கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

வணக்கம்..குறும்படம் தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. திரைத்துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தொடர்களாக இப்பகுதியில் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி  
     
 

அக்னிப்பார்வை

இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவள்ளுரில். படித்தது கணிப்பொறி பொறியியல்.

வாணியம்பாடியில் படிக்கும் போது கல்லூரிக்கு போனதை விட திரையரங்கிற்கு போனது அதிகம் என்று கூறும் இவர் இலக்கியத்திலும் ஆர்வமுடையவர். புத்தகங்களை உயிராக மதிக்கும் இவர் புத்தகங்கள், சினிமா இவை போதும் வாழ்க்கையை ஓட்ட என நினைப்பவர். திரைப்படங்களை பற்றி தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வருபவர். இவரது வலைப்பூவைப் படிக்க: http://agnipaarvai.blogspot.com

தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

வணக்கம் வாசகர்களே!

எடிசன் சினிமாவை கண்டுபிடித்தபோதோ, லூமினியர் சகோதரர்கள் அதை பொது மக்களுக்கு திரையிட்டபோதோ அது, உலகில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இன்று பல கோடி புரளும் ஒரு துறையான சினிமா, பணத்தை மட்டும் மையமாகக் கொள்ளாமல், சமுதாய அக்கரையை தன் வசம் எடுத்துக்கொண்டுள்ளது.

சினிமா ஒரு பொழுது போக்கு வடிவத்திலிருந்து, ஒரு கலையாக, இலக்கியமாக, ஒரு பிரச்சார சாதனமாக, ஏன் அறிவியல் வளர்ச்சிக்கு உந்துகோலாகவும் இருந்திருக்கிறது. அத்தகைய சினிமவை பற்றி பேசும்பொழுது அதன் ஆரம்ப காலகட்டத்தில் அதற்கு, அதன் வளர்ச்சியில் பங்கு கொண்டு, சினிமா பேசாத போது அதைப் பற்றி பேச வைத்தவர்களில் குறிப்பிடதக்கவர் சார்ளி சாப்ளின்.

சாப்ளின் இங்கிலாந்தில் பிறந்து, அமெரிக்க ஹாலிவுட்டில் ஒரு தவிர்க்க முடியாத நட்சத்திரமாகி, உலக மக்களை தன் நகைச்சுவை திறனாலும், நடிப்பாலும் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்தவர்.

தான் உருவாக்கிக்கொண்ட ‘The Tramp’ (வழிப்போக்கன், நாடோடி) என்னும் கதாப்பாத்திரத்தைக்கொண்டு நம்மை சிரிக்கவைத்தார், சிந்திக்கவைத்தார், அழவைத்தார், ஆர்பரிக்க வைத்தார். இவரின் படங்கள் அப்படி என்ன சொல்லுகின்றன?

சினிமாவின் முதல் ஜீனியஸ் என இவரை அழைக்க காரணம் என்ன? இரண்டாம் உலக போர் உச்சத்தில் இருந்த சமயம் ‘ஹிட்லரை’ கேலி செய்து இவர் எடுத்த ‘த கிரேட் டிக்டேடர்’ படத்தை ஹிட்லர் இரண்டு முறை பார்த்தார்.

இவரின் படங்கள் கம்யூனிசத்தை பரப்புகிறது என அமெரிக்க அரசாங்கம் இவரை அமெரிக்காவினுல் வர அனுமதிக்கவில்லை. இத்தனை நாள் என்னை வாழவைத்த மக்கள் என்னை வெறுக்கிறார்கள் என மனம் வருந்தினாலும், சாப்ளின் வழக்கமான தன் சினிமா வேலைகளை தொடர்ந்தார். அதுதானே அவர் திரையில் காட்டிய கதாபாத்திரத்தின் பழக்கம்.

அந்த ’வழிபோக்கன்’ கதாபாத்திரம் விழும் , உடனே எழுது தூசி தட்டிக்கொள்ளும். எவ்வளவு வீழ்ச்சிக்குபின்னும் நாளை வரப் போகும் நல்ல நாளுக்காக உலகை ரசிக்கும். கஷ்டங்கள், காதல் தோல்வி, அவமானம், அனைத்திற்க்கும் சிறிது நேரம் வருந்திவிட்டு, தன் அடுத்த வேலையை தொடரும்.

இது ஒரு விதத்தில் சாப்ளினின் மனோபாவம். தன் குழந்தை இறந்தது, சரியான மணவாழ்க்கை அமையவில்லை, தன் நாட்டு மக்கள் அவரை வெறுத்து நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை, இதன், ஒரு பொருட்டும் அவர் கலங்கவில்லை தன்னுடைய வேலைகளை தொடர்ந்தபடியிருந்தார்.

இனி இந்தத் தொடரின் மூலம் நாம் சாப்ளினின் திரைப்படங்கள் பற்றி படிக்கப் போகிறோம். அவர் சொல்ல வந்தது என்ன? மக்கள் அவரை ஏன் ரசித்தனர்? சர்சைகள், அவர் ஏன் சினிமாவின் முதல் ஜீனியஸ் என அழைக்கப்படுகிறார்? அவர் படங்கள் கம்யூனிசத்தை சொல்லுகின்றனவா? அவரின் படங்களினூடே ஒவ்வொன்றாக சென்று பார்ப்போம்.

