|
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – 20
அள்ளிக்கொடுத்த பார்க்
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விசித்திர பிராணியான டைனாசர் என்னும் ராட்சத மிருகங்களை பற்றிய ஆரய்ச்சிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணம் தான் இருந்தன.. ஆங்காங்கே அந்த மிருகங்களின் எலும்புகள் சேகரிப்பது, என விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் சுற்றிக்கொண்டிருந்த நேரம்.
யுனிவர்சலில் கதை இலாக பிரிவில் இருந்த டாக்டர் ஒருவரிடம் ஸ்பீல்பேர் பேசிக்கொண்டிருந்தார். நண்பர் தான். அந்த டாக்டரின் பெயர் மைக்கல் கிரிக்டன். மைக்கல் தான் அடுத்ததாக டைனாசர் பற்றி ஒரு நாவல் எழுதி வருவதாக கூறினார். நாவல் விலைக்கு வாங்கபட்டு ஸ்பீல்பெர்க் இயக்குவதாக முடிவானது.
இந்த படத்தை பொருத்தவரை, ஸ்பீல்பேர்கின் கடந்த கால திரைப்பட அனுபவங்கள் பெரிதும் கை கொடுத்தன. முழுவதுமாக கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ்.
ஜுராசிக் பார்கின் கதை இது தான். ஒரு தீம் பார்க்கை கட்டும் முதலாளி, அங்கு டைனசர்களை விஞ்ஞான யுக்தியுடன் உருவாக்கிவிடுகிறார், அதுவும் உஷாராக தவளையின் DNA வுடன் டைனாசர் டி. என். ஏவை சேர்த்து வெறும் ஆண் டைனோசர்களாக உருவாக்குகிறார். அவர் டைனசார்களுடன் அமைத்த அந்த தீம் பார்க் பெயர் தான் ஜுராசிக் பார்க். சுற்றி மின் வேலி இடபட்ட அந்த இடத்தில் ஒரு சிறு பிரச்சனை வர அரசு அது பாதுக்காப்பானதா என்ற சர்டிபிகெட்டை பெற சொல்லுகிறது.
அதற்கு முதலாளியான ஆட்டன்பெரோ (நம்ம காந்தி படத்த இயக்குனவரு தான்) ஒரு வக்கிலுடன் தன் பேர பிள்ளைகளையும், டைனாசர் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களையும் அங்கே ஆளில்லா வேன் உதவியுடன் சுற்றுலா அனுப்புகிறார்.
வேலிகளையும் இதர கணிப்பொறி உதவியுடனான செக்யுரிட்டி வேளைகளை கண்கானிக்கும் பாப் பெக் எதிரி நிறுவனத்திடம் நிறைய பணம் வாங்கி கொண்டு ஒரே ஒரு டைனாசர் டி.என்.ஏ. வை விற்கிறார். அதை திருட கணிப்பொறி பாதுகாப்பு அரணை குழப்ப.
மொத்த குழப்பம் ஆரம்பிகிறது. மின் வேலிக்கான மின்சாரம் துண்டிக்கபடுகிறது. பாப் பெக் வழிதவறி மரணமடைகிறான். வேலியை தாண்டிக்கொண்டு டைனாசர்கள் அனைவரையும் தாக்க தொடங்குகிறது. அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் கதை.
டனாசார் பற்றிய படம் முதலில் ஸ்பீல்பேர்க் க்ராபிக்ஸின் வளர்ச்சிகளை பற்றி ஆராய்ந்து தெரிந்துக்கொண்டார், அதன் மூலம் அவர் தன் கற்பனை சிறகை பறக்கவிட்டார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம், தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் என பலரையும் சந்தித்தார். டைனாசர் பற்றி புத்தகங்களை படித்து முடித்தார். ஒரு விடயம் நிஜம் இது சுறாவை விட பல 100 மடங்கு பெரியது, அனைத்திலும் தான்.
இதற்கு முன் ராட்சத பல்லிகளான காட்ஜில்லாவை பற்றி ஜப்பானியர்கள் அருமையான படங்களை கொடுத்திருக்கிறார்கள், ம்ஹூம் மிரட்டியிருக்கிறார்கள். அதையெல்லாம் விட பெரிதாக செய்ய வேண்டுமே?
திரைக்கதையை பொருத்தவரை நேர்த்தியாக வந்துவிட்ட்து. குறிப்பாக படம் ஆரம்பித்தவுடன் ரசிகன் பிராம்மாண்டமான சாதுவான டைனாசர்களை பார்த்து பிரமித்து குதுகலமடைவான். எப்பொழுது டைனாசரை காட்டுவார்கள் என்று ஒரு ஏக்கம் இருக்கும், ஆனால் திரைகதையிகள் ஒரு ட்விஸ்டில் டைனசரிடம் நேரிடியாக இரு சிறு பிள்ளைகள் மாட்டிக்கொள்வார்கள், பாருங்கள் பொதுபுத்தியில் உடனடியாக அத்தனை நேரம் டைனாசர்களை ரசித்த ரசிகன், அது மனிதர்களை கொல்லும் போது ரசித்தவன் இப்போது பாவபடவும் மிரளவும் தொடங்குவான். அவ்வளவுத்தான் விஷயம் முடிந்தது.
