வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பதிவுகள்  
1
 
1 ஓர் பார்வை
1
1 ஆவணப்படங்கள்
1
1 குறும்படங்கள்
1
1 பட்டியல் - 1
1
1 பட்டியல் - 2
1
1 பட்டியல் - 3
1
1 பட்டியல் - 4
1
1 நெய்வேலி போட்டி - 1
1
1 நெய்வேலி போட்டி - 2
1
1 சேலம் பட்டறை
1
1 பட்டியல்
1
1  
1
1  
 
  குறும்படங்கள்
   
 

இந்த வாரம் குறும்படங்களைப் பற்றிப் பார்ப்போம்:

குறும்படங்களில் முதலிடத்தைப் பெறுவது முரளி மனோகரின் 'கர்ண மோட்சம்' இப்படம் தமிழக அரசின் மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்றது. பாலாஜியின் 'வெளிச்சம்' ; பைசலின் 'ஆழ்த்தூக்கம்' ; அபிலாஷவின் 'ஒரே ஒரு நாள்' ; பெரோஸ் அகமதுவின் 'பிட்' போன்றவை சிறப்பான படங்கள். இதன் விரிவை நிழல் இதழில் பார்க்கவும். (மே - ஜூன் ௨00௮ இதழ்).

குறும்படப் போட்டி மற்றும் விழா:

தமிழ்நாடு குறும்பட / ஆவணப்பட படைப்பாளியின் சங்கம் மற்றும் நிழல் இதழும் தான் முதன் முதலில் குறும்படங்களுக்கு விருது மட்டுல்லாமல் பரிசுத் தொகையினையும் தர வேண்டும் என்கிற முறையை ஏற்படுத்தினர். ஷானாஸ் இயக்கிய 'பிறப்புரிமை' என்கிற படத்திற்கு மட்டும் ரூபாய் 25,000 பரிசினை நிழல் அளித்தது. இப்படம் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப் பட்ட படமாகும்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியை        நடத்துவதுடன்    குறும் 

படங்களுக்கும் ரூபாய் 30,000 பரிசளிக்கிறது. இப்பரிசினை வெளிச்சம், ஆழத்தூக்கம், மக்கப் மங்கம்மா இன்னும் சில படங்கள் பெற்றன.

தமிழ்நாடு குறும்பட / ஆவணப்பட படைப்பாளிகள் சங்கம் ஆண்டுதோறும் ரூபாய் 50,000 பரிசினை அளித்துவருகிறது. 27 படங்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகின்றன. நிழல் இதழும், ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்ன் தமிழ் சங்கமும் ஆண்டுதோறும் ரூபாய் 17,500 பரிசளித்து வருகின்றனர். சென்ற ஆண்டு ரூபனின் 'சுதந்திரம்' ; அட்சயபாத்திரம்; சரவணின் தோல் கூத்து படங்களுக்கு கிடைத்தது.

மும்பையில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச குறும்பட விழாவில் தமிழகத்தின் லீனா மணிமேகலையின் 'தேவதைகள்' படத்திற்கு ரூபாய் 2,50,000 பரிசு கிடைத்துள்ளது.

குறும்படங்கள் விற்பனை:

தமிழகத்தில் குறும்படம் / ஆவணப்படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அவற்றை எவ்வாறு விற்பது என்ற வகைதெரியாமல் இருந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் நிழல் இதழும் - திருப்பூர் பதியமும் இணைந்து, திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ஒரு கடையை எடுத்து விற்பனை செய்ய முன்வந்தது. அதில் ரூபாய் 30,000 விற்பனை ஆனது. இதுதான் தமிழகத்தில் குறும்பட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த முதல் வருவாய் என்பதால் இங்கு பதிவு செய்யபடுகிறது.

குறும்படப் பட்டறை:

திரைப்படக் கல்வி என்பது சாதாரண தமிழ் படித்த மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. அதைப் போக்குவதற்க்காக நிழல் இதழும் தமிழ்நாடு குறும்பட / ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும் இணைந்து தமிழகத்தின் மாவட்டங்கள் தோறும் குறும்பட பயிற்சிப் பட்டறையினை ஒரு வார காலம் நடத்தி வருகிறது.

எழுபது மணிநேரத்தில் ஒலிப்பதிவு, திரைக்கதை, நடிப்பு, எடிட்டிங், கற்பிக்கப்பட்டு அவர்களையே ஒரு படம் எடுக்க வைத்து எடிட் செய்து அவர்களிடமே தந்து விடுகிறது. இதன் மூலம் கிராமப்புற ஏழை மாணவர்கள் / இளைஞர்கள் பயனடைந்து உள்ளார்கள். 2007ஆம் ஆண்டு தருமபுரி அருகிலுள்ள வெள்ளிச்சந்தை; இராமநாதபுரம்; திருச்சி - காட்டூர்; திருநெல்வேலி - ஆழ்வார்குறிச்சி; சிவகங்கை முதலிய இடங்களில் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு இடங்களை நடைபெறப் போகிறது.

2007 ஆம் ஆண்டு வெளிவந்த குறும்படங்கள் / ஆவணப்படங்களின் பட்டியலை அடுத்த வாரம் பார்ப்போம்...
                                                                                                                                                                 பதிவுகள் படரும்...

                                                                                                                                             அடுத்து

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.