நிழல் நடத்தும் 17 வது பயிற்சிப் பட்டறை. ( கிருஷ்ணகிரி )
நாள்: 25-12-2009 முதல் 31-08-2009 வரை.
இடம்: கிருஷ்ணகிரி
கட்டணம்: தொலைபேசி வாயிலாக அறிந்துக் கொள்ளவும்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் கிருஷ்ணகிரியில் நிழல் நடத்தும் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி பட்டறையில் சேர விரும்பும் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக் கல்வியை, கிராமப்புற மாணவர்கள் - இளைஞர்கள் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு முதலியவை கற்றுத் தரப்படுகிறது. இறுதிநாள் மாணவர்களே குறும்படம் எடுக்க பயிற்சி தருகின்றனர். உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு.
பட்டறையில் 50 குறும்பட / ஆவணப்படங்களும், உலகப் புகழ் பெற்ற ஐந்து படங்களும் திரையிடப்படும். பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்நிகழ்வில் பேராண்மை திரைப்பட இயக்குனர் திரு. ஜனநாதன் அவர்கள் கலந்துக் கொள்கிறார். மேலும் பல திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.
தொடர்புக்கு: ப. திருநாவுக்கரசு 9444484868.
முகவரி:
12/28 இராணி அண்ணா நகர், சென்னை 600078
|