படம் விஞ்ஞான விஷ்யஙகளை அடிப்படையாக கொண்டே இயங்கும், Choas Theory, DNA Engineering,, இதையெல்லாம் முடிந்த வரை விளக்கியும் இருப்பார்கள்.
உதாரணமாக உயிருக்கு பயந்து ஓடும் போத் விஞ்ஞானி சாமுக்கு சில டைனோசர் முட்டைகள் அகப்படுகின்ரன, டைனோசர் இனபெருக்கம் செய்வது உறுதியாகிவிட்டது. ஆனால் எப்படி? எல்லாமே ஆண் டைனாசொர்கள்! சிறிது நேரம் யோசித்துவிட்டு அவர் முடிவிற்கு வருவார், இவர்கள் தவளையின் டி என் ஏ வை கொண்டு தானே டைனசாரின் டி என் ஏ வை பூர்த்தி செய்தார்கள். ஆப்ரிக்கவில் சில நேரத்தில் ஆண் தவளைகள் பெண் தவளைகளாக மாறிவிடும் அந்த சாத்தியத்தில் இங்கு பெண் டினொசர்கள் யாருக்குமே தெரியாமல் உருவாகிவிட்டன.
திரில்லிங்காக படம் எடுக்கப்பட்டது. முழுவதுமே கம்யூட்டர் கிராபிக்ஸ் தான்.
எதை மையமாக வைத்து எடுக்கபட்டதோ அது கிடைத்தது. வேறென்ன பணம். படம் சக்கை போடு போட்டது. ஒரு பக்கம் ஆஸ்கர் அவார்ட் கொடுத்த சின்ட்லர்ஸ் லிஸ்ட் இன்னொரு பக்கம் பணத்தை அள்ளிக் கொடுத்த ஜுராஸிக் பார்க். அடுத்து ஜுராசிக் பார்கின் இரண்டாம் பாகத்தை செய்ய சொல்லித் தான் அனைவரும் வற்புறுத்தினர். ஆனால் ஸ்பீல்பேர்கோ இன்னொரு முறை கறுப்பின சப்ஜெக்ட்டை தொட்டார். அதுவும் அமெரிக்காவிற்கு கடத்திவரப்பட்ட கறுப்பர்களை காப்பாற்றும் ஒரு வெள்ளையனை பற்றிய படம். சர்சைகளுக்கு பஞ்சமில்லை....
பார்க்கை சுற்றி பார்த்தவர்களுக்கு இனி கப்பலில் போகலாம் வாருங்கள்.
பிரம்மாண்டம் வளரும்...
|
அதகளப் படுத்தி இருக்கிறீர்கள்.. ஆனால் இன்னும் கொஞ்சம் detailaaga இருந்தால் நன்றாக இருக்கும்.
அனுப்பியவர் ஸந்தொஷ் on Tuesday, 17.08.10 @ 07:37am
மிக பிரம்மாண்ட மனிதன் படங்கள் போலவே நீங்கள் எழுதுவதை படிக்காமல் தவிர்க்க முடியவில்லை.
அனுப்பியவர் ஸ். ராஜா on Tuesday, 17.08.10 @ 08:21am
padhivu seidha varai ok.. aanaal ivvalavu piramaanda padam patri ivvalavu thunukku seidhi maathiri muditthadhu nanraaga illai. please try to write more. thanks.
அனுப்பியவர் Ragavan on Wednesday, 18.08.10 @ 21:51pm
padathin kadhaiyai kooraamal adhan pinnani patri sonnaal innum suvarasiyamaga irukum.
அனுப்பியவர் Senthamizh selvan on Wednesday, 18.08.10 @ 22:06pm
adimaigalin vaazhvai miga sirappaga mun varigal vilakkuginrana. arumai.
அனுப்பியவர் Jeevan on Sunday, 12.09.10 @ 22:00pm
padatthin peyarai kadaisi varai sollave illaiye? neengal enthap padatthai pesugireergal enru enakku puriyavillai?
அனுப்பியவர் Sedhu on Sunday, 12.09.10 @ 22:15pm
adimaigal patri padikkummbodhe manam kanakkiradhu. nalla padanal patri innum eluthungal.
அனுப்பியவர் Saga on Sunday, 12.09.10 @ 23:01pm
amerikka iyakkunargalai eppodhu europe angigarippadhe illai. spielberg oru ulaga iyakunar. i like very much.
அனுப்பியவர் Vijayakumar on Monday, 13.09.10 @ 00:04am
spielberg thodar chaplin thodar pol vegamedukkavillaiye? irundhaalum idhan karuthugal miga mukkiyamanavai. ungal eluthu elaavatraiyum marakkaditthu vidugiradhu.
