நிழல் நடத்தும் குறும்பட / ஆவணப்படப் பயிற்சிப் பட்டறை
பயிற்சி தொடங்கும் நாள்: மே, 25 -31 (ஏழு நாட்கள்) 2009
இடம்: கன்னியாகுமரி
நிழல் இதழ் தொடர்ந்து நடத்தி வரும் குறும்பட / ஆவணப்படப் பட்டறை இந்த முறை கன்னியாகுமரியில் மே மாதம் 25 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. பட்டறையில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் / இளைஞர்கள், மற்றும் ஆர்வமுடையவர்கள் நிழல் அன்புடன் வரவேற்கிறது.
 |
இப்பட்டறையில் நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு சொல்லித்தரப்படுகிறது. வகுப்பின் இறுதி நாளன்று மாணவர்களே ஒரு குறும்படம் எடுத்து, படத்தொகுப்பு செய்து, திரை இடலாம். சிறந்த படைப்பிற்கு விருது வழங்கி பாராட்டப்படும்.
வழமை போல் இம்முறையும், திரைப்படத் துறையை சார்ந்த புகழ் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குனர்களைக் கொண்டு கருத்தரங்கும் நடத்தப் பட உள்ளது. பயிற்சி தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும். |
(குறிப்பு: இந்த குறும்படப் பயிற்சிப் பட்டறை 'நிழல்' பத்திரிக்கை நடத்தும் பயிற்சிப் பட்டறை. எனவே அது சார்ந்த தகவல்கள், குறிப்புகளை பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் ஆசிரியரின் தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும். இதற்கும் தமிழ் ஸ்டுடியோ.காமிற்கும் எவ்விதத் தொடர்பு இல்லை. பட்டறைகள் பற்றியத் தகவல்கள் வெளியிடுவதன் நோக்கம் ஆர்வலர்கள் முறையான பயிற்சி பெற்று தொழில்நுட்ப ரீதியில் சிறந்த குறும்படங்கள் எடுக்க வேண்டும் என்பதே.)
தொடர்புக்கு,
ப. திருநாவுக்கரசு.
கைபேசி : 9444484868
|