கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

கட்டுரைகள் பகுதியில், குறும்படங்கள், பெரியப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், பத்தி எழுத்துகள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS தொடர்கள்  

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (5)

வெங்கட் சுவாமிநாதன்  


தமிழ் சினிமாவின் சுமார் 80 வருட சரித்திரத்தில், அது தந்துள்ள சினிமா குப்பை குவியலில் சினிமா என்று சொல்லக்கூடியது ஒன்று கூட இல்லை யென்றும், ஐம்பது வருடங்களுக்கு முன் நான் பார்த்த பழைய படங்களின் சில காட்சிகளைச் சுட்டிக் காட்டி, இம்மாதிரியான காட்சிகள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழ்ந்த போதிலும், அவற்றுடனே நாம் வாழ்ந்து வந்த போதிலும், அத்தகைய காட்சிகளை நம் தமிழ் சினிமாவில் காண்பதற்கில்லை என்று நான் சொன்னதும், அன்பர்கள் சிலருக்கு வருத்தமும், சிலருக்கு கோபமும், இன்னம் சிலருக்கு ஏதோ நான் தமிழனை, தமிழ் சினிமாவைத் தாழ்த்திக் கேவலப் படுத்துவதற்கே எழுதுவது போலும், அவர்கள் தமிழ் ரத்தம் கொதிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் ரசனைக்கேற்ற படங்கள் தான் என்று அவர்கள் உரத்துச் சொல்கிறார்கள். வேறொரு இணையத்தில் ஒரு பட்டியலையே கொடுத்து இவையெல்லாம் சிறந்த படங்கள் என்று என் முன் வைத்திருக்கிறார்கள். அந்தப் பட்டியல் இதோ:

சந்தியா ராகம்
வீடு
உன்னைப் போல் ஒருவன்
உதிரிப் பூக்கள்
முள்ளும் மலரும்
உச்சி வெயில்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
அவள் அப்படித்தான்
அழியாத கோலங்கள்
கண் சிவந்தால் மண் சிவக்கும்
மெட்டி
ராஜ பார்வை
மகா நதி
குணா
அந்த நாள்
முதல் மரியாதை
ஹே ராம்
ஒருத்தி
நாயகன்
மொழி
சுப்பிரமணியபுரம்
சென்னை 28
ஆயுத எழுத்து
வெயில்
புதுப்பேட்டை
பருத்திவீரன்
அஞ்சாதே
நண்பா நண்பா
இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
சங்க நாதம்
அக்ரஹாரத்தில் கழுதை
விருமாண்டி


இவையெல்லாம் நல்ல தமிழ் படங்கள் இல்லையா என்று கேள்விகள் எழுந்துள்ளன. இந்த படங்களின் பட்டியல், 32 Best Tamil Movies – Best Arthouse films – 10 Hot – ல் கொடுக்கப்பட்டுள்ளது போக இன்னும் சில சேர்க்கப்பட்டுள்ளன, அன்பர்களால்.

கேட்க வேண்டிய கேள்விதான். இந்தப் பட்டியலும் சர்ச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று தான். இப்பட்டியலுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தே ஆகவேண்டும்.

முதலில் எனக்குத் தோன்றுவது கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களை இயக்கிய ஞான ராஜசேகரனின் படங்களோ, கிராமத்து மண் வாசனையைத் தன் படங்களில் கொணர்ந்தவராக, ஸ்டுடியோவை விட்டு கிராமத்துக்குக் காமிராவை எடுத்துச் சென்ற பெருமை படைத்தவராகப் பாராட்டப்படும் பாரதி ராஜாவின் படங்களோ (ஒன்றைத் தவிர) ஏன் இடம் பெறவில்லை என்று எனக்கு யோசிக்கத் தோன்றுகிறது. இவர்களை ஒதுக்கும் என் காரணங்களும் பார்வையும் வேறு. ஆனால் மேற்கண்ட பட்டியலைத் தயாரிக்க ஐம்பது வருடங்கள், உன்னைப் போல் ஒருவனைத் தொட (1963 அல்லது 1964 என்று நினைக்கிறேன்) பின்னோக்கிச் சென்றவருக்கு ஞான ராஜ சேகரனையும் பாரதி ராஜாவையும் சேர்க்கத் தோன்றவில்லையே, ஏன்?

