வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
யாவரும் கேளிர்
1
 
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1 பகுதி - 19
1
1 பகுதி - 20
1
1 பகுதி - 21
1
1 பகுதி - 22
1
1 பகுதி - 23
1
1 பகுதி - 24
1
1 பகுதி - 25
1
1 பகுதி - 26
1
1 பகுதி - 27
1
1 பகுதி - 28
1
1 பகுதி - 29
1
1 பகுதி - 30
1
1 பகுதி - 31
1
1 பகுதி - 32
1
1 பகுதி - 33
1
1 பகுதி - 34
1
1 பகுதி - 35
1
1 பகுதி - 36
1
1 பகுதி - 37
1 பகுதி - 38
1 பகுதி - 39
1 பகுதி - 40
1  
 
  யாவரும் கேளிர்
   
 

யாவரும் கேளிர் - பகுதி -  20 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)

கரைபுரண்டு ஒடும் காட்டாற்று வெள்ளமின்றி நிலவின் வெளிச்சத்தில் வெளிறிய மணலின்மேல் விளாபுடைக்க கள்ளுண்டு ஏப்பத்தின் ஒசை, எட்டுதிசையும் கேட்குமாறு இருவரும் மல்லாந்து படுத்துக்கொண்டு நிலாவை ரசித்துக்கொண்டே உமிழ்நீரை நிலாவை பார்த்து உமிழ, அதுவே பிரிந்து அவர்கள் மீதே மழையாக பொழிய, தான் உமிழ்ந்தநீர் தன்மீதே படுவதை அறியாத அளவுக்கு போதை மயக்கத்தில் தொடர்கின்றனர் அவர்கள் வியாக்யானத்தை...

ஆரான் “தனுக்கொடியண்ணே சாந்தப்பன் மக சோதி தீயா இருப்பாண்னே. அவமேலே எனக்கு எப்பவுமே ஒரு கண்ணுண்ணே. அவள ஒரு நா வர்ரியான்னு கேட்டேண்ணே தனுக்கொடி குறுக்கிட்டு, ஏலே அவ ரொம்ப ராங்கு புடுச்சவளேடா? எப்படிடா..., வந்தா அவ இஷ்டம் வர்லேன்னா எனக்கு நஷ்டமில்லேன்னுதாண்ணே..... நீங்க சொன்னது கரெக்டண்ணே. அவ புடிச்சா பாருங்க என்னைய! தேய்ஞ்சுபோன வெளக்குமாத்தாள பின்னி எடுத்துட்டாண்ணே. நல்லவேல அந்த சமயத்துல யாரும் என்ன பாக்கல . அவகிட்ட இருந்து தப்பிச்சுதானே உங்க டீ கடைக்கு வந்தேன்.

ஆனால் நல்ல ஐடியா கொடுத்தீங்கண்ணே அன்னைக்கி. இன்னைக்கி ஒரு பய அவளகேட்டு இந்த ஊருக்குள்ள வர்ரானா பாரு. தனுக்கொடி, டேய் கொளம்,கொளம்பியிருக்கும் போதுதாண்டா கல்ல போடனும். நானும் ஒரு நா அவள முயற்சி பண்ணினேண்டா... எம் மூஞ்சில துப்பாத கொறதாண்டா. அந்த சமயத்துலதான் நீயும் வந்தே.. நானும் சூடு பறக்க டீ ஆத்துனேன். அந்த நேரத்துல நம்மால பறந்த பொய் சேதிக்கேத்தாப்ள அவளும் பிரசிடெண்ட் மகென் கூட பேசிகிட்டு இருந்தா. அவ ஒருவாட்டி அவன் கூட பேசப்போயி இப்ப என்னடான்னா அவ அப்பென் ஊருவாய அடைக்க நாய் படாதபாடுபடுறான். பதிவிரதை பார்வதியாய் இருக்கிறவ இன்னைக்கு பலர்பேர் பார்வைக்கு ரதியா இருக்குறா.என்றான்.

