வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
யாவரும் கேளிர்
1
 
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1 பகுதி - 19
1
1 பகுதி - 20
1
1 பகுதி - 21
1
1 பகுதி - 22
1
1 பகுதி - 23
1
1 பகுதி - 24
1
1 பகுதி - 25
1
1 பகுதி - 26
1
1 பகுதி - 27
1
1 பகுதி - 28
1
1 பகுதி - 29
1
1 பகுதி - 30
1
1 பகுதி - 31
1
1 பகுதி - 32
1
1 பகுதி - 33
1
1 பகுதி - 34
1
1 பகுதி - 35
1
1 பகுதி - 36
1
1 பகுதி - 37
1 பகுதி - 38
1 பகுதி - 39
1 பகுதி - 40
1  
 
  யாவரும் கேளிர்
   
 

யாவரும் கேளிர் - பகுதி -  24 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)

காருக்குள் செல்லா கொலை நடுக்கத்தில் அமர்ந்து இருக்க, கார் ஒட்டுனர் ரெட் இண்டியன் காரைவிட்டு இறங்கி, நின்ற காரின் முன்பு எதிரில் வரும் கார் வெளிச்சத்தில் அவன் நடக்க, செல்லப்பா மேலும் உறைந்து போனான்.

அவன் கண்ட காட்சியில் அந்த ரெட் இண்டியன் கொஞ்சம் நொண்டி நொண்டி நடந்தான். அவனை உற்று நோக்கினான். அவனோ செயற்கை காலுடன் நடந்து கொண்டு இருக்கிறான். அவ்வேலையில் 160 கிலோமீட்டர் வேகத்தில் ஒடிக்கொண்டு இருக்கும் கார்களை நாம் கையில் பணம் இருந்தும் பெரும் ஒசிப்பயணம் செய்ய சாலையில் செல்லும் கார்களை வழி மறிப்போமே, அதே போல் அவனும் ஒவ்வொரு காராக வழி மறிக்கின்றான்.

அவ்வேளையில் செல்லப்பா காரைவிட்டு இறங்கிய சத்தம் கேட்டு திரும்பிய அவன் அவனிடம் ஒடி வந்து காருக்குள் அமரும்படி கட்டளையிட்டான். செல்லப்பாவும் பயந்து கொண்டே காரில் அமர்ந்து கொண்டான். தான் என்ன மொழியில் பேசுகிறோம் என்று அறியாமலே ஏன் காரு நிக்குது என்றான். இவன் என்ன கேள்வி கேட்டான் என்பதை அறியாத அவன் no fuel என்றான். கிளிஞ்சதுபோ பெட்ரோல் இல்லையா என்றான்.காரை யாரும் நிறுத்தாத காரணத்தால் அங்கு இருந்து சற்று தொலைவில் இருக்கும் செக் போஸ்ட்டை நோக்கி நடக்கிறான் ஒட்டுனர்.

அதை கண்ட செல்லப்பா இதுதான் சமயம் என்று காரைவிட்டு இறங்கி கையில் சூட்கேசுடன் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் கார்களின் இடைவெளியில் ரோட்டை கடந்து ஒரு ஆள் மட்டுமே நடந்து செல்லும் நடைபாதைக்கு வந்த அவன் எங்கே செல்ல வேண்டும் என்று தவிக்கையில் சாலையில் ஒரு நிமிடம் அவன் வந்த வாகனம் நிற்பதை தவிர வேறு எந்த வாகனமும் இல்லாமல் சாலை மட்டும் அமைதியாக காட்சி தந்தன. அதை கண்டு மேலும் பயந்து கொண்டு இருக்கும் வேளையில் கனநேரத்தில் அவன் நின்ற நாலா பக்கத்திலிருந்து சயரின் சத்தத்துடன் போலீஸ் கார்களில் வந்து இறங்கிய போலீஸ்காரர்கள் இவனைப் பார்த்து துப்பாக்கியை அவன் மீது குறிபார்த்துக் கொண்டே ஹான்ஸ் அப், ஹான்ஸ் அப் என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் வர அதைக் கண்ட செல்லப்பா தன் கையில் உள்ள சூட்கேசை கீழே போட்டுவிட்டு தனக்கு ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று பயந்து கொண்டே கைகளை மேலே தூக்கினான்.

அதற்குள் அவன் அருகே போலீஸ் வந்து அவன் இரண்டு கைகளிலும் விலங்கிட்டு போலீஸ் வேனுக்குள் தள்ளினர். கண் இமைக்கும் நேரத்தில் பழையபடி அங்கே கார் அதே வேகத்தில் சென்று கொண்டு இருந்தன. செக் போஸ்ட் அருகே இருந்த காவல் நிலையத்தில் உள்ள அறையின் உள்ளே செல்லப்பாவை நிறுத்தி அவனை சுற்றி போலீஸ் நின்று கொண்டு அவனையும் அவன் சூட்கேசையும் சோதனை செய்துவிட்டு அவர்களுக்கு ரோட்டில் ஒருவன் பாமை சூட்கேசில் வைத்துக்கொண்டு இருக்கிறான் என்ற தகவல் பொய்யாகிப் போனது என அறிந்த போலீஸ் அவனை விசாரிக்கும் போது அவன் எதற்காக அங்கே நிற்கிறான் என்பதை அறிந்த, போலிஸ்காரர்கள் இனிமேல் இந்த நாட்டில் இதுபோல் நீங்கள் நடு ரோட்டில் இறங்கி நடக்க கூடாது என்று அறிவுருத்தி ஐந்து நிமிடம் அவனை அமரச்செய்து அவனுக்கு காபி குடிக்க கொடுத்து அவன் குடித்து முடிப்பதற்குள் அவனை ஏற்றிக்கொண்டு வந்த ஒட்டுனரும் அங்கே வந்துவிட்டார்.

அவனும் தான் பெட்ரோல் இல்லாமல் வண்டி ஒடிவந்து நின்ற விஷயத்தை கூறி அவனும் மன்னிப்பு கடிதம் வழங்கிவிட்டு அங்கே வர செல்லப்பாவிடம் போலிஸ் யூ கோ திஸ் கார் ஒன்லி என்று அவன் தான் இறங்கிய அதே காரில் அமர்ந்து செல்ல அவர்கள் பின்னால் ஒரு போலீஸ் கார் பின் தொடர அவன் ச்சே... இதே காருல ஏத்திவிட்டுட்டாங்களே என்று ட்ரைவர் ரியர் மிரர் வியூவை பார்க்க ட்ரைவரோ அதே கருத்த முகம் குருட்டு கண்களுடன் அவனை பார்க்க இப்போது அவனுக்கு அவனை பார்த்து வருத்தம் வந்தது. ஒரு கண் குருடாகியும் ஒரு கால் ஊனமாகியும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்களே என்று இருந்தும் சற்று பயத்துடன் அவனுக்கு பின்னே திரும்பி பார்த்தான் போலிஸ் கார் வந்து கொண்டு இருந்தது......


தொடரும்...

(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)

ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com

அடுத்து...




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.