இப்பட்டியலில் காணும் பல படங்கள் வித்தியாசமானவை, வழக்கமான தமிழ்ப் படங்களிலிருந்து விலகி வேறு தடத்தில் பயணிக்கவேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் காணும் படங்கள் தான் என்பது எனக்குத் தெரியும். அனேகம் படங்கள் வேறு தடத்தில் பயணிப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் செயல்பாடுமே கொண்ட படங்களும் உண்டு. உதாரணமாக, கமல ஹாஸனின் படங்கள் அத்தனையும். இனி வரப் போவனவற்றையும் சேர்த்து. அவரது ஆளுமை தன் படங்களில் தானே மையமாகவும் தன்னைச் சுற்றியே உலகம் இயங்குவதாகவும் காட்டிக்கொள்ளும் ஆசை கொண்ட ஆளுமை அவரது. ஒவ்வொரு படமும் முந்தையதிலிருந்து வித்தியாசமாக முயற்சிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்ளலாம். காட்டிக்கொள்ளலாம் தான். அவ்வளவே.. மையம், அவரே தான். இதெல்லாம் போக, ஒரு படம் அசாதாரண வெற்றி பெற என்னென்ன மசாலாக்கள் இருக்கவேண்டும் என்பது சினிமா உலகில் இப்போதைய கால கட்டத்தில் தீர்மானமாகியுள்ளதோ அவையெல்லாம் கொண்ட ஒரு தயாரிப்பைத் தான் அவரது வித்தியாசமான படங்களும் தரும். இதையே மணிரத்தினத்திற்கும் சொல்ல வேண்டும். இவையெல்லாம் சினிமாவே அல்ல. இவை எதுவும் சினிமா என்ற கலை சார்ந்தவை அல்ல. சினிமா என்ற சூதாட்டமாகிப்போன வியாபாரம் சார்ந்தவை.

கமலஹாஸன் நல்ல நடிப்புத் திறமையுள்ளவர் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவரிடம் திறமை மட்டுமே உண்டு. அந்தத் திறமையை அவர் என்றும் ஒரு கலையாக பரிணமிக்க விட்டதில்லை. அவரது திறமையெல்லாம் தன்னைப் பூதாகாரமாக முன்னிறுத்திக்கொள்வதற்கும், அதை முதலீடாக வைத்து, சந்தைக்கான மசாலாக்களையும் சேர்த்து வியாபாரம் செய்யும் வணிகர் தான் அவர். லாவகமாக உடல் வளைத்து ஆடத் தெரிந்தால், ரிக்கார்ட் டான்ஸ் ஆட தேர்ந்துகொள்வது போன்றதே, கமலஹாஸனின் நடிப்புத் திறமை பெற்ற வடிகால். இந்த வணிகத்தில் அவர் கணக்குகள் தவறாகி நஷ்டம் ஏற்பட்டால் அது ஒரு கலைஞனின் புதிய பாதைத் தேர்வில் எதிர்ப்படும் தோல்வி அல்ல. பங்குச் சந்தைக்காரனின் கணக்குகள் தோற்கும் சமாசாரமே அது. இது அவருக்கு மட்டுமலல, சினிமா வர்த்தகம் ஒரு சூதாட்டமாகி இதில் தம் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க வந்தவர்கள் எல்லோருக்கும் நேர்வது தான். மணி ரத்னத்துக்கும், ரஜனி காந்துக்கும், சங்கருக்கும், நேர்வது தான். எஸ். எஸ். வாசனுக்கும் நேர்ந்தது தான். இயக்குனர் சிகரத்துக்கும் நேர்ந்தது தான். இது கலைத் தோல்வி அல்ல. பங்குச் சந்தையில் சூதாடிக் கிடைத்த தோல்வி. இதில் சாமர்த்தியமாக தான் தப்பித்துக் கொண்டு தயாரிப்பாளர் தலையில் விழச் செய்வதில் தான் நம் உலக நாயகர்கள சூப்பர் ஸ்டார்கள, இளைய தளபதிகள் இத்யாதிகள கவனமாக இருப்பார்கள்.

