கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

வணக்கம்..குறும்படம் தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. திரைத்துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தொடர்களாக இப்பகுதியில் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சார்லி சாப்ளின் TS அக்னிப்பார்வை தொடர்கள் வாயில்

உள்ளங்கைக்குள் உலகம்

அக்னிப்பார்வை  

2006 - ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2007 - இல் ஒருமடங்கு படங்கள் அதிகரித்துள்ளன. இதற்க்கு காரணம், கைகேமராவின் விலை குறைந்து வருவதால் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிலிம் மூலம் ஐந்து நிமிட குறும்படம் எடுக்க பிலிம் செலவே ரூ.25,000 ஆகிவிடும். இந்த தொகைக்கு ஒரு டிஜிட்டல் கேமரவே வாங்கிவிடலாம் என்கிற நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஹரிபிலக்ஸ் கேமராவை டிரைபோல்ட் தாங்கில் வைத்து டிராலிமேல் வைத்துப் பார்த்தோமானால் ஒரு அரக்கனை பார்ப்பதைப் போலவே சாதாரணமானவர்களுக்கு தெர்யும். ஆனால் டிஜிட்டல் காமேராவோ 'கைக்குள் அடங்குகிற' சமாச்சாரமாக இருப்பதால் உளவியல் ரீதியாகவே 'கைக்கல் அடங்குகிற' ஏதும் நம்ம செய்து முடிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கயை மனிதனுக்கு தந்துவிடுவதால் டிஜிட்டல் கேமரா பார்த்து பயம் தோன்றாது. கேமரா கிடைத்து விட்டது அடுத்த படம் எடுத்துவிட முடயுமா? என்றால் முடியாது. குறைந்தபட்சம் திரைப்பட தொழில் நுணுக்கம், திரைமொழி, திரைமொழியின் இலக்கணங்களும் தெரிந்து கொண்டால் தான் சிறந்த படங்களை எடுக்க முடியும்.

டிஜிட்டல் கேமராவில் குழந்தைகளும் படம் எடுப்பதற்கு ஏதுவாக மிக குறைந்த தொழில் நுட்பமே செய்யப்பட்டுள்ளது ஜூம் இன், ஜூம் அவுட் என்பதே இவற்றின் மூலமே அடிப்படை ஷட்டுகளையும் கோணங்களையும் வைக்க வேண்டும். இரவில் படம் எடுப்பதற்கு ஏதுவாக அமைப்பும் உண்டு. லென்சுகளை மாற்ற முடியாது. இவைகள் தற்போதைய கைக்கேமராக்களில் காணமுடிகிறது.

கைக்கேமராவை முப்பட்டை தாங்கியில் பொருத்தி படம் எடுத்தால் கண்ணை உறுத்தும் அசைவு இருக்காது. முப்பட்டை தாங்கி இல்லாத நிலையில் பெரும் அசைவு இல்லாமல் அருகில் உள்ள பொருட்கள், நண்பர்கள் போன்றவர்களை வைத்து தாங்கிகளாக பான்படுத்தலாம். சிறிய கை வண்டிகள் (சுமைகள் எடுத்துச் செல்லும் வண்டி) சைக்கிள் மாற்ற வாகனங்களையும் பயன்படுத்தி படம் எடுத்தல் ட்ராலிஷாட் சாலைகள் செல்வது போன்றவைகளை எடுக்கலாம். மேலே கண்டவைகளை ஏன் விவரித்தேன் என்றால் பல மாணவர்கள் இப்படி எல்லாம் எடுக்காமல் கேமராவை அசைய விடாமல் தொடக்ககால கருவி போல் ஒரே இடத்தில் வைத்தே எடுப்பதால் குறும்படம் / ஆவணப்படங்கள் நாடகத்தன்மையை பெருகின்றன என்பதால்தான்.

அடுத்து நிறைய படங்களில் காணும் குறைபாடு, ஒலிப்பதிவு சரிவர செய்யாததால் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரிந்து கொள்ள முடிவதில்லை.கைகேமராவில் உள்ள மைக் ஐந்தடிக்குள் நடப்பவற்றை மட்டுமே சரிவர பதிவு செய்கிறது. இதிலிருந்து தப்பிக்க, 'நெக் மைக்கை' கேமராவுடன் இணைத்தால் இந்த பிரசினைலிருந்து மீளலாம். அப்படி இல்லை என்றால் 'டப்பிங்' செய்ய வேண்டும்.இது போலவே பின்னணி காட்சிக்கு தொடர்பே இல்லாத முறைகள் இசை சேர்க்கப்பட்டிருக்கும். குறும் படங்களுக்கு தான் 'இசை' தேவை ஆவணபடங்களுக்கு எதார்த்த சூழலில் ஒலிக்கும் சப்தங்களே போதுமானது இது எதார்த்தத்தை மேலும் மெருகூட்டும்.

ஆவணப்படங்களைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

1 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

மிக அழகான பதிவு. நன்றி

அனுப்பியவர் திலீப் on Tuesday, 6.04.10 @ 11:28am

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.