கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

வணக்கம்..குறும்படம் தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. திரைத்துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தொடர்களாக இப்பகுதியில் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS நிழல் திருநாவுக்கரசு தொடர்கள் வாயில்

நெய்வேலி புத்தக கண்காட்சி 2008 குறும்படப் போட்டி - 2

நிழல் திருநாவுக்கரசு  

பரிசுப் பெற்ற மற்றப் படங்களை இந்த வாரம் பார்ப்போம்:

'ஒரே ஒரு நாள்' - முடமான பணக்கார சிறுமியை பெற்றோர்கள், வேலைக்காரியிடம் விட்டுவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள். அன்பில்லமாலும், வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாள். அப்போது வீட்டுனுல் பந்து வந்து விழுகிறது. பந்தை வெளியே எடுத்துப் போடும்படி சிறுவன் ஒருவன் பணிக்கிறான். இருவருக்கும் இடையில் நட்பு வளர்கிறது.

ஒருநாள் சிறுமியை வெளியே அழைத்து சென்று குளம், வயல் என எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பிக்கிறான். வெட்டிற்கு அழைத்து செல்கிறான். அவனது பெற்றோர் பொம்மலாட்டக் கலைஞர்கள். இவளுக்காக பொம்மலாட்டம் நடத்தி காண்பிக்கின்றனர். பின் வீட்டிற்கு வந்து விடுகிறாள். பின்னர் ஒருநாள் சிர்வனைத் தேடிச் செல்லும்போது அவனது குடும்பம் வேறு ஊருக்கு குடிபெயர்ந்து சென்றதைக் கேட்டு வீட்டிற்கு திரும்புகிறாள்.

படம் இரண்டு குழந்தைகளுக்கு இடையே நிகழும் உண்மையான அன்பினை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர். காட்சிமொழியும், நடிப்பும், படத்தொகுப்பும், வண்ணமும் அழகு கூட்டியுள்ளன.


'திருகாணி' அறிவியல் படித்து முன்னேறத் துடிக்கும் ஒரு மாணவிக்கு திருமணம் முடிந்தவுடன் அவளது ஆசைகள் எவ்வாறு முடமாக்கப்பட்டன என்பதை தோடின் திருகாணியை ஒப்பீடு செய்து எடுக்கப்பட்ட பெண்ணிய நோக்கிலான படம்.

இனி சிறப்பு விருதுகள் பெற்ற படங்கள் பற்றி பார்ப்போம்:

கதை கருவுக்காக தேர்ந்தெடுக்கபட்டப் முதல் படமான 'புதிய தடம்' மலம் அள்ளும் அருந்ததி தெருவில் நடக்கும் ஒரு சாவிலிருந்து படம் தொடங்குகிறது. அவர்களது துயரமான வாழ்க்கையை பதிவு செய்கிறார் இயக்குனர். இயல்பாக சித்தரித்திருக்கும் இயக்குனர், சாக்கடையில் வேலை செய்ய மறுக்கும் இளைஞனின் நிலையும், இத்தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழிலுக்கு செல்லும் அவனது நிலையை யதார்த்தத்துடன் விளக்கி இருந்தார் இயக்குனர்.

அடுத்த படமான 'என்று மடியும்' சிறப்பு பொருளாதார மண்டலங்களால் விளைநிலத்தை இழந்த விவசாயி மகன் சென்னையில் கால் சென்டெரில் வேலைபார்க்கிறான். தந்தையுடன் பேசக் கூட சூழலை அழகாக காட்சிப் படுத்தி இருந்தார் இயக்குனர்.

நடிப்புக்காகத் தேர்வு செய்யப்பட்ட 'செடி' படத்தின் இயக்குனரே நடித்திருந்தார். கதைக்கு ஏற்றபடி கழைக் கூத்தாடும் கலைஞனாகாவே மாறிப் போயிருந்தார் இயக்குனர் & நடிகர்.

அடுத்த படமான 'கண்மணி' படத்தில் முதல் குழந்தை பெண்ணாக பிறந்து விடுகிறது. அடுத்த குழந்தையை ஸ்கேன் செய்து பார்க்கும்போது அதுவும் பெண்ணாகவே இருக்கிறது. இதனால் கருவை அழித்து விடும்படி மாமியார், கணவன் இருவரும் வற்புறுத்துகின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக்கும் பாத்திரத்தில் ஷர்மிலா மிகச் சரியாக நடித்து இருந்தார். கருவை அழிக்கப் போவதில்லை என்றும், தானே வளர்த்துக் கொள்வது என்றும் முடிவெடுக்கும் நிலையை சரிவரச் செய்துள்ளார்.

'விடியலுக்காக' படம் மலைக் கிராமத்தின் இன்றைய நிலையை விளக்குகிறது. குடிதண்ணீர், கல்விக் கூடம், மருத்துவமனை எதுவும் இல்லாமல் மக்கள் படும் அவதிகளை தனது சிறப்பான கேமராவால் படமாக்கிய ஆதித்யாவிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இப்படங்களை தவிர வேறு சில படங்களும் போட்டிக்கு வந்து சென்றன. அவற்றில் குறிப்பிடும்படியான சிலவற்றைப் பார்க்கலாம்.

கோவில் கட்டுவதை விட சிறந்தது, கழிவறை கட்டுவதே என்கிற கருத்தை வெளியிட்ட படம். 'சொளுசின்'

'கொட்டங்குச்சியும் மூங்கிலும்' என்ற படத்தை க.சரிதா என்பவர் எடுத்திருந்தார். கொட்டங்குச்சி வயலினும் கடசிங்காரியும் வாசிக்கும் தெருவோர கலைஞர்களின் வாழ்வை டாக்குவ டிராமா பாணியில் வெகு யதார்த்தமாக கொண்டு வந்துள்ளார்.

ஜிப்ரான் இயக்கிய 'ஐந்தாம் பரிமாணம்' ஒரு இளைஞனுக்கும், அமானுஷ்ய சக்திக்கும் இடையில் நடைபெறும் உறவுகளை விளக்குவதாக இருந்தது. ஒளியமைப்பும், படத்தொகுப்பும், சிறப்பாக இருந்தது.

எம். வனிதா இயக்கிய 'உண்மையின் நிறம்' படம் நகைச்சுவையான பாணியில் எடுக்கப்பட்டு இருந்தது. சாலையோர ரோமியோக்கள் சைட் அடிக்கும் திருவிழாவில் ஜுலிஎட் ஒருத்தி கிடைக்கிறாள். அவள் அவள் விந்தி விந்தி நடப்பதை பார்த்து ஓடிப் பொய் விடுகிறது நமது ரோமியோக் கூட்டம்.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.