அடுத்த வாரம் (11-02-2009) முதல் சார்லி சாப்ளினையும் அவரது படைப்புகளையும் ஆழமாய் அறிவோம்.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS தொடர்கள் TS சார்லி சாப்ளின் TS அக்னிப்பார்வை தொடர்கள் வாயில்

சாப்ளின்: கலைக்களுக்கான ஒரு கலை

அக்னிப்பார்வை  

மே மாதம், 1913. அமெரிக்காவில் சுற்றுபயணம் செய்துக் கொண்டிருந்த ’ஃப்ரெட் கரனொ’ இசை குழுவின் மேலாளரான ஆல்ஃப் ரீவ்ஸுக்கு ஒரு தந்தி. தந்தியில் இருந்த வாசகம் இதுதான், “ உங்கள் குழுவில் ’சாஃப்மேன்’ அல்லது அதையொத்த பெயரில் யாரவது இருந்தால், நியூயார்க் நகரில் உள்ள எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்” என்று விலாசத்தை சுமந்திருந்தது.

நிச்சயம் அவர்கள் குறிப்பிட்டிருந்தது சார்லி சாப்ளினை தான். மிகுந்த சிரமம் ஏதுமில்லாமல், சாப்லினுக்கு அந்த தந்திக் கிடைத்தது. சற்றே குழப்பத்துடனும், சற்றே உற்சாகத்துடனும் சாப்ளின் நியூயார்க் புறப்பட்டார். சினிமா உலகை ஆளப்போகும் ஒரு வாய்ப்புக்கான தந்தியுடன் சாப்லின் நியுயார்க் நோக்கிப் பயணமானார்.

கண்கள் முழுவதும் கனவுகள், நம்பிக்கை. பின்னே! அதுதானே இத்தனை போரட்டங்களையும் தாண்டி சாப்ளினை உயிர் வாழ வைத்திருக்கிறது. ஆம். சாப்ளின் இப்பொழுது அமெரிக்காவிற்கு வந்திருப்பது பயணம் தான். அவர் பிறந்தது, வளர்ந்ததெல்லாம் இங்கிலாந்தில். தாய், தந்தை இருவருமே நாடகக் கலைஞர்கள். தந்தை பெரும் குடிகாரர். அதனால், சாப்லினின் பெற்றோர் பிரிந்தனர். சாப்லினையும் அவரது அண்ணனையும் வளர்க்கும் பொறுப்பு தாயிடம்.

மேடை கலைஞராக இருந்த தாயின் சொற்ப வருமானம் குடும்பத்தை ஓட்ட கொஞ்சம் உதவியது. தாயும், தந்தையும் மேடை கலைஞர்கள் என்பதால், சாப்ளினின் ரத்தத்தில் நடிப்பும், இசையும் கலந்திருந்தது. எப்பொழுதும் தன் தாயின் மேடை நிகழ்ச்சிகளை ஓரமாக இருந்து பார்த்து, பார்த்து அவருக்கு நாடக மேடை, கொட்டகை, மக்கள் கூட்டம், யாவும் பழகிப்போனது - ஒருவிதமான வசீகரத்தை ஏற்படுத்தியது.

ஒரு முறை தன் தாயின் குரல் பிசகவே, முதன் முறையாக தன் ஐந்து வயதில் மேடையேறிய சாப்ளின், தன் மழலை குரலாலும், இயல்பான நடனத்தாலும் மக்களை அசத்தினார். அன்று தொடங்கிய அந்த அசத்தும் தொழில் அவர் வாழ்வின் இறுதி நாள் வரை தொடர்ந்தது.

ஒரு பக்கம் தாய் மனநலம் பாதிப்படைய, சார்லியும் அவரது அண்ணனும், அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். பின்பு கொஞ்சம் வயது வந்தவுடன் சாப்ளின் நாடக மேடைகள் ஏறி சம்பாதிக்க ஆரம்பித்தார். அமெரிக்கா வரை சுற்றுப் பயணமும் வந்துவிட்டார். அப்படி ஒரு நாடகத்தில் தன் நடிப்பாற்றலால் ஒரு சினிமா தயாரிப்பாளரை அசத்த, அவர்தான் அந்த தந்தியை அனுப்பி சாப்ளினை வரச்சொன்னார்.

(அவருக்கு சாப்ளினின் பெயர்க்கூட தோரயமாக தான் தெரியும்). அதற்கு தான் சாப்ளின் இந்த பயணத்தை மேற்கொண்டு நியூயார்க் சென்றுக்கொண்டிருக்கிறார்.

ஒரு வழியாக ’கீ ஸ்டோன்’ என்ற அந்த சினிமா தயாரிக்கும் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நடிகராக தேர்வு பெற்றார். சிறிது நாட்களில் அவர் அண்ணன் சிட்னி சாப்ளினும் சார்லியுடன் இணைந்துக்கொண்டார். அன்றிலிருந்து சாப்ளினின் கணக்கு வழக்குகளை பார்த்து, சார்லியை யாரும் ஏமாற்ற முடியாத படியும், சாப்ளின் நிம்மதியாக தன் படைப்பு வேலைகளை கவனிக்கவும் உதவியாக இருந்தார்.

நடிகராக சாப்லின் எழுச்சி மற்றும் ‘The Tramp’ (வழிப்போக்கன்) கதாபத்திரத்தின் தோற்றம் பற்றியும் அடுத்த வாரம் பேசுவோம்.

சாப்ளின் வருவார்....


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.