கிரியேட்டர்ஸ் டீம் ப்ரொடக்சன் கம்பெனி நடத்தும் குறும்படப் பயிற்சி பட்டறை
கட்டணம்: 2000/- (உணவு, தங்குமிடம், பயிற்சி உட்பட)
பயிற்சி தொடங்கும் நாள்: செப்டம்பர் 27, 2008
இடம்: மன்னார்குடி
கிரியேட்டர்ஸ் டீம் ப்ரொடக்சன் கம்பெனி, மன்னார்குடியில் குறும்படப் பயிற்சி பட்டறையை நடத்த உள்ளது. மன்னார்குடி மதுக்கூர் சாலையில் உள்ள அசோகா திருமண அரங்கில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை தொடர்ந்து ஆறு நாட்கள் (எழுபது மணி நேரம்) இப்பயிற்சி பட்டறை நடக்க உள்ளது.
 |
இதில் குறும்படம் மற்றும் திரைப்படம் திரையிடப்பட்டு, அதில் உள்ள நுணுக்கங்கள் குறித்து புதிய படைப்பாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு மேலும் குறும்பட பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
முன்னணி திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்பயிற்சியை வழங்க உள்ளனர். தொழில்நுட்ப பயிற்சி, உணவு, தாங்கும் இடம், உட்பட அனைத்துக்கும் பயிற்சிக் கட்டணம் ரூபாய் 2000/- ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
|
குறும்பட மற்றும் திரைப்படத் துறையில் ஆர்வம் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் நல்ல களம் அமைத்து தருவதே எங்கள் நோக்கம். உங்கள் படைப்புத் திறனோடு சேர்த்து எங்கள் தொழிநுட்ப பயிற்சியையும் சேர்த்து குறும்பட, திரைப்படத் துறையில் தடம் பதிக்க வாருங்கள்...
முன்பதிவு மற்றும் தொடர்புக்கு:
கிரியேட்டர்ஸ் டீம் ப்ரொடக்சன் கம்பெனி
20 எம்.ஜி. ஆர். நகர்,
மன்னார்குடி.
தொலைபேசி எண்கள்: 914367222683
செல்பேசி: 9944701460
|