கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

வணக்கம்..குறும்படம் தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. திரைத்துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தொடர்களாக இப்பகுதியில் இடம்பெறும்.
 
 

தொடர் பற்றி
------------------


தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தில் வெளிவந்த சாப்ளின் பற்றிய தொடர் அதன் வாசகர்களிடையே பரவலான வரவேற்பினை பெற்றது. அதன் முடிவில் பெரும்பாலான வாசகர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் தொடர் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த புதன்கிழமை முதல் நமது தளத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கைத் தொடர் வெளிவர இருக்கிறது.

சாப்ளின் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் எழுதி தனது எழுத்தால் பல ஆர்வலர்களை கவர்ந்த திரு. அக்னிப் பார்வை அவர்கள்தான் இந்தத் தொடரையும் எழுத உள்ளார். சாப்ளின் தொடர் முடியும் தருவாயில் வாசகர்களின் கோரிக்கைக்காக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பற்றிய தொடர் கட்டுரைகள் எழுத அவர் மேற்கொண்ட முயற்சிகள் கணக்கிலடங்காதவை. மிகுந்த பணிச்சுமைகளுக்கு இடையிலும் இந்தத் தொடரை செவ்வனே நடத்தி செல்ல அவர் மேற்கொண்டு இருக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் வாசகர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி  
     
 

அக்னிப்பார்வை

இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவள்ளுரில். படித்தது கணிப்பொறி பொறியியல்.

வாணியம்பாடியில் படிக்கும் போது கல்லூரிக்கு போனதை விட திரையரங்கிற்கு போனது அதிகம் என்று கூறும் இவர் இலக்கியத்திலும் ஆர்வமுடையவர். புத்தகங்களை உயிராக மதிக்கும் இவர் புத்தகங்கள், சினிமா இவை போதும் வாழ்க்கையை ஓட்ட என நினைப்பவர். திரைப்படங்களை பற்றி தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வருபவர். இவரது வலைப்பூவைப் படிக்க: http://agnipaarvai.blogspot.com

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS தொடர்கள் TS ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் TS அக்னிப்பார்வை தொடர்கள் வாயில்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – 18

அக்னிப்பார்வை  

அழுத ஸ்பீல்பேர்க்...

ஷிண்ட்லர்ஸ் லிஸ்டின் கதை இது தான்.

ஹிட்லரின் ஜெர்மெனி ராணுவம் போலந்தை வென்றவுடன் அங்கிருக்கும் யூதர்களை சேர்த்து கீட்டொவிற்கு செல்ல ஆணையிடுகிறது. அதே நேரம் ஜெர்மெனியில் யூதர்களுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றபட்டு யூதர்கள் கொடுமை செய்யப்படுகிறார்கள்.

திடிரென யூதர்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யபடுகிறது. அனைத்தும் அரசுக்கு சொந்தமாகிறது, யூதர்கள் குறைவான சம்பளத்திற்கு ஜெர்மனியர்கள் தங்கள் பணிகளுக்கு அமர்த்தலாம் என அரசு ஆணை வருகிறது. அனைத்து ராணுவத்தினர் வீட்டிலும் யூதர்கள் இலவசமாக பணி செய்கிறார்கள்.

யூதர்கள் அதிகமாக வேலை வாங்கப்பட்டு சரியான உணவு கொடுக்கபடமால் கொல்லப்படுகிறார்கள். ஜெர்மனியர்கள் யார் வேண்டுமானாலும் யூதர்களை கொல்லலாம் என ஒரு மோசமான நிலைமை.

பல வியாபாரங்களில் தோல்வியடைந்த ஆஸ்கர் ஷிண்டலர், சிறிது பணத்துடன் ஜெர்மெனி வருகிறான். இங்கு யூதர்களின் பண உதவியால், ஜெர்மன் ராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போர் நேரத்தில் தன் நிறுவனத்திடமிருந்து பாத்திரங்களை வாங்கும் ஒப்பந்தத்தை போட்டுக்கொள்கிறான்.அதாவது பாத்திரங்கள் செய்யும் தொழிற்சாலையின் அதிபராகிறான்.

