ஒளிப்பதிவாளர் திரு.ரவிவர்மன் அவர்கள் இரண்டாவது முறையாக ITFA விருதை வென்றார்.
 |
சிங்கப்பூரில் ITFA அமைப்பு ஒவ்வொரு வருடமும் சிறந்த திரைக்கலைஞர்களைத் தேர்ந்தேடுத்து விருது வழங்கி சிறப்பு செய்கிறது. இதில் இந்த வருடம் இரண்டாவது முறையாக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை திரு. ரவிவர்மன் அவர்கள் வென்றார். தசாவதாரம் திரைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 16-5-09 அன்று விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். |
இத்துடன் “தசாவதாரம் படம் சிறப்பாக உருவானதற்கு ரவிவர்மனின் உழைப்பு மிகக் கடுமையானது என்பதை யாம் அறிவோம். மேலும் இதற்குமுன்பு “வேட்டையாடு விளையாடு” படத்திற்காக 2007-ல் இவருக்கு இதே விருது வழங்கப்பட்டது குறிப்படத்தக்கது.
|