ஆனால் உண்மையிலேயே இந்த வணிகப் பாதையின் சூதாட்டத்திலிருந்து விலகி சீரிய முயற்சிகள் சில செய்து பார்க்கவேண்டும் என்று துணிந்தவர்கள் என முதலில் ஜெயகாந்தனைச் சொல்வேன். பின் அதைத் தொடர்ந்தவர்கள் என பாலு மகேந்திராவையும், மகேந்திரனையும், ஞான ராஜசேகரனையும் சொல்வேன். இவர்களைப் பற்றி பேசலாம்.

அறுபதுகளின் ஆரம்பத்தில் ஜெயகாந்தனிடம் இருந்த வேகமும் போராட்ட மனமும் உன்னைப் போல் ஒருவனை உருவாக்கச் செய்தது. ரூ. 80,000 மட்டுமே
அந்தப்படத்தைத் தயாரிக்க செலவாகியது என்று சொல்லப்பட்டது. அந்தப் பணமும் ஜெயகாந்தனிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ரசிக நண்பர்கள் உதவியது என்றும் சொல்லப்பட்டது. (இது அறுபதுகளின் 80,000 ரூபாய் என்றாலும் இன்றைய பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இது மிக சல்லிசாகத் தயாரிக்கப்பட்டது தான்). ஆனாலும் அது ஒரு landmark என்று சொல்லக்கூடிய அந்தஸ்து பெற்றது தான். சினிமாவா இல்லையா என்பதெல்லாம் பின்னர் வாதித்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள். ஏன் அது ஒரு landmark?

ஜெயகாந்தன் தன் முதல் படத்தில் முயன்றது, தன் கதை ஒன்றை படமாக்கியது தான். அதை அவர் நேராக, மற்ற எந்த சாய்வுகளுக்கும் இடம் கொடாமல் செய்தது முதன் முறையாக தமிழ் சினிமாவில் நடந்த நிகழ்வு. அதுவரை தமிழ் சினிமாவில் சந்தைக்குத் தயாராக்க எந்தெந்த மசாலாக்கள் சேர்க்க வேண்டும் என்று மரபு இருந்ததோ அதையெல்லாம் பற்றிய சிந்தனை எதுவுமில்லாமல், ஒரு நேரிய முயற்சி செய்தார். அதில் அவர் கதை சலனம் பெற்றது. அவ்வளவே. தமிழ் சினிமாவின் அது வரைத்திய பாதையை முற்றிலுமாக ஒதுக்கி புதிய பாதையில் முதல் அடிவைப்பு என்று சொல்ல வேண்டும். முதல் அடி வைப்பு. ஒரே அடிவைப்பு அன்றைய தினம். இது அறுபதுகளின் ஆரம்பத்தில். இதை நான் முதன் முதலாக 1950 மார்ச் ஏப்ரலில் சம்பல்பூர் விஜய லக்ஷ்மி டாக்கீஸில் பார்த்த வங்கப் படத்தில் நிகழ்ந்திருந்தது. எந்த வித ஆரவாரமும், இல்லாது. முதல் அடி வைப்பு, சோதனை முயற்சி என்ற கோலாகல டமாரம் ஏதும் இல்லாமலே. ஏனெனில் அது தான் வங்கப் படங்களின் வழமையாக இருந்தது. அந்தப் படத்தை இப்போது யாரும் நினைவு கொள்வதில்லை, நாம் உன்னைப் போல் ஒருவனை ஒரு புரட்சி கர முயற்சியாக நினைவு கொள்வது போல.