அனுப்பியவர் Subha on Monday, 13.09.10 @ 02:26am
adimaigalaip patri spielberg edutthulla indha padam nichayam ulaga cinemaa varisaiyil idam pera vendiyadhu. iroppiyargal appadithaan solvaargal.
அனுப்பியவர் Santhosh on Monday, 13.09.10 @ 22:08pm
நீங்கள் சொல்வது தவறு. அவை எல்லாம் ஆண் டைனோசர்கள் அல்ல. எல்லாம் பெண் டைனோசர்கள். படத்தின் முதல் காட்சியிலே அதை காட்டியிருப்பார்கள் "Shoot her!" என்று கேட் கீப்பர் கத்துவார். மற்றுமொரு காட்சியில் ஜுராசிக் பார்க்கில் எந்த இயற்கையான எனப்பெருக்கமும் கிடையாது என்று விஞ்சானி வூ சொல்லுவார், இங்கிருப்பது எல்லாம் பெண் விலங்குகள் என்று மேலும் கூறுவார் , அதற்க்கு மால்கம் அவை எல்லாம் பெண் விலங்குகள் என்று எப்படி கூறுகிறீர் (But, again, how do you know they're all female? What, does somebody go out in the park and pull up the dinosaurs' skirts?). படம் முழுவதும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று எளிதாக கூறாதீர்கள். 1992 ல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நேர்த்தியாக பயன் படுத்த வேண்டிய இடத்தில் மட்டும் பயன்படுத்தி, அழிந்து போன விலங்குகளை கண் முன் உயிருடன் நடமாடும் உணர்வை தந்திருக்கிறார்கள். அறிவியல் நாவலை, திரைப்படம் ஆக்குவதில் உள்ள சிரமங்களை , அன்றைய கால கட்டத்தில் சவாலான தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தி, இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்கள். உண்மையான, தொழில் நேசிப்புடன், அயராத உழைப்பினால் மட்டுமே இந்த மாபெரும் வெற்றி. வெற்றி பெற்றவர்களை விமர்சனம் செய்து புகழ் பெரும் தங்களை போல் அல்ல.
அனுப்பியவர் சிவா on Tuesday, 14.06.11 @ 14:43pm
நீங்கள் சொல்வது தவறு. அவை எல்லாம் ஆண் டைனோசர்கள் அல்ல. எல்லாம் பெண் டைனோசர்கள். படத்தின் முதல் காட்சியிலே அதை காட்டியிருப்பார்கள் "Shoot her!" என்று கேட் கீப்பர் கத்துவார். மற்றுமொரு காட்சியில் ஜுராசிக் பார்க்கில் எந்த இயற்கையான எனப்பெருக்கமும் கிடையாது என்று விஞ்சானி வூ சொல்லுவார், இங்கிருப்பது எல்லாம் பெண் விலங்குகள் என்று மேலும் கூறுவார் , அதற்க்கு மால்கம் அவை எல்லாம் பெண் விலங்குகள் என்று எப்படி கூறுகிறீர் (But, again, how do you know they're all female? What, does somebody go out in the park and pull up the dinosaurs' skirts?). படத்தில் சுற்றுலாவுக்கு செல்வது வேன் அல்ல, கார். செக்யுரிட்டி வேளைகளை கண்கானிப்பது பாப் அல்ல, டென்னிஸ் நெர்டி. படத்தை தெளிவா பார்க்கணும், அரைகுறையா பார்த்துட்டு நானும் விமர்சம பண்ணுறேன்னு கண்டபடி கிறுக்க கூடாது.
படத்திற்கு முதலில் அவர்கள் பயன் படுத்தியது, " Stop motion animation - minature toys ", சந்தேகம் இருந்தால், Jurassic Park - The Making Of Part 1 - (http://www.youtube.com/watch?v=E_TFEFA3eAM) தொடர்ந்து 5 பாகங்களாக youtubeல். பாருங்கள்.
படம் முழுவதும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று எளிதாக கூறாதீர்கள். 1992 ல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நேர்த்தியாக பயன் படுத்த வேண்டிய இடத்தில் மட்டும் பயன்படுத்தி, அழிந்து போன விலங்குகளை கண் முன் உயிருடன் நடமாடும் உணர்வை தந்திருக்கிறார்கள். அறிவியல் நாவலை, திரைப்படம் ஆக்குவதில் உள்ள சிரமங்களை , அன்றைய கால கட்டத்தில் சவாலான தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தி, இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்கள். உண்மையான, தொழில் நேசிப்புடன், அயராத உழைப்பினால் மட்டுமே இந்த மாபெரும் வெற்றி. வெற்றி பெற்றவர்களை விமர்சனம் செய்து புகழ் பெரும் தங்களை போல் அல்ல.
அனுப்பியவர் siva on Tuesday, 14.06.11 @ 14:56pm