நிழல் மற்றும் சினிமா ரசனை திரைப்பட சங்கம் இணைந்து நடத்தும் பயிற்சிப் பட்டறை.
நாள்: 09-08-2009 முதல் 15-08-2009 வரை.
இடம்: சிதம்பரம்
கட்டணம்: தொலைபேசி வாயிலாக அறிந்துக் கொள்ளவும்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தில் நிழல் மற்றும் சினிமா ரசனை திரைப்பட சங்கம் இணைந்து நடத்தும் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி தொடங்கி பதினைந்தாம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி பட்டறையில் சேர விரும்பும் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக் கல்வியை, கிராமப்புற மாணவர்கள் - இளைஞர்கள் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு முதலியவை கற்றுத் தரப்படுகிறது. இறுதிநாள் மாணவர்களே குறும்படம் எடுக்க பயிற்சி தருகின்றனர். உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு.
பாலு மணிவண்ணன், ராஜ்குமார், ப. திருநாவுக்கரசு, பாரதிவாசன், லிங்காஸ் செழியன், சுரேஷ்வரன், தம்பி சோழன், பொன்குமார் மற்றும் திரைப்பட இயக்குனர்களும், கேமராமேன்களும் கலந்துக் கொண்டு பயிற்சி தர இருக்கின்றனர். கடைசி நாள் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் ஜனநாதன் பாராட்டி சான்றிதழ் வழங்க இருக்கிறார்.
பட்டறையில் 50 குறும்பட / ஆவணப்படங்களும், உலகப் புகழ் பெற்ற ஐந்து படங்களும் திரையிடப்படும். பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு: ப. திருநாவுக்கரசு 9444484868.
முகவரி:
12/28 இராணி அண்ணா நகர், சென்னை 600078
|