வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
யாவரும் கேளிர்
1
 
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1 பகுதி - 19
1
1 பகுதி - 20
1
1 பகுதி - 21
1
1 பகுதி - 22
1
1 பகுதி - 23
1
1 பகுதி - 24
1
1 பகுதி - 25
1
1 பகுதி - 26
1
1 பகுதி - 27
1
1 பகுதி - 28
1
1 பகுதி - 29
1
1 பகுதி - 30
1
1 பகுதி - 31
1
1 பகுதி - 32
1
1 பகுதி - 33
1
1 பகுதி - 34
1
1 பகுதி - 35
1
1 பகுதி - 36
1
1 பகுதி - 37
1 பகுதி - 38
1 பகுதி - 39
1 பகுதி - 40
1  
 
  யாவரும் கேளிர்
   
 

யாவரும் கேளிர் - பகுதி - 5 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)

ஓவியம்: மு. ராஜ்குமார்

வெளிச்சத்தை இருள் துரத்திக்கொண்டிருக்க, இருள் வெற்றியடைந்ததற்கு ஆதாரமாக கிராமம் இருளில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.. ஆங்காங்கே வெண்கல விளக்குகள் வீடுகளுக்குள்ளும், தெருவில் ஒரு பர்லாங்குக்கு ஒருத் தெருவிளக்கும் எரிந்துக்கொண்டிருந்தது. கிராமங்களில் பொதுவாக இரவு உணவு ஆறுமணிக்குத் தொடங்கி ஏழுமணிக்கெல்லாம் முடிந்து ஊரே உறங்கிவிடும்.

ஊர் உறங்கத் தொடங்கும் வேளையில் மணியக்கார தாத்தாவின் சத்தம் “பிடாரிக்கோயில் ஆலயமணியைப்போல்” ஒலிக்க, ஊரே எழுந்து தாத்தா நடந்துவரும் தெருவைப் பார்த்துக்கொண்டிருக்க, தாத்தா தன் கம்பின் துணைகொண்டு வழித்தடத்தை தட்டிக்கொண்டே சத்தமாக, “மரம் இல்லன்னா மழை இல்ல, மழை இல்லன்னா வெவசாயம் இல்ல; வெவசாயம் இல்லன்னா கிராமங்கள்ல வேலையே இருக்காது.

அப்படி ஒரு நிலம வந்தா ஒட்டுமொத்த கிராமங்களும் அழிஞ்சிப் போயிடும்னு விஞ்ஞானிங்க சொல்றாங்க... ஏற்கனவே குளங்கல கூறுபோட்டு வீட்ட கட்டிட்டானுங்க, மண்ரோடு எல்லாம் சிமெண்ட் ரோடாகி மழைத்தண்ணி பூமிக்குள்ள போகமாட்டேங்குது. மேட்டூர் தண்ணிலதான் ஒருபோகமாச்சும் வெவசாயம் நடக்குது. இனிமே அதுக்கும் கஷ்டம்தான். ஒகேனக்கல்ல ஏதோ மின்சாரத் தொழிற்சாலைன்னு ஒண்ணு வரப்போவுதாம்.

அது வந்துச்சின்னா சுத்தம்... இப்படி ஒருபக்கம் நடக்க இன்னொருபக்கம் நாசா விஞ்ஞானிங்க கரண்ட்ல வெளியாகிற வெளிச்சத்தில பூமி வெப்பமாகி, மழையும் போயி, பனிமலைங்க உருகி கடல் பெருசாகுதுன்னு சொல்றாங்க... காலம்போன கடைசியில இப்ப என்னடான்னா வீட்டுக்கொரு மரம் வளங்கன்னு நாடு சொல்லுது. இந்த ஊருப்பசங்க என்னான்னா இருநூறு வருசமா ஊருல பாதியா, இந்த ஊருக்கே அடயாளமா இருக்கிற ஆலமரத்த வெட்டிப்புட்டு, அந்த இடத்தில கோயில் கட்டப்போறாங்களாம். ஒரு படையே தங்கற அளவுக்கு இந்த ஊருக்கு உசுரா இருக்கிற இந்த மரத்தப்பத்தி, நேத்து மீச மொளச்ச பயலுங்களுக்கும், வெவரம்கெட்ட சில பெருசுங்களுக்கும் என்னத்தத் தெரியும்? இத்தன வயசாயும் பச்சரிசியாட்டம் இருக்கிற எம்பல்லுக்கு ஆதாரமே இந்த ஆலம் விழுதுதான். “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஊர் புள்ளைங்க இந்த விழுதுகள்ல ஊஞ்சல் ஆடி பொழுதுபோக்கவும், காக்கா குருவிங்க கூடுகட்டி வாழவும், இந்த பழங்கள தின்னுப் பசியாறவும், நம்ம காலு கையில அடிப்பட்டு வீங்கிப்போச்சுனா ஆலமரத்துல அடிமரத்தக் கொத்தி, அந்த பால எடுத்து வீக்கமுள்ள இடத்துல தடவி, அதுமேல மண்ண தூவினா, ரெண்டு நாள்ல ஜிவ்வுன்னு வீக்கமெல்லாம் வாடிபோயிடும். இவ்வளவு ஏண்டா நீங்க, நான் னு எல்லாரும் குடிக்கிற சாராயத்துக்கு ஊறவைக்கவும் இந்த பட்டையதானே உறிக்கறீங்க? ஊர் நடுவுல இருக்கிற இந்த ஆல மரத்த வெட்டுனா அது இந்த ஊரையே கொளுத்துன மாதிரி...