இதிலிருந்து ஜெயகாந்தன் தன் அடுத்த அடி எடுத்து வைக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். அவரது படம் ஏதும் மகத்தான வணிக வெற்றி அல்ல. இருப்பினும், ஜெயகாந்தன் அந்த பாதையில் தொடர்ந்து விடக்கூடாது என்பதில அன்றைய சினிமாப் பெருந்தலைகள் முனைந்திருந்ததாக செய்திகள் வந்தன. இது எவ்வளவு தூரம் உணமை என்பது தெரியாது. அது உண்மையல்ல என்று இருந்தாலும், ஜெயகாந்தனே பின்னர் தான் முதலடி எடுத்து வைத்த பாதையில் தொடர முடியவில்லை. நாகேஷ் வர ஆரம்பித்தார். லக்ஷ்மி கதாநாயகியானார். கண்ணீரையும் கதறலையும் வசனப் பெருக்கத்தையுமே உணர்ச்சிச் சித்திரம் என்று பெயர் சூட்டி மெய்சிலிர்த்துப் போகும் தமிழ்மரபில் பெயர் வாங்கியவரான பீம் சிங் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்துக்கு இயக்குனரானார். அந்தக் கதையே ஒரு ரகம் தான். பொதுவாகவே தன் கருத்துக்களையே பாத்திரங்களாக்கும் சிறப்புக்குரியவர் ஜெயகாந்தன். அந்த விதத்தில் இந்த நாவலும் ஜெயகாந்தனுக்கே உரிய புரட்சிகர கருத்துக்களையே பாத்திரங்களாகக் கொண்டது. இம்மாதிரியான ஒரு ஜோடியை ஜெயகாந்தனின் சிந்தனையிலும் கற்பனையிலும் தான் பார்க்கமுடியும். ஒரு தொடர்கதை எழுத்தாளனை, நாலு பெண்கள் காதலிக்கிறார்கள் என்றால் அதை அகிலனினுக்கே உரிய கற்பனையிலும் அவர் எழுதும் தொடர்கதையிலும் தான் பார்க்கமுடியும் என்பது போல..

பின் தமிழ் சினிமாவில் ஜெயகாந்தன் போன்ற ஒரு போராளியே அதிக நாள் இருக்க முடியவில்லை. உன்னைப் போல் ஒருவன் எடுத்து வைத்த முதல் அடிக்குப் பின் அடுத்த வந்த அடிகள் பின்னோக்கியவை தான்., முதல் அடியே சினிமா இல்லை, இனி வரப்போகும் சினிமாவுக்கான முதல் அடி தான். என்னும் போது மற்றவை பற்றி என்ன சொல்ல? 1950-ல் நான் பார்த்த முதல் வங்காளிப்படம் முதல் அடி வைப்பு அல்ல. அது நிலைத்துவிட்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியின் ஒன்றுடன் நான் பெற்ற அறிமுகம். அது நிலைத்த பாரம்பரியமானதால் தான் அடுத்த சில வருடங்களில் அங்கு ஒரு ரித்விக் காடக்கையும், சத்யஜித் ரேயையும் அடுத்த வளர்ச்சிக்கட்டங்களாகக் காணமுடிந்தது.

கழிசடைகளை எல்லாம் கழித்துச் சுத்தப்படுத்திய வெற்றிடத்தில் வைத்த முதல் காலடி வைப்பே நமக்கு அறுபதுகளில். அதுவும் பின்னர் ஒரே படத்துடன் முடிந்த கதையாகிவிட்ட பிறகு.....? என்ன நடப்பது சாத்தியம்?. இங்கு ஆட்சி செலுத்திய சினிமா கலாச்சாரமே எந்த எளிய முயற்சியையும் ஒன்றுமில்லமல் ஆக்கிவிடும் அசுர சக்தி கொண்ட வணிக கலாசாரமாக இருக்கிறது.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

12 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

பட்டியலில் இன்னும் கூட சில படங்கள் விடுபட்டு விட்டன.. இருந்தாலும் நீங்கள் சொல்லும் காரணமும் எர்கத்தக்கவையாக இருக்கிறது. என் சிறு வயது முதலே யாரவது இது போல் சொல்லி இருந்தால் நல்ல சினிமா பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும். இங்கே சொல்லும் நல்ல சினிமாக்கள் இப்போது பார்க்க முடிவதில்லை. காரணம் அதனை பார்க்கும் அளவுக்கு இங்கே என் போன்றோர் ரசனை வளர்க்கப்படவில்லை. அதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. சினிமாவும், மக்களும் சம அளவில் காரணமாக இருக்கலாம். இருந்தாலும் அடுத்து வரும் தலைமுறைக்கு இப்போதே நல்ல சினிமா பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் இன்னும் நிறைய எழுதுங்கள். முதாளில் நான்தான் உங்களை நிறைய சாடினேன். இக்கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும்போது ஒருவித புரிதல் ஏற்படுகிறது. உங்களிடம் நிறைய கட்டுரைகள் எதிர்பாரிக்கிறேன். நானும் மாற்று சினிமா பற்றி இனி நிறைய பேசவிருக்கிறேன். நன்றி. தாமரை செல்வன்.

