புதியவர்கள்... இந்த சமுதாயத்தில் நாள்தோறும் ஒவ்வொரு துறையிலும் சில பல புதியவர்கள் தோன்றியவண்ணமே உள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பான்மையோர் வெளி உலகிற்கு சரி வர தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதில்லை.. அல்லது சமுதாயம் அவர்களை கண்டு கொள்வதில்லை. இது குறும்பட ஆவணப்படத் துறைக்கும், இலக்கியத் துறைக்கும் பொருந்தும். ஏற்கனவே இங்கு படைப்பாளிகள் இணைப்பு இருக்கும்போது இந்த இணைப்பு தேவை இல்லாதது தோன்றினாலும், படைப்பாளிகள் இணைப்பில் குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களின் நேர்காணல் மட்டுமே இடம்பெறும். புதியவர்கள் எனும் இந்த இணைப்பில், ஆவணப்பட இயக்குனர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் என அனைத்து துறையிலும் தோன்றும் புதியவர்களின் நேர்காணலும் இடம்பெறும். மேலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தகவல்களும் இந்த இணைப்பில் இடம்பெறும்.
நீங்கள் எந்தத் துறையில் புதியவர்களாக இருந்தாலும் உங்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் திறமையை வெளிக்கொண்டு வர தமிழ் ஸ்டுடியோ தன்னால் இயன்ற உதவிகளை செய்யும் என்பதில் ஒருபோதும் ஐயம் கொள்ளாதீர். உங்களை பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ள..
முதலாவதாக தனது கல்லூரிப் பருவத்திலேயே "எனது நூலகத்தின கதை" எனும் குறும்படத்தை இயக்கி அதன் மூலம் குறும்பட துறையில் கால் பதித்திருக்கும் திரு. க. ராஜ்குமார், அவர்களின் நேர்காணல் இடம் பெற்றுள்ளது.
|