வேகாத வெயில்ல களைச்சி வர்றவங்களுக்கு பெத்தத் தாய்மடியாட்டம் நிழல்தர இத வெட்டிப்புட்டு ஊர பொட்டலாக்கி கோயில் கட்டவாப் போறீங்க? ஏலேய் கோயில கட்டி வருஷா வருஷம் திருவிழான்னு நீங்கதாண்டா கட்டி அழனும். இந்தமரம் இருந்தா ஒங்க கட்ட செலவுக்கு ஒதவும்டா சாண்டா குடிக்கீங்களா...” என சத்தம் போட்டுக்கொண்டு செல்ல, அதை வேடிக்கைப்பார்த்த ஒருவன், “கிழட்டு கிருத்துவம் என்னப்பேச்சு பேசுதுன்னு பாரு” என்று சொல்ல அதைக்கேட்ட தாத்தா “குட கூழுக்கு அழுவுதாம், கொண்ட பூவுக்கு அழுவுதாம்” தாத்தாவின் புலம்பலால் ஊரே பாதி உறக்கத்தில் இருக்கும் வேலையில் சாரதாவும், சாமிஅய்யாவும் செல்லப்பா உறங்கிவிட்டதாக எண்ணி வீட்டின் நடுவே தொங்கிக்கொண்டிருக்கும் அழுக்கு துணி மூட்டையில் ஒரு சேலையை மட்டும் சாரதா ஒரு கையால் இழுக்க வீட்டுக்குள் ஒரு தனி அறை வந்துவிட்டது. சாமிஅய்யாவும், சாரதாவும் கலவிக் கழிந்து ஒருவருக்கொருவர் தங்கள் ஆடைகளை   சரிசெய்துக் கொண்டனர்.

இருள் என்பது குறைந்த வெளிச்சம் என்றார் பாரதி. “இலைமறை காய்கள் அறியும் போல்” சாரதாவின் கொங்கைகள் மட்டும் அழுக்குபடிந்த அரைகுறை சேலை மறையால் அறிய இருள் என்ற வெளிச்சம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் ‘சாமியையாவிடம், சாரதா “ சின்னுபய சாராயம் எரிக்க இன்னைக்கு கடுக்காய் கிடைக்காம பேட்ரியை அதிகமா போட்டுட்டானாம். அந்த சாராயத்த குடிச்சதுனால மணியக்காரத் தாத்தாவுக்கு போதை அதிகமாயி ஊர்க்காரங்ககிட்ட சண்டை போட்டுகிட்டு போறார்னு வேலாயிக் கெழவி சொல்லிக்கிட்டு போச்சு” என அவள் சொல்லி முடிக்கும் போது சாமிஅய்யாவின் குறட்டை சத்தத்தை அவள் கேட்க, அதை கேட்டுக்கொண்டே அவளும் உறங்கிவிட்டாள். இருவரும் உறங்கிய பிறகு மெதுவாக எழுந்து தொழுவத்துக்குப் போகிறான் செல்லப்பா. மச்சக்காளை பதட்டமாக நின்று கொண்டிருக்கிறது. தன்னருகே அவன் வருவதைப்பார்த்து உடல் இலவசமாக நடுங்குகிறது....

தொடரும்...

(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)

ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com

அடுத்து...




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.