அனுப்பியவர் தாமரை செல்வன் on Sunday, 1.08.10 @ 04:19am

சாமிநாதன் சார்.. அன்பே சிவம் என்றொரு படம்.. அதில் கமஹாசன் மிக அற்புதமாக நடித்திருப்பாரே.. அந்தப் படத்தின் கதைக் கூட மிர அருமையானது. எனக்கு தெரிந்து தமிழில் எடுக்கப்பட்ட மிக அருமையான படமது. அதே போல் சமீபத்தில் வெளிவந்த பசங்க திரைப்படமும். எனவே தமிழிலும் மாற்று முயற்சிகள் நடக்கிறது.

அனுப்பியவர் சுப. கணேஷன் on Sunday, 1.08.10 @ 09:03am

indha listil ulla padangal mattumathaan nalla padamaa? yaar koduthadhu.. idhaiyum thaandi makkalai magilvikkum sila padangalum indha listil serkka vendum. matrapadi neengal solvadhellam saridhaan.

அனுப்பியவர் Ravichandran on Sunday, 1.08.10 @ 21:57pm

Gnana rajasekara eppadi ungalidam nalla peyar vaanginaar? avarin endhap padam uruppadi iyaa?

அனுப்பியவர் Dev kumar on Sunday, 1.08.10 @ 22:42pm

Puthiya seidhyaaga irukiradhu. jeyakandhanai yaar sir mirattiyadhu. tamil nattil arasiyal cinema ellam onru kalandhuvittadhu. eppadi uruppada pogiraargalo?

அனுப்பியவர் Vishwa on Sunday, 1.08.10 @ 23:46pm

oh.. then barathiraja, balachnadar, sridhar, ponrer ellam nalla padangale edukka villaiyaa? indhak kalavanigal engalai allavaa emaatri irukkiraargal.

அனுப்பியவர் Charles on Monday, 2.08.10 @ 00:14am

indhak katturaiyai tamil thiraippada kalaignargalukku nadigar sangatthilum, iykkunar sangatthilum paditthu kaatta sollungal. konjamaavadhu maatram theriyum.

அனுப்பியவர் Mani on Monday, 2.08.10 @ 02:28am

jeyakandhanin padam parkkavillai. ippadi paarkkadha padangalai eppadi sirandhadhu enru yetruk kolla mudiyum. commercial padangalai rasippadhu engal thavarillai. nalla padagalai engal kannileye kaattaamal thavirkkum indha thiraiyulaga medhaigalai yaar enna seivadhu?

அனுப்பியவர் Saravanan on Monday, 2.08.10 @ 03:39am

miga nalla thodar katturaiglai naan paditthuk kondirukkiren. idhe ponru thodarndhu yaaro oruvar eluthik kondirundhaal konjamaavadhu nalla padangal varum. aannaal elloru oru nilaiku pinnar niruthi vidugirargal.

அனுப்பியவர் Surendiran on Monday, 2.08.10 @ 21:58pm

nanraaga sonneergal aiya.. enakku therindhu balu mahendiravin padangal avvalavum arumai. aanaal avare neengal kettavai ponra padangalai edutthu thannai pal padutthuk kondaar.

அனுப்பியவர் சுமித்ரா on Monday, 2.08.10 @ 23:25pm

"முதாளில் நான்தான் உங்களை நிறைய சாடினேன்". தாமரைச் செல்வன்.

எங்கு? எப்போது? படித்ததாக எனக்கு நினைவில் இல்லையே. ‍ வெ.சா.

அனுப்பியவர் வெங்க்ட் சாமிநாதன் on Tuesday, 3.08.10 @ 07:43am

Balachandarum, barathirajavu, thavirtthu tamil cinemaavai yaaralum alavida mudiyaadhu.

அனுப்பியவர் Karan on Tuesday, 3.08.10 @ 22:01pm

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</