ஓர் எழுத்தாளனின் பார்வையில் கதையை நகர்த்தியுள்ளார். போக்கிலியாய் திரியும் ஒருவன் சிறைசாலைக்கு செல்வதும், மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவன் மேலாளரிடம் படும் அவஸ்தைகளையும் எழுத்தாளனின் பார்வையில் விவரித்துள்ள இக்குறும்படத்தில் இறுதியில் எழுத்தாளனுக்கும் அவனது மனைவிக்கும் இதனால் ஏற்படும் பிரிவையும் நோக்கி களம் விரிகிறது.
இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் நடிகை சுஹாசினி போன்ற பிரபலங்களும், திரளான ஆர்வலர்களும் இத்திரையிடலில் கலந்துக் கொண்டனர்.