குறைந்த ஊதியத்திற்கு யூதர்கள் பணிக்கமர்த்தப்படுகிறார்கள். தலைமை கணக்கராக இட்சாக் ஸ்டெர்ன் எனும் யூதர் நியமிக்க படுகிறார். அவரின் ஆதரவில் ஓரளாவு யூதர்கள் ஆஸ்கரின் நிறுவனத்தில் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

ஒரு நாள் யூதர்கள் பகுதியில் ஜெர்மன் ராணுவத்தின் வெறியாட்டத்தை பார்க்கும் ஆஸ்கர், யூதர்கின் மீது பரிவு கொள்கிறான். ஜெர்மன் ராணுவ அதிகாரியான கோத்திடம் அதிகம் லஞ்சம் கொடுத்து யூதர்களை தன் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்துகிறான். இறுதியில் யூதர்களை பத்திரமாக ஜெர்மனியிலிருந்து தப்பிக்க உதவுகிறான்.

இப்படி யூதர்களை விலைக்கு வாங்க தன்னிடம் உள்ள பணத்தை கொண்டு தினமும் ஒரு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. யூதர்கள் ஜெர்மனியிலிருந்து தப்பிக்கிறார்கள், யுத்தம் நிறைவடைந்து, தப்பித்த யூதர்கள் இசுரேல் செல்கிறார்கள். ஆஸ்கர் ஜெர்மெனியிலிருந்து வெளியேறுகிறார்..

படத்தை எடுக்கும் ஒவ்வொரு நாளிலும் ஸ்பீல்பேர்க் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானர், பல நேரங்களில் அழவே ஆரம்பித்துவிட்டார். அவரை வாரத்திற்கு ஒரு முறை ஹாலிவுட்டின் மிக முக்கிய நகைச்சுவை நடிகரான வில்லியம் ராபின்ஸன் தொடர்புக்கொண்டு ஆறுதல் படுத்துவார்; உற்சாக படுத்துவார்.

ஸ்பீபொர்கிற்கு தான் எவ்வளவு முக்கியமான படம் எடுக்கிறோம் என்று நன்றாகவே தெரிந்திருந்த்து. அதனால் படத்தில் எந்த ஒரு சிறு சமரசமும் செய்துக் கொள்ள விரும்பவில்லை.

படத்தில் நிகழ் காலத்தை தவிற முழுபடமுமே கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டது. பாருங்கள் 1993ல் கறுப்பு வெள்ளை படம்! ஸ்பீல்பேர்க் சொன்ன காரணம் ”என் இனம் அழிக்கப்பட்ட வரலாற்றை மிகுந்த கொண்டாத்தத்துடனும், அழகியலுடனும் வண்ணப்படமாக எடுக்க விருப்பமில்லை”.

பல நாட்கள் ஸ்பீல்பேர்கிற்கு செட்டில் என்ன செய்ய போகிறோம் என்ற திடமான திட்டமில்லாமல், செட் சென்றவுடன் தான் அனைத்தையும் தீர்மானித்தார். கதாநயாகனாக ஆறடி உயரம் கொண்டவரான இங்கிலாந்து நடிகர் லியம் நீசன் ஒப்பந்தம் செய்ப்பட்டர். கணக்கராக காந்தியாக நடித்த பென் கிங்கிஸ்லி. மிக முக்கியமாக கோத் கதாபாத்திறத்திற்கு ரால்ப் ஃபியன்ஸ் ஒப்பந்தம் செய்ய்பட்டர் காரணம். ஸ்பீல்பேர்க் கேட்டவரையில் பலர் கோத் கட்டுட்டலுடனான செக்ஸியான ராணுவ அதிகாரி என்றனார், நிச்சயம் ரால்ப் நல்ல தேர்வு தான்.

