வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பார்வைக்கு வந்தவை
1
 
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  பார்வைக்கு வந்தவை
   
 

   அச்சுப்பிழை

 

பழைய அச்சகத்துக்கு இருவர் வந்து கருமாதிப்பத்திரிகை அடிக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். ஏன் இந்த அச்சகத்தைத் தேர்வு செய்தீர்கள் என்று இளைஞன் கேட்பதற்கு முதியவர்: இந்த அச்சகத்தில்தான் இரண்டு தலைமுறையாக நாங்கள் கொடுத்து வருகிறோம் என்கிறார், திருமணப் பத்திரிகைக்கு அச்சுக் கோர்த்துக்கொண்டே இருக்கும் அவர் நினைவு பழமைக்
குச் செல்கிறது.

இவர் அப்போது இளைஞனாக, இதே அச்சகத்தில் வேலைசெய்துகொண்டிருக்கிறார், அச்சகத்து உரிமை யாளர் இளைஞனிடம் வேலையைக் கொடுத்து முடித்து வைக்கச் சொல்லிவிட்டுச் செல்கிறார். இளைஞன் ஒவ்வொரு எழுத்தாக அச்சு கோர்க்கிறான். மணமகனின் பெயருக்குப் பதிலாகத் தன் பெயரைக் கோர்த்துப் பார்த்தால் என்ன? என்று யோசித்து அப்படியே கோர்த்து அடித்தும் விடுகிறான். உரிமையாளர் வந்து பார்த்துவிட்டு,
இளைஞனுக்கு 'கல்யாண ஆசை' வந்துவிட்டது என்று நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரும் செய்து வைத்துவிடலாமே என்று கூற, இவரும் சம்மதிக்கிறார்.

உரிமையாளர் இளைஞனிடம் வந்து பெண்பார்க்க செல்லலாம் என்கிறார் இவனும் சரி என்கிறான். அடுத்த காட்சியில் வயிற்றுவலியால் துடிக்கிறான். மருத்துவமனையில் இருக்கி றான். டாக்டர் சொல்கிறார்: இனி தாம்பத்ய வாழ்வில் ஈடுபடக்கூடாது என்கிறார். அடுத்த காட்சியில் முத்லாளி பெண்பார்க்கப் போகலாம் என்கிறார். இவன் திரும்பி நின்று அழுகிறான் என்பதோடு படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

இந்தக் குறும்படத்திற்கான மூலக்கதை ஜெயகாந்தன் எழுதிய 'டிரெடில்' என்ற சிறுகதையாகும். அச்சகத்தை ஒட்டியே கதை செல்வதால் குறும்படத்திற்கான பெயர் போடும்போதுகூட டிரெடில் இயங்க, இயங்க ஒவ்வொரு பெயரும் தோன்றுவதைப் புதுமையாக செய்திருக்கிறார். பழைய அச்சகம் எனும்போது அந்த அமைப்பு முறை எப்படி இருக்குமோ அதனை நம் கண்முன் கொண்டு வந்திருக் கிறார் இயக்குநர். மின்சார முறையில் இயங்கும் ஆப்செட் அச்சு இயந்திர்ங்கள் வந்துவிட்டதால் 80களுக்கு முன் டிரெடில் இருந்ததே இப்போது பலருக்கு மறந்து போயிருக் கும். அந்த பழைய மிக்ஷ¢னைக் கண்டுபிடித்து தன் கதைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இயக்குந்ருக்கு ஒரு சபாக்ஷ் போடலாம்.

டிரெடில் மிக்ஷ¢னை இயக்குவது எப்படி என்றால் இடது காலால் அழுத்த, அது பல்சக்கரத்தில் இயக்கத்தை உண்டு பண்ணும். அதன் இயக்கத்திற்கு ஏற்ப கை தாளை வைத்து, வைத்து எடுக்க வேண்டும். இதனை நடிகர்கள் நன்கு பழகி நடித்திருந்த விதம் யதார்த்தமாக இருந்தது. கேமரா மிக்ஷ¢ன் இயக்கத்தைப் பச்வேறு க்ஷ¡ட்டுகளில் நன்கு விளக்கியது. ஒளி அமைப்பு முறையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக இருக்கிறது. எல்லாவற்றையும் ஒருங்கி ணைத்திருந்த இயக்குநர் நம் பாராட்டுக்கு உரியவராகிறார்.

 
 

 

 
 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  << முன் பக்கம்  | 1 2                                                                                                                         அடுத்தப் பக்கம் >>

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.