ஆரான்.. இதே நெலமை நீடுச்சுச்சுன்னா கடைசியில அவள எவனும் கட்டாம ஏ....ன் கிட்டதாண்ணே வரனும். கவலையேபடாதடா நாம அவிழ்த்துவிட்ட பொய்யி ஜல்லிக்கட்டு காளைமாறி ஊரை சுத்தி சுத்திக்கிட்டுவருது. “அண்ணே ஜல்லிக்கட்டுன்னு ஞாபகப்படுத்தாதேண்ணே அத நெனச்சாலே பயமா இருக்கு (என்ற போது பனிபூண்டார் அவர்கள் தலைமாட்டின் அருகே அவர்கள் பார்த்துக்கொண்டு இருந்த நிலவை மறைத்துக்கொண்டு நின்றார். அவர்களோ போதை மயக்கத்தில் நிலவு மறைந்து இருளும் நிறைந்துவிட்டது என்று எண்ணி...) அண்ணெ வாடிவாசல்ல அந்தபேய்கூட்டத்துல அவனை கண்டுபிடிக்கவே படாதபாடு பட்டு அவனைபாத்தப்போ சேப்டியா ஒக்காந்து சைசா இருந்தவனெ, நைசா தள்ளுனப்போ என்ன கணக்கா மாட்டு மேலவிழுந்து கொண்டரொவெ புடிச்சுக்கிட்ட...னே அப்ப வாடிவாசல்ல இருந்த மொத்தகூட்டமும் மாட்ட அடக்க வந்த மாவீரன்னு அடிச்சா....ம் பாருகிலாப்பு அந்த கேப்புலதான் கெடாவ ... ...... மூஞ்சிய மறைச்சுக்கிட்டு குத்தும்போது....மாடு ஒரு துல்லு துல்லுச்சு அப்ப மிஸ்சாயிட்டாண்ணே (தனுக்கொடி குருக்கிட்டு) அதுமட்டுமா அதான் ஒம் முஞ்சிய அவெண் பாத்தானே.... நீ மறச்ச லெட்சனம் அதுலே தெரிஞ்சுதே. நல்ல வேலெண்ணே நீங்க மின்னலாவந்து அவன் மாட்டு கொண்டெருவுமேலே இருக்கும் போதே ஒரே.....ரே.. போடா போட்டீங்க. பின்னே அப்பதானே மாடு முட்டுனதாலதான் செத்தான்னு எல்லாரும் நம்புனாங்க...ஆனா அவென் கடைசியில வயித்துல பாஞ்ச கத்திய புடிச்சுக்கிட்டு ஏ...ண்ணெ குத்தினீங்கன்னு...... கேட்டானே... பாவம்ணே அவென்...

பாவபுண்ணியம் பாத்தா நாம வாழமுடியாதுடா. அண்ணே பணிபூண்டாருக்கு தெரிஞ்சா ஒன்னயும், என்னெயும் விடமாட்டாருண்ணே... தெரிஞ்சாதானே...பல நா திருடன் ஒரு நா மாட்டுவாங்கன்னு சொல்லுவாங்கெண்ணே. அதுக்குள்ள கதையையே முடிச்சுட்டா. “எப்படிண்ணே” கெழத்துகிட்ட நாளைக்கு சொத்த எழுதி கேக்கப் போறேன் கொடுத்தா பொலச்சான், இல்லேன்னா அவெனும் பொணம்தான், என்ற சொற்களை பனிபூண்டார் கேட்கிற வேளையில் தனுக்கொடி ஆரானிடம் நிலா வெளிச்சத்துல மணியென்னான்னு பாரேன்டா என்றபோது சற்று போதை குரைந்த ஆரான் பனிபூன்டார் மறைத்துக் கொண்டிருக்கும் நிலா வெளிச்சத்தை தேட அங்கே யாரோ நிற்பதை அறிந்த ஆரான் யாரது என்றான்.

அவ்வேலையில் ஆரான் அணிந்து இருந்த கடிகாரத்தில் உள்ள ஓரு வினாடிசத்தம் ஒலித்து அடங்குவதற்குள் பனிபூன்டார் மதம் கொண்ட யானைபோல், ஒன்றாக மல்லாந்து படுத்து இருந்த அவர்கள் மீது வேங்கைபோல் பாய்ந்து அமர்ந்தார். அதன் தொடக்கமாக கண் இமைக்கும் நேரத்தில் தன் முதுகுபுறமாக வைத்து இருந்த ராம் நாட்டு அறுவாளை எடுக்கும்போது அவர்கள் இருவரும் தங்கள் மீது அமர்ந்து உள்ளது யார் என்று அறிவதற்குள் தன் கையிலிருந்த அறுவாளால் இருவர் தலைகளையும் சதக்... சதக்... என்ற வெட்டிய சத்தத்தில் வாலிபால் பந்தாக பறந்தன..அரிது அரிது மானிடரா பிறத்தல் அரிது கூன் குருடு செவுடு பேடுனீங்கி பிறத்தல் அரிது, என்ற நம் முன்னோர் மொழிபோல் அறிய மானிடாராய் பிறந்து அற்ப ஆசையால் சொற்ப காலத்தை இழந்து, காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும்தண்ணீர் சத்தம்கேட்டு ஊர்க்குருவி ஊரை கத்திஎழுப்பிய காலம்போய் நிலா வெளிச்சத்தில் வரண்ட மணல் பளிச்சிட, ஊர் அடங்கிய நடுச்சாம வேலையில், அந்தப்பொணம் அணிந்து இருந்த கடிகாரத்தின் வினாடி ஒலி மட்டும், பொணத்துக்கு முன் இங்கே ஜடத்தில் இருந்தேன் என்று உரைத்துக்கொண்டே..... இருந்தன!...

தொடரும்...

(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)

ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com

அடுத்து...




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.