படத்தின் முதல் காட்சி யூதர்கள் ஒரு அறையில் பூஜை செய்கிறார்கள், வணணப்படமாக வந்து அடுத்தகாட்சி ஜெர்மென் வென்ற போலந்தில் யூதர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யும் கறுப்பு வெள்ளை காட்சியாக மாறுகிறது.

பாஸிஸத்தின் கொடுமைகளை சினிமாவாக வடிக்க கட்சியமைப்பியலை மிக நேர்த்தியாக பயன்படுத்தினார் ஸ்பீல்பேர்க். அதை விட வசனங்கள் மிக நேரடியானதாகவும், கூர்மையானதாகவும் இருந்தன, சில உதாரணங்களை பார்ப்போம்.

ஆஸ்கர் ஷிண்டலரின் அறிமுக காட்சி, ஷிண்ட்லர் ஒரு ஷோக்கு பேர்வழி. பெண்களை எளிதாக மயக்கிவிடுவார். அவர் ராணுவ அதிகாரிகளை நண்பாராக்கி கொள்ளும் காட்சி...

ஒரு உணவு விடுதியில், சில மணிதுளிகள் கொண்டது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், புதியவர்கள் யார் என்றே தெரியாத நிலையிலும் அவர்களை நெடு நாள் நண்பன் போல் உடனடியக பேசி மயக்குவது என நேர்த்தியான காட்சியமைப்பு.

காட்சிகள் இன்னும் தொடரும்..

பிரம்மாண்டம் வளரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

9 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

miga kanattha idhyatthudan padithu mudithen. nerthi agni.

அனுப்பியவர் Sivasankar on Monday, 26.07.10 @ 08:59am

Spielberg mattumalla.. andhap padam parthu anaivarum aluthudhaan aaga vendum. nerthiyana katturai.

அனுப்பியவர் Oomaithurai on Monday, 26.07.10 @ 21:10pm

Kadhai sollal nanraaga irukkiradhu. indhap padam edukkumbodhu irundha avarin mananilaiyai innum konjam vivarithal nichayamaaga yaarum seiyadha padhivaga irukkum.

அனுப்பியவர் Kannan, Sekar, Kumar on Monday, 26.07.10 @ 22:11pm

idhe pol eelath thamizhargal patriyum oru padam edukka vendiya nilai varum. avargalukavadhu isrel engira naadu kidaithadhu. namakku? tamilinam mutrilum aliyathan pogiradhu paarungal. adharku karanamum thamilargalthaan. marandhuvidatheergal.

அனுப்பியவர் Josepsh on Monday, 26.07.10 @ 23:48pm

thodarndhu eludhuvadharku nanri agni. katturai valakkam pol sirappaga ulladhu. aanal vaasikkumbodhe mudindhuvittadhu pol thondrugiradhu. :) avvalavu suvaarasiyamo?

அனுப்பியவர் Krishnan on Monday, 26.07.10 @ 23:57pm

padathin katchiyamaippai vivariyungal agni. i am waiting for that.

அனுப்பியவர் Sekar K on Tuesday, 27.07.10 @ 00:34am

innum kooda azhuthamaaga eluthalaame? miga arumaiyana padam. neengal niraya elutha muyarchikkalaam.

அனுப்பியவர் Soundar on Tuesday, 27.07.10 @ 02:20am

tamilil idhup ponra thiraippadangal vara vendum enru ninaithirundhen. viraivl varum enru ninaikkiren. adhil periya villanaga indhiyathan irukkum.

அனுப்பியவர் Suganeshwar on Tuesday, 27.07.10 @ 03:07am

idhuthaan enakku therindhu ulagin miga piramaanda padam..

அனுப்பியவர் Ravindran on Tuesday, 27.07.10 @ 04:34am

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.