங்கள் ஷிண்டலர்ஸ் லிஸ்ட் கூட தேராத கேஸ் தான்.

சரி தயாராகிகொள்ளுங்கள் ஸ்பீல்பேர்க் இயக்கியதிலேயே எனக்கு பிடித்த படத்தை பற்றி பார்க்க்லாம், உங்களுக்கும் பிடிக்கும். இராண்டாம் உலக யுத்ததை நம் கண் முன் நிறுத்தியப்படம்.. யுத்தம் நடுவில் ஒரு குழு யுத்தவீர்ரான ரேயானை தேடி செல்லும். தேடுவதற்க்கு தயாராகுங்கள்.

பிரம்மாண்டம் வளரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

12 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

அதகளப் படுத்தி இருக்கிறீர்கள்.. ஆனால் இன்னும் கொஞ்சம் detailaaga இருந்தால் நன்றாக இருக்கும்.

அனுப்பியவர் ஸந்தொஷ் on Tuesday, 17.08.10 @ 07:37am

மிக பிரம்மாண்ட மனிதன் படங்கள் போலவே நீங்கள் எழுதுவதை படிக்காமல் தவிர்க்க முடியவில்லை.

அனுப்பியவர் ஸ். ராஜா on Tuesday, 17.08.10 @ 08:21am

padhivu seidha varai ok.. aanaal ivvalavu piramaanda padam patri ivvalavu thunukku seidhi maathiri muditthadhu nanraaga illai. please try to write more. thanks.

அனுப்பியவர் Ragavan on Wednesday, 18.08.10 @ 21:51pm

padathin kadhaiyai kooraamal adhan pinnani patri sonnaal innum suvarasiyamaga irukum.

அனுப்பியவர் Senthamizh selvan on Wednesday, 18.08.10 @ 22:06pm

adimaigalin vaazhvai miga sirappaga mun varigal vilakkuginrana. arumai.

அனுப்பியவர் Jeevan on Sunday, 12.09.10 @ 22:00pm

padatthin peyarai kadaisi varai sollave illaiye? neengal enthap padatthai pesugireergal enru enakku puriyavillai?

அனுப்பியவர் Sedhu on Sunday, 12.09.10 @ 22:15pm

adimaigal patri padikkummbodhe manam kanakkiradhu. nalla padanal patri innum eluthungal.

அனுப்பியவர் Saga on Sunday, 12.09.10 @ 23:01pm

amerikka iyakkunargalai eppodhu europe angigarippadhe illai. spielberg oru ulaga iyakunar. i like very much.

அனுப்பியவர் Vijayakumar on Monday, 13.09.10 @ 00:04am

spielberg thodar chaplin thodar pol vegamedukkavillaiye? irundhaalum idhan karuthugal miga mukkiyamanavai. ungal eluthu elaavatraiyum marakkaditthu vidugiradhu.

அனுப்பியவர் Subha on Monday, 13.09.10 @ 02:26am

adimaigalaip patri spielberg edutthulla indha padam nichayam ulaga cinemaa varisaiyil idam pera vendiyadhu. iroppiyargal appadithaan solvaargal.

அனுப்பியவர் Santhosh on Monday, 13.09.10 @ 22:08pm

நீங்கள் சொல்வது தவறு. அவை எல்லாம் ஆண் டைனோசர்கள் அல்ல. எல்லாம் பெண் டைனோசர்கள். படத்தின் முதல் காட்சியிலே அதை காட்டியிருப்பார்கள் "Shoot her!" என்று கேட் கீப்பர் கத்துவார். மற்றுமொரு காட்சியில் ஜுராசிக் பார்க்கில் எந்த இயற்கையான எனப்பெருக்கமும் கிடையாது என்று விஞ்சானி வூ சொல்லுவார், இங்கிருப்பது எல்லாம் பெண் விலங்குகள் என்று மேலும் கூறுவார் , அதற்க்கு மால்கம் அவை எல்லாம் பெண் விலங்குகள் என்று எப்படி கூறுகிறீர் (But, again, how do you know they're all female? What, does somebody go out in the park and pull up the dinosaurs' skirts?). படம் முழுவதும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று எளிதாக கூறாதீர்கள். 1992 ல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நேர்த்தியாக பயன் படுத்த வேண்டிய இடத்தில் மட்டும் பயன்படுத்தி, அழிந்து போன விலங்குகளை கண் முன் உயிருடன் நடமாடும் உணர்வை தந்திருக்கிறார்கள். அறிவியல் நாவலை, திரைப்படம் ஆக்குவதில் உள்ள சிரமங்களை , அன்றைய கால கட்டத்தில் சவாலான தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தி, இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்கள். உண்மையான, தொழில் நேசிப்புடன், அயராத உழைப்பினால் மட்டுமே இந்த மாபெரும் வெற்றி. வெற்றி பெற்றவர்களை விமர்சனம் செய்து புகழ் பெரும் தங்களை போல் அல்ல.

அனுப்பியவர் சிவா on Tuesday, 14.06.11 @ 14:43pm

நீங்கள் சொல்வது தவறு. அவை எல்லாம் ஆண் டைனோசர்கள் அல்ல. எல்லாம் பெண் டைனோசர்கள். படத்தின் முதல் காட்சியிலே அதை காட்டியிருப்பார்கள் "Shoot her!" என்று கேட் கீப்பர் கத்துவார். மற்றுமொரு காட்சியில் ஜுராசிக் பார்க்கில் எந்த இயற்கையான எனப்பெருக்கமும் கிடையாது என்று விஞ்சானி வூ சொல்லுவார், இங்கிருப்பது எல்லாம் பெண் விலங்குகள் என்று மேலும் கூறுவார் , அதற்க்கு மால்கம் அவை எல்லாம் பெண் விலங்குகள் என்று எப்படி கூறுகிறீர் (But, again, how do you know they're all female? What, does somebody go out in the park and pull up the dinosaurs' skirts?). படத்தில் சுற்றுலாவுக்கு செல்வது வேன் அல்ல, கார். செக்யுரிட்டி வேளைகளை கண்கானிப்பது பாப் அல்ல, டென்னிஸ் நெர்டி. படத்தை தெளிவா பார்க்கணும், அரைகுறையா பார்த்துட்டு நானும் விமர்சம பண்ணுறேன்னு கண்டபடி கிறுக்க கூடாது.

படத்திற்கு முதலில் அவர்கள் பயன் படுத்தியது, " Stop motion animation - minature toys ", சந்தேகம் இருந்தால், Jurassic Park - The Making Of Part 1 - (http://www.youtube.com/watch?v=E_TFEFA3eAM) தொடர்ந்து 5 பாகங்களாக youtubeல். பாருங்கள்.

படம் முழுவதும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று எளிதாக கூறாதீர்கள். 1992 ல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நேர்த்தியாக பயன் படுத்த வேண்டிய இடத்தில் மட்டும் பயன்படுத்தி, அழிந்து போன விலங்குகளை கண் முன் உயிருடன் நடமாடும் உணர்வை தந்திருக்கிறார்கள். அறிவியல் நாவலை, திரைப்படம் ஆக்குவதில் உள்ள சிரமங்களை , அன்றைய கால கட்டத்தில் சவாலான தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தி, இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்கள். உண்மையான, தொழில் நேசிப்புடன், அயராத உழைப்பினால் மட்டுமே இந்த மாபெரும் வெற்றி. வெற்றி பெற்றவர்களை விமர்சனம் செய்து புகழ் பெரும் தங்களை போல் அல்ல.

அனுப்பியவர் siva on Tuesday, 14.06.11 @ 14:56pm

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.